28/11/2018

எழுத்துக்கும் நிறங்கள் உண்டு...


ஒவ்வொரு எழுத்துக்கும் பேச்சுக்கும் சொல்லுக்கும் ஒரு அதிர்வு உண்டு என்று அறிவியல் சொல்லிவிட்டது..... இப்போது தான் Bio energy field ஆராய்ச்சிகள் மூலம் ஒருவர் பேசும் போது வெளிப்படும் நிறங்களை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்....

நான் ஐந்திறத்தில் படித்த விசயங்களை அவனிடம் பகிரும் போது... அனைவருக்கும் ஆச்சரியம் ஏனெனில்.... மயன் எழுதியது இப்போது Bio energy field camera ( உலகத்திலேயே இரண்டே உள்ளது ஒன்று கோவாவில் தம்பியிடம் உள்ளது ) மூலமாக பார்க்கும் போது உண்மையாக கண்முன்னே தெரிகிறது.....

வாருங்கள் மயன் சொல்வதை கேட்கலாம்....

" அண்டமும் பிண்டமும் நிலையுறக்காட்டி
ஒளியும் ஒலியும் அமைவுறக்கூட்டி
பெயர்முறை உருவம் பிறப்பியல் மாத்திரை
உயர்வுற விளங்கும் எழுத்தின் இயல்பே"

எழுத்து எழுப்பும் அதிர்வு பிரபஞ்சம் எங்கிலும் வியாபித்து இருக்கிறது... அந்த அதிர்வு உயிரின் உடலிலும் உள்ளது....

லகர ஓசை - நிலம்
வகர ஓசை - நீர்
ரகர ஓசை  - நெருப்பு
யகர ஓசை - காற்று
உகர ஓசை - ஆகாயம்

இந்த ஓசைகளுக்கு ஏற்றப்படி அதனுடைய நிறங்களும் அதன் பயன்களும் அமையும்.....

Light sound effect..

எடுத்துக்காட்டாக

நிலம்
Sound - லகரம்
Light.   - வெளிர் மஞ்சள் நிறம்
Effect - அசையாமல் இருக்க. செய்யும் தன்மை.

இதே போல ஐந்து மூலங்களுக்கும் ஓசையும் நிறமும் பயனும் உண்டு.....

இதன் அடிப்படையில் ஒரு வார்த்தையை கட்டமைத்து.... அதன் படி அந்த வார்த்தையை பேசினால் அதன் பயண் உடலிலும்... பிரபஞ்சத்திலும் எதிரொளிக்கும்......

அப்படி ஒவ்வொரு வார்த்தையும் பார்த்து பார்த்து கட்டமைக்கப்பட்ட மொழி தான் தமிழ் என்கிறார்.....

பல நூறு வருடங்களுக்கு முன்னே வாழ்ந்த மயன் எனும் மாமுனிவர்......

இந்த பதிவு உங்களுக்கு புரியாமல் கூட போகலாம்....தொடர்ந்து எனது பக்கத்தில் எழுதுவதை படியுங்கள்.....

இது இதுவரை கண்டுபிடித்த ஆய்வுகளுக்கு மேல் உச்சத்தில் இருக்கும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.