25/10/2018

டால்ஃபின் ஓர் உலக அதிசயம்...


அதற்கென்று மொழி உண்டு அவை தங்களுக்கள் பேசி கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறாகள்.

அதற்கென்று இசையும் உண்டு.

டால்ஃபின்கள் பாடும் இவை தவிர புத்திசாலிதனம், சமூக உணர்வு, உதவும் தன்மை இரக்கம் என்று பலவித உணர்வுகள் கொண்டது டால்ஃபின்..

டால்ஃபின் மனிதனைவிட வலது மூளையை (Right hemisphere) உபயோகிக்கிறதென்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கடலில் மூழ்கித்தத்தளிக்கும் மனிதர்களை டால்ஃபின்கள் தங்கள் முதுகில் சுமந்து கரை சேர்த்திருக்கின்றன.

டால்பின்கள் சொல்லி வைத்தாற்போல் ஒரே சமயத்தில் தண்ணீருக்கு வெளியே பாய்ந்து டைவ் அடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம், அதை விட ஆச்சரியம் சில நோய்களை டால்ஃபின்கள் குணப்படுத்துவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.

மனநிலை பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் தொடர்ந்து சில நாள்கள் டால்ஃபின்களோடு விளையாடிய பிறகு முழுமையாக குணமடைந்தார்கள்.

பார்வையிழந்த ஒரு பெண், டால்ஃபினகளை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி ஒருவரை மணந்து கொண்டார் கணவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நிறைய டால்ஃபின்கள் உண்டு. ஒரு முறை நீச்சலடிக்க குளத்துக்குள் மெல்ல இறங்கிய அந்த பெண்ணுக்கு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.

டால்ஃபின்கள் ஏதேதோ தன்னிடம் பேச முயற்சிப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது சில நாள்களில், டால்ஃபின்கள் தண்ணீருக்குள் அவருக்கு வழிகாட்ட ஆரம்பித்தன.

டெலிபதி மூலம் தண்ணீரில் பந்து எங்கேயிருக்கிறது என்பதைக்கூட அந்த பெண்ணால் கண்டு பிடிக்க முடிந்தது.

ஒருநாள் பார்வையிழந்த அந்த பெண்ணுக்கு டால்பின்கள் விதவிதமான வண்ணங்களை மாற்றி மாற்றிக் காட்டின மனக்கண்முன்.

டாக்டர் ஜான் லில்லி என்கிற டால்ஃபின் ஆராய்ச்சியாளர் நெத்தியடியாக ஒரு கருத்தை சொல்கிறார் நாம் வேற்றுக் கிரகங்களில் (நம்மை விட புத்திசாலியான) மனிதர்கள் (aliens) இருக்கிறார்களா என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். ஆனால் நமக்கு அருகிலேயே உள்ள மீன் உருவம் கொண்ட ஏலியன்ஸ் தான் டால்ஃபின்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.