17/09/2018

கர்ப்பிணி பெண்ணை தோளி சுமந்து சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்த கான்ஸ்டபிள்.. குவியும் பாராட்டு...


ஆக்ராவில் பணி புரியும் ரயில்வே போலீசார், சோனு குமார் ரஜோரா, மதுரா ரயில் நிலையத்தில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர், பிரசவ வலியால் துடித்து உள்ளார். அப்போது அங்கிருந்து உடனடியாக அவசர உதவிக்கு போன் செய்யப்பட்டது.

இருப்பினும் சரியான நேரத்தில் அந்த இடத்திற்கு அம்புலன்ஸ் வர முடியவில்லை என்பதாலும், ஸ்ரெட்சர் கிடைக்காத காரணத்தினாலும், அங்கிருந்த போலீசார் சோனு, நிலைமையை புரிந்துக்கொண்டு கர்ப்பிணி பெண்ணை தன் தோளில் சுமந்தவாறு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மருத்துவமனைக்கு அழைத்த சென்ற உடனே அந்த பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்து உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பொலிசார் சோனு, "இது என்னுடைய கடமை..கர்ப்பிணி பெண்ணின் நிலைமையை தெரிந்துக் கொண்டேன்.. உடனடியாக 108 மற்றும் 102 எண்ணிற்கு அழைத்தேன்..

ஆனால் அருகில் எந்த ஆம்புலன்சும் கிடைக்கவில்லை.. அதுமட்டும் இல்லாமல் அந்த தம்பதிக்கு இந்த இடம் புதியது என்பதால் அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட தெரியவில்லை... அருகில் இருந்தவர் கூட உதவிக்கு வரவில்லை..எனவே இது என்னுடைய கடமையாக கருதுகிறேன் என அவர்தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்தால், ரயில்வே பொலீசாருக்கு நாடு முழுவதும் பெரும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.