31/10/2018

அம்பேத்கர் ரசிகர்களுக்கு...


அம்பேத்கர் பற்றிய மூட நம்பிக்கைகள் மற்றும் அதன் உண்மைத்தன்மை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

1. அம்பேத்கர் இடவொதுக்கீடு பெற்றுத் தந்தார்...

1882ல் அதாவது அம்பேத்கர் பிறக்கும் முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடங்கிய கோல்ஹாப்பூர் அரசாட்சியில் பிராமணரல்லாத சாதிகளுக்கு முதன்முதலாக இடவொதுக்கீடு ஷாஹு எனும் அரசரால் வழங்கப்பட்டது.

1893 ல் (அதாவது அம்பேத்கர் இரண்டு வயது குழந்தையாக இருந்த போதே) அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான சென்னை மாகாணத்து தலைவர்கள் ஆங்கிலேயருக்கு கோரிக்கை வைத்து 49 சாதிகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலக் கல்வியில் இடவொதுக்கீடு வழங்கச் செய்தனர்.

1927 லேயே இடவொதுக்கீடு அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான மெட்ராஸ் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது.

இதைப் பெற்றுத் தந்தது சுப்பராயக் கவுண்டர் மற்றும் முத்தையா முதலியார்.

(அதாவது அம்பேத்கர் காந்தியுடன் பூனா ஒப்பந்தம் போட்டு தேர்தலில் 18% தனி தொகுதிகள் வாங்கித் தருவதற்கு 5 ஆண்டுகள் முன்பே).

1935ல் எம்.சி.ராஜா அவர்கள் தெளிவாக வரையறுத்து அதை சட்டமாக்கினார்.

SC 14%,

BC 14%,

Non Brahmin 44%,

Brahmin 14%,

Christian 7%,

Muslim 7%

என்றவாறு 100% இடவொதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

(அதாவது அம்பேத்கர் ஆங்கில அரசுடன் பேசி 8.33% இடவொதுக்கீடு கொண்டு வந்ததற்கு 7ஆண்டுகள் முன்பே).

தற்போதும் இந்திய ஒன்றியம் முழுவதும்.

SC=15%

ST=7.5%

OBC=27.5

என 50% இடவொதுக்கீடு உள்ள நிலையில்.

தமிழகத்தில் மட்டும்தான்..

BC=26.5%

BCM=3.5% (பிற். இசுலாமியர்)

MBC=20%

SC=15%

SCA=3% (அருந்ததியர்)

ST=1%

என 69% இடவொதுக்கீடு உள்ளது.

(இதற்கு முக்கிய காரணம் பா.ம.க முன்னெடுத்த போராட்டம் ஆகும்).

2. அம்பேத்கர் தலித் என்ற அடையாளத்தின் கீழ் மக்களை ஒன்று திரட்டினார்..

அம்பேத்கர் ஓரிரு முறை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும் அவர் 'தீண்டத்தகாதோர்' என்ற சொல்லாலேயே எப்பொதும் குறிப்பிடுவார்.

ஆவணங்களில் 'சாதியற்ற இந்துக்கள்' என்று குறிப்பிட முன்மொழிந்தார்.

தலித் என்ற வார்த்தை அவர் விரும்பாதது.

(தமிழகத்தில் 'தலித்' என்ற வார்த்தையும் 'தாழ்த்தப்பட்ட' என்ற வார்த்தையும் 1981ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன).

3. அம்பேத்கர் சுதந்திரத்திற்காக போராடினார்..

அம்பேத்கர் இறுதிவரை ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தவர்.

காந்தியை எதிர்கொள்ள ஆங்கிலேயர் அவரை பயன்படுத்தினர்.

ஆங்கிலேயர் வெளியேறியதும் அவர் இந்துத்துவத்திற்கு மாறினார்.

அம்பேத்கர் இந்து மதத்தை அதன் சாதிய கட்டுமானத்தை எதிர்த்தார்...

தொடக்கத்தில் அவ்வாறு இருந்தாலும் பிறகு நிறம் மாறினார்.

இசுலாமியரை நம்பமுடியாதவர்கள் என்றும் இந்துக்களின் எதிரி என்றும் கூறி பாகிஸ்தானை பிரிக்கவும் முழு ஆதரவளித்தார்..

ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற இந்துத்துவ - இந்திவெறி கொள்கையை முன்வைத்தார்.

பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களை இந்துமதத்தின் பிரிவுகள் என்றாக்கி அவர்களை சட்டபடி இந்துக்களாக ஆக்கினார் (சட்டம்-25).

சமஸ்கிருதத்தை ஆட்சிமொழி ஆக்க முயற்சிகளை மேற்கொண்டார் (6,7,8).

4. அம்பேத்கர் சாதி அடையாளத்தை உதறியவர்...

நிச்சயமாக இல்லை.

தனது சாதி பட்டத்தை மறைத்து அம்பேத்கர் எனும் உயர்சாதி பட்டத்தைப் போட்டுக் கொண்டாலும்.

இறுதிவரை தமது சாதியான மகர் சாதிக்கு முடிந்தவரை போராடினார்.

அவருக்கு முதலில் கிடைத்த பெரிய பதவி 1941ல் 'பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்' பதவியாகும்.

அவர் செய்த முதல் வேலை ராணுவத்தில் மஹர் படையணி என்று ஒன்றை உருவாக்கியது ஆகும் (1941).

அது இன்றும் உள்ளது.

5. அம்பேத்கர் மொழி இன அடையாளங்களைக் கடந்தவர்...

இதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் முழுமையாக அப்படி கூறமுடியாது.

பாம்பே (மும்பை) நகரம் குஜராத்தியர் கைக்கு போக இருந்தது.

தன் இனத்தின் தலைநகரமான அதை தனது இனமான மராத்தியர்களுக்கே கிடைக்கச் செய்ததில் அம்பேத்கரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அப்போது அந்நகரம் குஜராத்திய பெரும்பான்மை மாநிலத்துடன் இணைந்திருந்தது.

சொத்துகள் அனைத்தும் குஜராத்தியர் வசமிருந்தன.

மராத்தியர் எண்ணிக்கை அந்நகரில் பாதி கூட இல்லை.

அதற்கு முந்தைய மராத்திய பேரரசிலும் அந்நகர் இல்லை.

மாநில எல்லைகள் புனரமைப்பின்போது மராத்திய மொழிவழி மாநிலம் அமைவது பற்றி அவர் சமர்ப்பித்த ஆவணம்(3) மராத்தியருக்கு மும்பையை பெற்றுத்தந்தது.

அதன் வரலாற்றுப் பெயரான மகாராஷ்ட்ரா என்ற பெயரும் அவரால் பரிந்துரைக்கப்பட்டு சூட்டப்பெற்றது.

6. அம்பேத்கர் தமிழ் மீதும் தமிழர் மீதும் அன்பு கொண்டிருந்தார்...

இல்லை. தமிழ் மூத்தமொழி என்று கூறினார் தான்.

ஆனால் மூத்த குடி என நாகர் எனும் இல்லாத இனத்தைக் கூறினார்.

தமிழகம் உட்பட மொழிவழி மாநிலம் அமையவிருந்தபோது எதிர்த்தார்.

மொழிவழி மாநிலங்கள் இந்தியாவை துண்டுதுண்டாக உடைக்கும் என்று எச்சரித்தார்.

மொழி உரிமைகளை அவர் வழங்கக்கூடாது என்று கூறினார்.

காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்கும் சிறப்பு சட்டத்தை (பிரிவு- 370) நேரு சொல்லியும் எழுதித்தர அவர் மறுத்தார் (பிறகு கோபாலசாமி ஐயங்கார் எழுதினார்).

தமிழ் ஆட்சிமொழி ஆக காயிதே மில்லத் அவர்கள் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் 72ம் இந்தி 73 வாக்குகளும் பெற்றதை அதிர்ச்சியுடன் குறிப்பிட்டு இந்தியை நாடு முழுவதும் திணிப்பதற்கு முழு ஆதரவு வழங்கினார்.

7. அம்பேத்கர் இந்தியா முழுவதற்குமான தலைவர்...

அம்பேத்கர் அவரது வாழ்நாளில் மக்கள் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தது இல்லை.

தேர்தலிலும் கூட தோற்றுதான் போனார்.

அவர் தொடங்கிய இயக்கங்களும் பரவலான ஆதரவைப் பெறவில்லை.

அவருக்கு கிடைத்த பதவிகள் ஆங்கிலேயரோ அல்லது காங்கிரசோ அளித்த வாய்ப்பு தான்.

8. அம்பேத்கர் ஒழுக்கமானவர்...

அம்பேத்கர் தமது 57 வயதில் தமக்கு மருத்துவம் பார்த்த தன்னை விட 19 வயது இளையவரான ஒரு பிராமணப் பெண்ணை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டவர்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இறந்தும் போனார்.

9. அம்பேத்கர் சாதியொழிப்பில் முன்னோடி...

முதல் சாதி ஒழிப்பு மாநாடு தமிழகத்தில் 1891ல் அயோத்திதாசர் அவர்களால் நீலகிரியில் நடத்தப்பெற்றது.

சாதி ஒழிப்பில் தமிழகமே முதலடி எடுத்து வைத்தது.

எம்.சி.ராஜா 1927ல் எழுதிய 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து.

'The Untouchables' எனும் நூலாக 1948ல் வெளியிட்டார் அம்பேத்கர்.

இதேபோல 1907 ல் அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய 'புத்தரும் அவரது ஆதிவேதமும்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து..

'The Buddha and his dhamma' என்ற புத்தகமாக அம்பேத்கர் எழுதி (அவர் இறந்த பிறகு அது) 1957ல் வெளிவந்தது.

நகலெடுத்து தமது பெயரில் போட்டுக் கொண்டது கூட பரவாயில்லை.

அந்த சிந்தனை எங்கே கிடைத்தது என்று பின்னிணைப்பில் கூட அவர் மேற்கண்ட தமிழர்களை மேற்கோள் காட்டவில்லை.

10. அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்ததில் முதல் ஆள்...

வடயிந்தியா அளவு தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்றாலும்,

1923 ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரெட்டமலை சீனிவாசன் பொது இடங்களில் பட்டியல் சாதியினர் நடமாட தடையில்லை என்று அரசாணை வெளியிட்டது தீண்டாமைக்கு எதிரான குறிப்பிடத் தகுந்த முதல் நடவடிக்கை ஆகும்.

11. அம்பேத்கர் வந்த பிறகு தான் பறையர் முன்னேறினர்...

நிச்சயமாக இல்லை.

அம்பேத்கர் அரசியலுக்கு வரும் முன்பே பறையர்கள் கல்வியிலும் அரசியலிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்கினர்.

சொல்லப் போனால் அம்பேத்கருக்கு முன் அவரது இடத்தில் இருந்தவர் எம்.சி.ராஜா எனும் பறையர் தான்.

12. அம்பேத்கர் ஆரியர்களை எதிர்த்தார்...

அம்பேத்கர் ஆரிய கட்டுக்கதையை நிராகரித்தவர்.

பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து மனுஸ்மிருதி எரிப்பு போராட்டத்தை நடத்தியவர்.

பிராமணர் ஆரியர் என்பதையோ வேற்றினம் என்பதையோ அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

13. அம்பேத்கர் புத்தமதத்தை சாதியை ஒழிக்கும் தீர்வாக முன்வைத்தார்...

அம்பேத்கர் இயற்றிய சட்டப்படி புத்தமதம் இந்து மதத்தின் பிரிவே.

ஒரு இந்து புத்தமதத்திற்கு மாறினாலும் சட்டப்படி அவரது சாதி மாறாது.

உயர்சாதி இந்துக்களுடன் சண்டை போடுகிறேன் அதற்காக நான் இந்து இல்லை என்று ஆகாது.

பாகிஸ்தான் முஸ்லீம்களால் ஆபத்து வந்தால் இந்தியாவிற்காக உயிரைக் கொடுத்து போராடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இறப்பதற்கு 50 நாட்கள் முன்பு அவர் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தைத் தழுவிய போது எடுத்த 22 உறுதிமொழிகளில் சாதி பற்றி எதுவுமே இல்லை.

அம்பேத்கருக்கு ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வெள்ளையாக்கி கோட்சூட்டுடன் வரைந்து..

தம்மை உயர்த்திய தலைவர் அவரென்றும் தம்மை தலித் என்றும் கூறிக்கொண்டு..

வரலாறும் உண்மையும் தெரியாமல்..

மற்ற எந்த சாதிவெறி கும்பலுக்கும் சளைக்காத அலப்பறை செய்யும் அம்பேத்கர் ரசிகர்களே..

இனியாவது திருத்துங்கள்..
இதிலுமா வடக்கத்திய மோகம்..

1. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 2.

2. Thoghts on linguistic states

3. Maharashtra as linguistic

4. Who were the untouchables?

5. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 1. page: 213 & 214)

6. Statesmen, 11th September 1949

7. The National Herald (11.09.1949)

8. The Hindu (11.09.1949)

9. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 15. page: 130 - 143)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.