31/10/2018

இந்திய கோவில் சடங்குகள் உடன்படிக்கைக்கு ஒப்பானவை என்றால்?


இரு மத சடங்குகளுக்கான ஒற்றுமை
என்னவொன்று பார்க்கலாம்;

உடன்படிக்கை பெட்டி வழிபாடு:

மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கூடாரத்துக்கு உள்ளே முன் பகுதி உள்ள இடம் பரிசுத்தமான இடம் என அழைக்கப்பட்டது. அந்த இடத்தில் உடன்படிக்கை வைக்கப்பட்ட பரிசுத்தமான பெட்டியும் இருந்தன. அப்பெட்டி தங்கத் தகட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்பெட்டியின் மேல் கிருபையாகிய இருக்கையை மறைத்தபடி தேவனுடைய இரண்டு விசேஷ தூதர்கள் இருந்தார்கள். அந்த பரிசுத்தமான இடத்தில் ஒரு குத்துவிளக்கும் , பொன்னால் செய்த தூபகலசம், தேவனுக்குப் படைக்கப்பட்ட சிறப்பான அப்பங்களும் இருந்தன.

வைணவ ஆலய வழிபாடு:

வைணவ ஆலய வழிபாட்டை பிம்ப வழிபாடு என வைதீகர்கள் அழைப்பர். பிம்பம் என்பது உருவ விக்கிரகங்கள் எனப் பொருள்படும்.

அந்த கடவுள் சிலைகளுக்கு தங்க தகடுகள் பதித்து வைத்திருப்பார்கள்.
மேலும் கருவரை வாயிலில் இரண்டு காவல் தெய்வங்கள், (துவாரபாலகர்கள்) இடம் பெற்றிருக்கும். மேலே குறிப்பிட்டது போலவே பூஜை பொருட்களான தூபகலசம்,குத்துவிளக்கு, நெய்வேத்தியங்கள் இறைவனுக்கு படைக்க வைத்திருப்பார்கள்.

உடன்படிக்கை பெட்டி வழிபாடு:

இவ்விதத்தில் எல்லாப் பொருள்களும் ஆயத்தப்படுத்தப்பட்ட பிறகு, ஆராதனை சேவையை செய்யும் பொருட்டு ஆசாரியர்கள் முதலாம் பரிசுத்தக் கூடாரத்தில் நித்தமும் செல்லத் தொடங்குவார்கள். ஆனால் பிரதான ஆசாரியர் மட்டுமே மிகப் பரிசுத்தமான இரண்டாம் அறைக்குள் பலியின் இரத்தத்தைச் சிந்தி நுழைய முடியும். அவர் முதலில் தான் செய்த பாவங்களுக்காகக் காணிக்கை செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே அறியாமையால் மக்கள் செய்த பாவங்களுக்காக அவர் காணிக்கைகளை வழங்கவேண்டும்.
முதலாம் கூடாரம் நிற்கும் வரையிலும் மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போகும் வழியானது திரை சீலையால் மூடப்பட்டிருக்கும்.

வைணவ ஆலய வழிபாடு:

கருவறையில் இருந்து அருள்பாலிக்கும் தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யப்படும் போதும் திரையிட்டு சுவாமிக்கு பூஜை சடங்குகள் செய்வார்கள்.

வைணவர்களும் பலிபீடத்துக்கிட்டே தலை தாழ்த்தி அகங்காரம், பேராசை, தீய எண்ணங்கள் முதலான கெட்ட குணங்களையெல்லாம் பலியிட்டுட்டு மனதை தூய்மை செய்துகிட்டு வணங்கத் தயாராகுவார்கள்.

பரிசுத்த கூடாரத்தின் கருவரை இருளாக காட்சியளிக்கும், அந்த இருளில் உடன்படிக்கை பெட்டியின் மேல் உள்ள தூதர்களின் இறகுகளுக்கு நடுவே ஒளியாக பரிசுத்தமானவர் காட்சியளிப்பார். அவரிடம் பிரதான ஆச்சாரியார் உரையாடுவர். இது போன்றே வைணவ கோவில்களின் பெரும்பாலான கருவறை இருட்டாகவே இருக்கும். இதற்கு அறிவியல் பூர்வமான காரணம் என்று பார்த்தால், கருவறையின் மேல் உள்ள விமான கலசம் மூலமாக சூரிய கதிர்களின் அலை மூலவருக்கு கடத்தப்படுகிறது அதே நேரத்தில் சிலைக்கு அடியில் வைத்திருக்கக்கூடிய யந்திரம் பூமிக்கடியிலிருந்து ஆற்றல்களை கடத்துகிறது.

இப்படி கருவறையினுள் நிரம்பியிருக்ககூடிய பாசிட்டிவ் எனர்ஜியை வெளியே கடத்த வேண்டும் என்றால் ஆற்றல்கள் நிரம்பியிருக்கும் இடம் இருட்டாக இருக்க வேண்டும். அந்த பாசிட்டிவ் ஒளியிடம் வைணவ பூசாரிகள் தங்கள் கடவுள்களிடம், மந்திரங்கள் மூலமாக உரையாடுவார்கள்.

இவ்வாறான இரு மத வழிபாடு சடங்குகளுக்கு இடையேயான ஒற்றுமையை பார்க்கும் போது
கடவுளின் உடன்படிக்கை பெட்டியானது சுமார் BC586 ஆம் ஆண்டு எருசலேம் பாபிலோனின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வந்தபொழுது ஜெரேமியா மற்றும் அவருடைய சீடர்களும் ஒருவருக்கும் புலப்படாமல் எதிரிகளிடமிருந்து பரிசுத்த உடன்படிக்கை பெட்டியை மறைத்து வைத்திருக்கலாம்,இல்லை இந்தியாவிற்க்கு புலம்பெயர்ந்த யூத பிராமணர்களால் ஒருவேளை இந்தியாவில் மறைக்கப்பட்டு இருக்கலாம்..!! உடன்படிக்கை பேழை இந்திய கோவில்களில் ஏதேனும் ஒன்றில் தான் மறைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: "உடன்படிக்கை பேழை" ஒன்றல்ல ஒன்றுக்கும் மேற்பட்டவை உள்ளதாக  யாத்திராகமத்தில் கூறப்பட்டுள்ளது.

நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின் உச்சியில் ஏறி, ஒரு மரக்கால் மார்க்கண்டத்தை எடுத்து, நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் உன்மேல் எழுப்புவேன். நான் பேழைக்குள் போய்ச் சேர்த்தேன்... நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, நான் செய்த பெட்டியிலுள்ள மேஜைகளை வைத்து, கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அங்கே இருக்கிறார் என்றான்.

யாத்திராகமம் 34: 1 10: 1-5...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.