04/11/2018

நான் ஏன் பாமக அன்புமணி ராமதாஸ் அவர்களை ஆதரிக்கிறேன்...


அன்புமணி ராமதாஸ் (பிறப்பு அக்டோபர் 9, 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும் கலைப்பயிற்சியால் மருத்துவரும் ஆவார்.

இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர் ஆவார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். 2004ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் மருத்துவம் மற்றும் குடும்பநல அமைச்சராக பணியாற்றி வந்தார்.

2009ல் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன் அவரது கட்சி செல்வி ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அமைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்ந்து ஆளுங்கட்சியான காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடத் தீர்மானித்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

பசுமைத்தாயகம்...

2004ல் பதவியேற்ற இந்தியக் கூட்டாட்சி அமைச்சர்கள் அனைவரிலும் இவர் மிகவும் இளைஞர் (37 வயது). இவர் மருத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் ஊர்ப்புற மருத்துவத்தில் பெரிதும் ஆர்வம் காட்டினார். "பசுமைத் தாயகம்" என்னும் அரசு சாரா சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இவர்.

புகையிலை, குடிப்பழக்க எதிர்ப்பு...

பல வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், ஏற்கனவே வழங்கும் புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் எச்சரிக்கை அறிக்கைகள், தணிக்கை நெறிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் மரு. அன்புமணி ராமதாஸ்.

இவரது ஆட்சியில், அமெரிக்காவில் இருப்பதைப் போலவே, பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டது.

சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரங்கள், சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது என்பவை இவரது ஆட்சியின் கீழ் தடை செய்யப்பட்டது.

புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான தணிக்கை நெறிகளைக் கொண்டு வந்தார்.

இவரது இந்தச் செயல்கள், புகையிலை, மற்றும் மதுபானப் பெருநிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக்கின.

இத்தகைய கடும் எதிர்ப்புகள் 2009ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இவரது கட்சி படுதோல்வி அடைந்ததற்கான காரணங்களில் முதன்மையானதாகக் கட்சித்தலைமை கருதுகிறது.

எனினும், அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் இவரது புகையிலைப் பொருள்கள் எதிர்ப்புச் செயல்களைப் போற்றி சூலை 14, 2006 அன்று இந்திய மருத்துவ அமைச்சகத்துக்கு லூதர் எல். டெர்ரி விருது வழங்கிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.