10/10/2018

லேடிஸ் ஹாஸ்டலில் வைரமுத்து நடத்திய ‘செக்ஸ் லீலைகள்’ அதிரவைக்கும் பகீர் ஆதாரங்கள்...


‘வைரமுத்து மீதான பாலியல் புகார்களுக்கு ருசு என்ன?’ என்று தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார் பாடகி சின்மயி. ‘நானே ஆதாரம். இதோ நானே சொல்கிறேன்’ என்று வைரமுத்துவின் பாலியல் மிரட்டல் தன்னை எப்படி வந்து சேர்ந்தது என்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தையும் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் உயர்ந்த அந்தஸ்தை போர்வையாகக் கொண்டு காமக் களியாட்டங்கள் நடத்திவந்தவர்களுக்கு இது பொல்லாத நேரம்போலும். ஆளுநர், நிர்மலா அம்மணி பஞ்சாயத்து ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இவ்வளவு நாளும் நாடும் நாட்டு மக்களும் கவிப்பேரரசு என்று நம்பிக்கொண்டிருந்த காமப்பேரரசு வைரமுத்துவை கழுவில் ஏற்றிக்கொண்டிருக்கிறார் பாடகி சின்மயி.

வைரமுத்துவைப் பற்றிய உண்மைகளைப் போட்டு உடைப்பதால் என் சினிமா கேரியரே முடிவுக்கு வந்தாலும் நான் பின்வாங்கப் போவதில்லை என்கிறார் சின்மயி.

தொடர்ந்து இவர் வைரமுத்து மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார் பாடகி சின்மயி. ‘நானே ஆதாரம். இதோ நானே சொல்கிறேன்’ என்று வைரமுத்துவின் பாலியல் மிரட்டல் தன்னை எப்படி வந்து சேர்ந்தது என்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தையும் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

“2005 அல்லது 2006ஆம் ஆண்டாக இருக்கும். ’வீழ மாட்டோம்’ என்ற ஆல்பம் ஒன்றை இலங்கை தமிழர்களுக்கு மாணிக்க விநாயகம் அவர்களுடன் பாடுவதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தோம். அது புத்தகமா அல்லது பாடல் வெளியீடா என்று தெரியவில்லை. ஆனால், அதன் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தோம். இங்கு பாடல் ரெகார்டிங் முடித்துவிட்டு, சுவிட்சர்லாந்து சென்று லைவ்வாகப் பாடியும் கொடுத்தேன். எல்லோரும் கிளம்பிய பிறகும், நானும் என் அம்மாவும் மட்டும் அங்கேயே இருக்க வேண்டும் எனச் சொன்னார்கள்.

விழா ஏற்பாட்டாளர் வந்து, ‘நீங்கள் மட்டும் வைரமுத்துவை அவர் Lucerne பகுதியில் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று பார்க்கச் சொன்னார். நான் ஏன் என்று கேட்டதற்கு, கொஞ்சம் ஒத்துழையுங்கள் என்று சொன்னார். நான் மறுத்துவிட்டு, இந்தியாவுக்கு உடனே செல்ல ஏற்பாடு செய்யச் சொன்னேன். எனது எதிர்காலமே பாதிக்கப்படும் என்று அவர் சொன்னார். அதற்கு, நானும் என் அம்மாவும் எழுந்து நின்று எதிர்காலமும் வேண்டாம்; ஒரு மண்ணும் வேண்டாம் என்று சொல்லி, எந்த விமானம் சீக்கிரமாக இருக்கிறதோ, அதிலேயே இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இந்தியா வந்தடைந்தோம்.

இன்னொரு சம்பவமும் இருக்கிறது. ஒரு முறை சூடு வாங்கிய பூனை திருந்தியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இல்லை.

கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தக வெளியீடு வைத்திருந்தார் வைரமுத்து. அந்த விழாவுக்கு வந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று என்னிடம் கேட்டார். என்னால் முடியாது என்று சொன்னதும், ‘விழாவுக்கு வரப்போகும் அரசியல்வாதியைப் பற்றி நீ தவறாக மேடையில் பேசினாய் என்று நான் சொல்லுவேன்’ என மிரட்டி திட்டிவிட்டு போனை கட் செய்துவிட்டார். இதனால் நான் கதறி அழுவதைப் பார்த்த என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆறுதல் சொல்லி தைரியமும் கொடுத்தார்கள். அதன் பிறகு, வைரமுத்துவின் மேனேஜரை அழைத்து ‘அவர் சொன்ன அதே அரசியல்வாதியிடம் நான் அவரைப் பற்றி பேசியதாகச் சொல்லப்படுவது அத்தனையும் பொய். ஏனென்றால், இதுவரை நான் எந்த மேடையிலும் பேசியதில்லை’ எனச் சொல்வேன். அதை அவர் கண்டிப்பாக நம்புவார் எனக் கூறினேன்.”

இப்படி வைரமுத்து எங்கே, எப்படி தன்னைப் பாலியல் மிரட்டலுக்கு ஆளாக்கினார் என்பதை ட்விட்டரில் தொடர் ட்வீட்டுகளாக வெளியிட்டு அனைவரது கேள்விகளுக்கும் பதில் கூறிவிட்டார் சின்மயி.

மேலும் அவர் வெளியிட்ட சில ட்வீட்களில் “கடந்த 17 வருடத்தில் நான் வேலை செய்த தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா, மராத்தி மொழித் திரையுலகங்களில் ஒருவர்கூட என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததில்லை. ஆபாச மெஸேஜ் அனுப்பவும், என்னைத் தொடவும் முயன்றதில்லை. நான் வேலை செய்யும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க விரும்புவேன். இப்போது வைரமுத்துவை (சார்) நேருக்கு நேராகத் தனியாகவே எதிர்க்கத் தயாராகிவிட்டேன்.

வைரமுத்து அலுவலகத்தில் இருக்கும் வேலையாட்களுக்குத் தெரியும். அவருக்கு நெருங்கியவர்களுக்குத் தெரியும். அவர்களும் இவருக்கு உதவியாக இருந்தவர்கள். உங்களது நேரம் முடிந்துவிட்டது என்பதை மிகுந்த மரியாதையுடன் சொல்கிறேன். இனி நான் பாடுவதற்கும், டப்பிங் பேசுவதற்கும் சினிமா துறை எனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இதுதான் என் கதை. இதுதான் உண்மை” என்று தான் பாதிக்கப்பட்டது குறித்து சின்மயி தகவல் வெளியிட்டதுதான் தாமதம். உடனே, அவரைப் போலவே பலரும் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கினர். முக்கியமாக இசைத் துறையில் இயங்கிவரும் சக்திஸ்ரீ கோபாலன் போன்றோர் எந்தச் சூழலிலும் துணையிருப்பதாக சின்மயிக்கு ஆதரவளித்தனர்.

நடிகர் சித்தார்த் கொஞ்சம் காட்டமாகவே கேள்வியெழுப்பினார். “புகார் சொன்னபோது என்ன ஆதாரம், யார் பாதிக்கப்பட்டார்கள் என்று கேட்டீர்கள். இப்போது புகார் சொல்பவரே வெளியே வந்ததும், உங்கள் பப்ளிசிட்டிக்காக செய்கிறீர்களா என்று கேட்கிறீர்கள். உங்கள் பிரச்சினைதான் என்ன?” என்று கேள்விகளை எழுப்பிவருகிறார்.

வைரமுத்துவின் வீட்டுக்குப் பாராட்டுவதற்காகவும், தொழில் நிமித்தமாகவும் அழைக்கப்படும் பெண்கள் கதவு தாளிடப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதையும், அவர்களைப் பாராட்டுவது போல செய்யப்பட்ட அத்துமீறல்களையும் சின்மயிக்கு ட்விட்டரில் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் பெண்கள் விடுதியில் அவர் அந்தப்பெண்களின் அனுமதியின்றி அவர்கள் அறையில் நுழைந்து தவறான விதத்தில் பேசியது குறித்தும், அங்கே நீண்ட நெடுங்காலமாக வைரமுத்து கொடுத்துவரும் செக்ஸ் டார்ச்சர் குறித்தும் வரிசையாக சின்மயிக்கு தகவல்வந்துகொண்டிருக்கிறதாம். அருப்புக்கோட்டை நிர்மலா போல் சிலரை வைத்துக்கொண்டு தனது ஹாஸ்டலில் வைரமுத்து நடத்திய கன்னிவேட்டை கதைகளும் விரைவில் அம்பலத்துக்கு வரக்கூடும் என்கிறார்கள்.

இவை அனைத்தையும் ட்விட்டரில் வெளியிட்டதுடன், நடனம் மற்றும் இசைத் துறையில் பிரபலமானவர்கள் பலரது பெயரையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களின் பட்டியலாக வெளியிட்டிருக்கிறார்.

பி.எம்.சுந்தரம், பப்பு வேணுகோபால் ராவ், சுனில் கோத்தாரி, லோகநாத சர்மா, டி.என்.சேஷகோபாலன், சசிகிரண், ரவிகிரண் ஆகியோரது பெயரை சின்மயி வெளியிட்டிருப்பது தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் இந்தச் சர்ச்சையைப் பெரிதுபடுத்தியிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.