09/09/2018

சிந்து சமவெளி நாகரிக உண்மைகள்...


சிந்து சமவெளி நாகரிகப் பகுதியான ராக்கி கரி (Rakhigarhi) அகழ்வாராய்ச்சி பகுதியில் 4500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மனித எலும்பின் மரபணு, தமிழ்நாட்டின் தற்போதைய நீலகிரியில் வாழும் தமிழர் பழங்குடியினரான இருளர் மரபணுவோடு ஒத்துப்போகிறது. ஆரியர்களின் மரபணுவோடு ஒத்துப்போகவில்லை என்கிறது சமீபத்திய ஆய்வு.

சிந்து சமவெளி, ஆரியர்களின் வேத காலத்திற்கு முந்தையது என்பதும், அவர்கள் ஆரம்பகால தமிழ் மொழி பேசி இருக்கக்கூடும் என்பதும் அறிவியல் பூர்வமாகிறது. இஸ்லாமியம், கிறித்துவம் எவ்வாறு அந்நிய மதங்கள் என நூற்றாண்டு காலமாக இந்துத்துவா வாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறதோ, அவ்வாறே வேத மதம் எனப்படும் ஹிந்து(இந்து) மதமும் அந்நிய மதமே! ஆரியர்களும் புலம்பெயர்ந்தவர்களே!

மூதாதையர்களையும், முன்னவர் நினைவான இடுகற்களையும், மரங்களையும், இயற்கையையும் மட்டுமே வணங்கும் பழங்குடியினர் எந்த மதத்தையும் சாதியையும் சாராதவர்கள், தமிழர்கள். தமிழருக்கும் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் எதற்கும் தொடர்பு இல்லை அனைத்து மதங்களுமே நம்மிடம் புகுத்தப்பட்டவை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.