மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிருக்கான மானிய விலை அம்மா இருசக்கர வாகனம் 120 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் 31 பேருக்கு இருசக்கர வாகனம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட 286 பயனாளிகளுக்கு 87 லட்சத்து 8 ஆயிரத்து 135 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கியதன் மூலம் மாமியார் மருமகள் சண்டையை போக்கியவர் ஜெயலலிதா என்றார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சத்துணவு திட்டம், இலவச வேட்டு, சேலை, மாணவா்களுக்கு காலணி, பாடபுத்தகம், மடிக்கணினி, தொட்டில் குழந்தை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டத்தின் மூலம் மாமியார் மருமகள் சண்டையை போக்கியவர் ஜெயலலிதா என்றவர் அதிமுக மக்களை எஜமானர்களாக வைத்து ஆட்சி செய்கிறது. அதனால்தான் மக்கள் அதிமுக ஆட்சியை விரும்புகின்றனர். அதிமுக போன்று திமுக எந்த ஒரு திட்டங்களையும் மக்களுக்கு கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் ஏதாவது தவறு நடந்து விடாதா என எதிர்க்கட்சியினா் எதிர்ப்பார்த்து காத்துக் கிடக்கின்றனா். அதிமுகவிற்கு தோ்தலைக் கண்டு பயமில்லை. எப்போது வேண்டுமானாலும் தோ்தலை சந்திக்க யாராக உள்ளோம். எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை. பொய்பிரச்சாரங்களை தாண்டி மீண்டும் அதிமுக ஆட்சிதான் மலரும் என்றார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.