05/09/2018

கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்க கூடாது ஏன்?


ஆண் பெண் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைப்போம். அதாவது இரண்டு புருவங்களுக்கு மத்தியல் நாம் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது . அதை தொட்டு தூண்டும் பொருட்டும் அங்கே உருவாகும் வெப்பதை கட்டுபடுத்தும் பொருட்டும் ஆண் பெண் எல்லோரும் அங்கே பொட்டு வைபோம்.

இது எல்லோரும் கடைபிடிக்கும் சம்ப்பரதாய முறை , ஆனால் திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பிறககு இரண்டாவதாக ஒரு பொட்டு வைப்பார்கள் அது தான் நடு நெற்றி வகுடு.

இந்த இடத்தில தினமும் பெண்கள் தொட்டு, பொட்டு வைப்பதால், அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. சில சுரபிகள் தூண்டபடுகிறது.

பெண்களுக்கு நெற்றி வகுடுவில் தினமும் தொடுவதால் அவர்களுக்கு அடி வயற்றில் பாலியல் சுரப்பி நன்கு தூண்டபடுகிறது. அதே போல் கர்ப்பபையும் வலு பெறுகிறது .

திருமணத்திற்கு பின் பெண்களுக்கு உடலுறவில் நல்ல ஆர்வமும் கர்ப்பபை வலு பெறவேண்டும் என்பதற்காக தான் நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைதுள்ளனர்.

மேலும் சீமந்தம் , ஐந்து அல்லது எழாவது மாதம் வளைகாப்பு வைத்து செய்யும் போது எல்லோரையும் கூப்பிட்டு நெற்றி வகுடுவில் பொட்டு வைத்து தொட்டு ஆசிர்வாதம் செய்ய சொல்கிறார்கள், இதனால் கர்பப்பை வலுபெறுகிறது. கர்பப்பை வலுபெற்றால் குறை பிரசவம் உண்டாகாது . நிறை மாதமாக இருக்கும் போது சுகபிரசவம் ஏற்படும்.

ஆனால் கணவரை இழந்துவிட்ட பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்ட படாமல் இருபதற்காக கணவரை இழந்த பெண்கள் நெற்றி வகுடுவில் உள்ள பொட்டை வைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்றனர்.

ஆனால் பின்னால் வந்தவர்கள் அந்த விஷயம் தெரியாமல் பொட்டே வைக்க கூடாது என்று மாற்றி விட்டனர்.

ஆனால் இருபுருவ மத்தியில் உள்ள பொட்டு ஆண் பெண் எல்லோரும் எல்லா நாளும் வைக்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.