06/09/2018

வேற்றுகிரகவாசி உண்மைகள்...


ஒரு மனிதனின் மூளையில் உருவாகிய சிந்தனையை இன்னொரு மனிதனால் எந்தவித மறுப்புமின்றி ஏற்றுக் கொள்ளகூடிய கருத்து எதுவோ அதுவே உண்மையான கருத்து.

இப்படி உருவான கருத்து ஒரு இடத்திலிருந்து மூன்றாவது மனிதனுக்கு எப்படி பரவுகிறது?

ஏற்கனவே பரவிவிட்டிருக்கும் கருத்துக்களை எதன் முலம் அறிவது?

அது பரவும் போது விட்டுச்சென்ற அடையாளங்கள் மூலமே அறிய முடிகிறது.

பாபிலோனியர்களும், சுமேரியர்களும் சாஸ்திரங்களிலே நம்பிக்கையுள்ளவர்கள், அவர்கள் நட்சத்திரங்களை  கணித்து கடவுளின் செயல் என்று செயற்பட்டார்கள். இவர்களின் அநேக தெய்வங்கள் வானத்திலுள்ள நட்சத்திர தொகுதியிலிருந்து வந்தவர்களே.

தியாமத்: வலுசர்ப்ப தெய்வம் (Reptilians).

அனு: மேல் வானத்தின் தெய்வம்.

பிரபஞ்சம் விளங்காத புதிர்களாகவே இருந்தது. எனினும் இப்புதிர்களுக்கு விடையாக விண்ணுக்கு அனு தெய்வமானார்.

புதிய தெய்வங்களான அனுவும் தியாமத்தும் பிரபஞ்சத்தை இயக்கினார்கள்.

அரசன் கில்காமேஷ். இவன் மூன்றில் ஒரு பகுதி கடவுளும் ஒரு பகுதி மனிதனுமாவான்.

இவனின் கதையை விளக்கும் கில்காமேஷ் பட்டையங்களில் இவர்களின் கடவுள்கள் பிளீயட்ஸ் நட்சத்திர தொகுதியிலிருந்து வந்த ஊர்வன கடவுளர்களே என்றுதான் வெளிப்படுத்துகிறது.

ஊர்வன இனத்தவர்கள்(Reptaliens)
இருப்பிடங்கள் பிளீயட்ஸ் எனப்படும் நட்சத்திரத் தொகுதிக்கு உரியவையாக இருக்கலாம்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.