தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக தாம்பரம்-திருநெல்வேலி, தாம்பரம்-கோவை ஆகிய வழித்தடங்களில் 8 முன்பதிவில்லாத ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
தாம்பரம்-திருநெல்வேலி: தாம்பரத்தில் இருந்து நவம்பர் 3, 5 ஆகிய தேதிகளில் (சனி, திங்கள்) காலை 9.30 மணிக்கு முன்பதில்லாத சிறப்பு ரயில் (06055) புறப்பட்டு, அன்று இரவு 9.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
திருநெல்வேலி-தாம்பரம்: திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 4, 7 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06056) புறப்பட்டு, அன்று இரவு 10.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
தாம்பரம்-கோவை: தாம்பரத்தில் இருந்து நவம்பர் 3, 5 ஆகிய தேதிகளில் (சனி, திங்கள்) காலை 7.45 மணிக்கு முன்பதில்லாத சிறப்பு ரயில்(06053) புறப்பட்டு, அன்று மாலை 6 மணிக்கு கோவையை அடையும்.
கோவை-தாம்பரம்: கோவையில் இருந்து நவம்பர் 4, 7 ஆகிய தேதிகளில் (ஞாயிறு, புதன்) காலை 10 மணிக்கு முன்பதில்லாத சிறப்பு ரயில் (06054) புறப்பட்டு, அன்று இரவு 8.30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
மொத்தம் 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.