13/12/2018

மாவீரன் பங்க் குமார் நினைவு தினம் ( டிசம்பர் 12)...


சைதாப்பேட்டை கொத்தால்சாவடி மார்கெட்டில் சாதாரண அசோக் குமாராக வாழ்கையை ஆரம்பித்தார் பங்க் குமார்- சில வருடங்களில் அந்த மார்கெட் முழுவதும் இவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது... அதன் பிறகு சைதாபேட்டை, தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, புறநகர், என்று படிப்படியாக இவரது கைக்குள் அடங்கியது..

சென்னை மாநகரம் முழுவதும் பங்க் குமாரின் கொடி மட்டுமே உயர்வாக பறந்தது, எந்த கட்சி தேர்தலில் நின்றாலும் பங்க் குமாரின் சப்போர்ட் முக்கியம் என்பது எழுதப்படாத விதியானது! 2006 உள்ளாட்சி (மேயர்) தேர்தலில் திமுக-பாமக-காங்கிரஸ் கூட்டனி அமோகமாக ஜெயிப்பதற்காக இவர் செய்த சித்து விளையாட்டுக்கள் மிக பிரசித்தம்..

சிட்டிக்குள் ஆங்காங்கே குறுநில மன்னர்களை போல செயல்பட்டுக் கொண்டிருந்த சின்ன சின்ன ரவுடிகளை எல்லாம் ஒடுக்கி, தனக்கு கீழே கொண்டு வந்து "சென்னையின் பாட்ஷா" போல கோலோச்சினார். இவரது கருப்பு நிற Scorpio கார் சாலையில் வருவதைக் கண்டாலே பெரிய பெரிய VIP-களாக உள்ளவர்களே ஒதுங்கி வழிவிடுவார்கள்..

தனது சாதியின் மீது கொண்ட பற்றால் பிரபலமான வன்னியர் அமைப்பில் இனைந்து சென்னை மாவட்ட தலைவரானார்... பிறகு சில காரணங்களுக்காக அதிலிருந்து விலகினார்.. மேயர் முதல் மந்திரி வரை அனைவரும் பங்க் குமாரை பகைக்க பயந்தனர்.

நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் இவரைத் தழுவியே, சில பல மாறுதலான கற்பனை கதையில் படமாக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது..

அவரது அபார வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய சில கயவர்களின் தூண்டுதலால், சொந்த சாதியில் குழிபறிக்கும் சில புல்லுருவிகளின் வழிகாட்டுதலின்படி 2006ம் ஆண்டு இதே நாளில் காவல்துறையால் என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டார்...

இன்றளவும் சிட்டிக்குள் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம், வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்துகொண்டு இவரைப் போலவே "பங்க்" வைச்சிட்டு, வெள்ளை நிற கைக்குட்டைக்கு நடுவில் மொபைல் போனை கையில் எடுத்துட்டு, நடந்து வந்தா 15 வயசு பையன் கூட தவுலத்தா இருப்பான்!! அது ஒரு தனி போதை...

தலைநகரின் தலைமகன், எங்கள் மண்ணின் மைந்தனுக்கு 12ம் ஆண்டு வீரவணக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.