22/09/2018

திருட்டு திமுக வின் பிராடு வேலைகள்...


அபகரித்து கொலை செய்து விடுவோம் என மிரட்டும் தி.மு.க பிரமுகர், கண்ணிருடன் விவசாய குடும்பம் காவல் துறையை நாடும் அவலம்! – தொடரும் தி.மு.க-வினரின் அட்டூழியங்கள்...

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் செய்து வரும் வன்முறை வெறியாட்டம் கட்டுக்கடங்காமல் போய் கொண்டு இருக்கிறது. மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றது முதல் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரியாணி கடை துவங்கி பஜ்ஜி கடை வரை தி.மு.க குண்டர்கள் செய்யும் அட்டூழியங்களால் தமிழக மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இதோ அடுத்த பஞ்சாயத்து! “7 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு தொடர்பாக திருச்சி போலீஸ் தி.மு.க பிரமுகரிடம் விசாரணை!” என துவங்குகிறது இந்நாள்.

திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு தொடர்பாக தி.மு.க பிரமுகரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஶ்ரீரங்கம் தாலுகா, சத்திரப்பட்டி என்னும் பெரியநாயகி சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் செல்லக்குட்டி(வயது 55). இவர் ஒரு விவசாயி. இவர் திருச்சி காவல்துறை கண்கணிப்பாளர் அலுவலகத்தில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

‘நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் தாங்கள் வாங்கிய நிலத்தில் தி.மு.க பிரமுகர் ஒருவர் தென்னை, மாமரம் மற்றும் வாழை மரங்களை வைத்து , அந்த இடங்களை ஆக்கிரமித்து தகராறு செய்து வருகிறார். எங்கள் இடங்களை ஒப்படைத்து விடுங்கள் என்று கூறியதற்கு அடியாட்களை வைத்து கொண்டு எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார்.

அசல் பத்திரம், மூலப்பத்திரம், பட்டா எல்லாம் எங்கள் பேரில் தான் உள்ளது. இந்த மனுவை ஏற்று, மேற்படி நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், வழக்குப் பதிவு செய்து எங்களுக்கு சொந்தமான இடத்தினை எங்கள் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த சொத்தின் மதிப்பு மொத்தம் ரூபாய் 7 லட்சம். இந்த மனு குறித்து விசாரிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார், திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய போலீஸாருக்கு இப்புகார் மனு குறித்து விசாரணை மேற்கொள்ளும் படி தகவல் அனுப்பி உள்ளனர். அதன்படி, ராம்ஜிநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.