04/10/2018

சித்திரை மாதத்தின் சூட்சுமம்...


சித்திரை மாதம் பிறந்த குழந்தை சிரழியும் என்கிற சொல் வழக்கம் கிராமங்களில் உண்டு. அறிவியல் ரீதியாக பார்த்தோமேயானால், சித்திரை மாதம் கடும் அக்கினி / வெயில் காரணமாக குழந்தைக்கு ஒவ்வாமை, சூட்டுக் கட்டிகள், கொப்புளங்கள் மற்றும் அம்மை போன்ற நோய்கள் உண்டாகும் எனக் கூறுவர்.

ஜோதிட ரீதியாகப் பார்த்தோமேயானால், "மேஷம்" எனக் கூறப்படும் சித்திரை மாதத்தில் "சூரியன்" உச்சமாக இருப்பார். பொதுவாகவே ஒருவர் ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெறுவது அவ்வளவு சிறப்பல்ல. காரணம், தனித்துவமாக இருக்க விரும்பும் அவர்களுக்கு "உலகத்தோடு ஒத்துவாழ்" என்கிற கூற்று மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில், எப்போதுமே தர்க்கம் செய்யும் குணநலம் கொண்ட அவர்கள் ஒருபோதும் மற்றவர்களின் கருத்துக்கு செவி சாய்க்கமாட்டார்கள். மேலும், தன் கருத்தே சரி என்கிற அதிமேதாவித்தனம் மற்றவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.

மேலும், சூரியன் உச்சம் பெற்றவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் இல்லத்தாரிடம் கூட தரம் தாழ்ந்து இருப்பதை விரும்பமாட்டார்கள். மரியாதையை கேட்டு வாங்கும் தன்மை கொண்ட அவர்கள், எப்போதுமே அடுத்தவர்களை ஆளுமை செய்வதும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்கிற தோணியில்தான் அவர்களின் பேச்சே இருக்கும், தவிர அடுத்தவர்களின் மனநிலை அவர்களுக்கு ஒருபோதும் புரியாது, புரிந்தாலும் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் அவர்களுக்கு துளியும் இருக்காது. அதனால், அவர்கள் சமுதாயத்திலிருத்து பிரித்துப் பார்க்கப்படுவார்கள் அல்லது வெறுக்கப்படுவார்கள். இதனாலேயே நம் முன்னோர்கள் சித்திரை மாதம் குழந்தை பிறப்பு ஆகாது என்றனர்.

இதில், சூரியன் #அஸ்வினியில் நின்றால் கட்டுக்கடங்காத தன்மையும், #பரணியில் நின்றால் கடுமை சற்று குறைந்தும், #கார்த்திகையில் நின்றால் சரிசம அளவிலும் இருக்கும், தவிர மேஷத்தில் சூரியனுடன் வேறு கிரகங்கள் சேர்ந்தால், அக்கிரகத்தின் காரகத்துவத்தையும் சேர்த்து பிரதிபலிக்கும்..

குறிப்பு: மேஷத்தில் சூரியனுக்கு வீடு கொடுக்கும் செவ்வாய் கடகத்தில் நீசமானால் மேற்கூறிய சில பலன்கள் பொய்க்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.