02/08/2018

திருவண்ணாமலை - செங்கம் விதைப் பண்ணை மூடல். தடுக்கப்பட வேண்டும்...


சிடெர்லைட் ஆலையை மூடியதாக அறிவித்த பொழுது ஆலைக்கு தொடர்பில்லாத பலர் பதறினர், குறிப்பாக தரகர் சாமியார்கள், வாடகை கட்ட வக்கில்லாத நடிகர்கள் போன்ற பெருமுதலாளிகளின் முகவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் விதைப் பண்ணையை மத்திய அரசு மூடி உள்ளது. இப்பண்ணை தொடர்ந்து இயங்க தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் வேலை இழக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் குறித்தோ, விதைப் பயண்பாடு அடைந்து வந்த உழவர்களின் இழப்பு குறித்தோ பேசவோ அறிந்து கொள்ளவோ பலருக்கு நேரமில்லை.

விதைப் பண்ணையை மூடி வெளிநாட்டு விதைகளை விற்க ஒப்பந்தம் போட்டுள்ளனர்கள் போல.

நம் நாட்டு உற்பத்தி எல்லாவற்றையும் மூடிவிட்டு வெளிநாட்டு முதலாளிகளிடம் பணத்தை வாங்கி இறக்குமதியை அனுமதிப்பது தான் நவீன இந்தியா கண்டுள்ள வளர்ச்சி.

அரசின் மீதும் அரசு வழங்க வேண்டிய சேவைத்துறைகள் மீதும் வெறுப்பை உருவாக்கி தனியாரே சிறந்தது என்ற சிந்தனையை வளர்ப்பதில் உலகம் முழுக்க பெருமுதலாளிகள் மிக கெட்டிக்காரர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.