31/10/2018

இந்தியாவின் தொல்குடிகள் தமிழர்கள் தான்...


சிந்து சமவெளி, ஆதிச்ச நல்லூர், கீழடி, பூம்புகார் எனத் தொடர்ந்து பூதங்கள் கிளம்பிக் கொண்டே உள்ளது...

தமிழனைவிடத் தொன்மையானவன் நாங்கள் தான் முன்னோடி எனக் காட்ட சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நாகரீகம் என சொல்லி பார்த்தனர். இதுவரை நிரூபிக்க முடியவில்லை. சரிப்பா அதை நீங்களே வச்சுக்குங்க, ஆதிச்ச நல்லூரைப் பார்க்கலாம்னு கூப்பிட்டா அது இன்னும் பழையது என்று ஆய்வு முடிவுகள் வந்தவுடன் அதை வெளியிடாமல் வைத்துள்ளனர். பூம்புகாரில் கடலில் புதையுண்ட நகரம் குறித்து ஆய்வு செய்ய தடை போடுகிறார்கள். கீழடி தோண்டி பார்த்து கடவுள்களையேக் காணோம் தமிழன் வித்தியாசமனவன்னு உறுதியானவுடன் அவசர அவசரமாக மண்ணள்ளிப் போட்டு மூடுகின்றனர்.

உலக வரலாற்றிலேயே அதிகமான கல்வெட்டுகள், வரலாற்றுச் சுவடுகள் என தமிழகத்தில் காணப்பட்டும் அதைப் பாதுகாக்கவோ மேலும் ஆராயவோ முன்வர மாட்டேன் என்கிறார்கள்.

கொள்ளையர்களும், அருமை அறியா மக்களும் கல்குவாரிகள் போட்டு அழிப்பதை வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

எழுத்து வடிவில் நாங்கதான் முன் எனக் காட்ட அசோகர் பிராமி எனச் சொன்னார்கள். அடேய் உங்க ராசா எழுத்தைப் பயன்படுத்த ஆரம்பிப்பதற்கு முன்னாடி அவங்க தாத்தன் காலத்திலேயே, எங்கூரு வயலில் வேலை செய்பவன் கூட எழுத்து பயன்படுத்தியுள்ளான் என வந்தவுடன் அதை தமிழ் பிராமி எனத் திரிக்கிறார்கள். பேரன் பெயருடன் தாத்தா பேர் சேருமா, தாத்தா பேருடன் பேரன் பெயர் சேருமா?. சரிப்பா உங்க சமஸ்கிருதம் தான் மூத்த மொழியாச்சே எங்கே ஒரு கல்வெட்டு, ஓலைச்சுவடின்னு கேட்டா ஆங், இது தேவ பாஷை எழுத்தெல்லாம் கிடையாது செவிவழி மட்டும்னு எகிர்றானுக.

தமிழ் எல்லத்துக்கும் மூலம்னு வந்தவுடன், தமிழன் தான் மூத்தவன், இம்மண்ணின் மைந்தன்னு வந்தவுடன் சங்க இலக்கியத்தில் வரும் அந்தணன், பார்ப்பனனே நாங்கதான், நாங்களும் தமிழன் தான், சமஸ்கிருதமும் தமிழர்கள் ஒரு சில தேவைகளுக்காகப் பயன்படுத்திய சங்கேத மொழின்னு உட்டாலக்கடி பாட்டு பாடுறானுக.

தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், தொன்மை குறித்து முழு ஆய்வுகள் செய்யவும், ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும் தமிழக தொல்லியல் துறை முழு அதிகாரம் பெற்றதாக மாற்றப்பட வேண்டும். தன்னாட்சி அதிகாரம் வேண்டும்.

கல்வி, வேலை வாய்ப்பு, கனிமங்கள், தொழில், சூழல், அனைத்து போக்குவரத்துகள், கடல் என தமிழகத்தின் தொடர்புடைய அனைத்திலுமே தமிழர் தன்னுரிமை பெற வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.