13/12/2018

கருவூர்ச்சித்தர் அருள்வாக்கு...


கருவூர்ச்சித்தர் உலகமக்கள் மீது இரக்கம் கொண்டருளிய அருள்வாக்கு...

மகான் கருவூரார் ஞானசூட்சும நூல்...

இப்பிரபஞ்சத்தில் சக்தி வாய்ந்தது எது?

எதன் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றால் அது அவரவர் செய்திட்ட பாவபுண்ணியங்களால் ஏற்பட்ட ஊழ்வினையாம் இயற்கையின் நியதிப்படியே எல்லா உயிர்களும் இயங்கிட அவற்றின் செயல் விளைவுகளால் தோன்றும் ஊழ்வினையாகிய முன்சென்ம பாவங்களின் தண்டனைகளிலிருந்து எவரொருவரும் கண்டிப்பாக தப்பிக்க எந்த வகையிலும் சாத்தியம் என்பதே உறுதியாக இல்லை.

ஆயினும் சிலர் இதனை அதாவது ஊழ்வினையை வெல்வதற்காக பொல்லா மாயை சூழ் கலியுகத்தின் இயல்பான மயக்கமுடைய சுகவாழ்வை விட்டு இல்லறம் விட்டு விலகி பக்தி, சித்தி மார்க்கம்தனை நாடி பலவிதமாய் பக்தி செய்தும், சித்திதனை அடைய பயிற்சிகள் செய்தும் அவரவரும் வினைக் குற்றங்கள் நீங்கிட பல முயற்சிகள் செய்திட்டாலும், பாவம்.  அவர்களெல்லாம் ஊழ்வினையின் பிடியினின்று தப்பிக்க முடியாது. என்ன செய்தாலும் அவர்தம் முன்ஜென்ம ஊழ்வினை கண்டிப்பாக அவரைப்பற்றி தொடரத்தான் செய்யும்.

ஆயின் முழுமையாக ஊழ்வினையின் பிடியினின்று தப்பிப்பதற்காக நல்ல குருவினை நாடி பண்புள்ள அந்த குருவின் உபதேசப்படி நடந்து அவர் தம்மால் ஊழ்வினை வாரா வண்ணமே காப்பினை பெறும் முயற்சியாக பலவிதமான யோகப்பயிற்சிகள், நடைமுறை பயிற்சிகள் எனவே தமது உடலையும், உயிரையும், பொறிபுலன்களையும் பயிற்சிகளால் கட்டுப்படுத்தி வைத்தாலும் அவரவர் செய்திட்ட ஊழ்வினை கடுகளவேனும் அவர் தம்மை தொடர்ந்து வந்து அவரை வீழ்த்திடத்தான் செய்யும்.

ஆதலினால் எந்த பயிற்சிக்கும், புலனடக்கத்திற்கும், விலகி நிற்றலுக்கும் கட்டுப்படாத ஊழ்வினைதனை முழுமையாக வென்றிடவே அவர்களெல்லாம் அறங்கள் என்றும் தருமங்கள் என்றும் அளவிலாது முன்வினைதனை போக்குமளவிற்கு செய்து தருமமே பிரதானமாக ஜீவதயவே உயிர்நாடியாக கொண்டு இக்கலியுகத்திலும் காப்புடனே தருமங்களை அளவிலாது செய்தும், ஜீவதயவினை உலகஉயிர்களிடத்து அளவிலாது காட்டி ஞானகுருவாய், சற்குருவாய் அமர்ந்து அருளுகின்ற குருராஜர் தம்மை பூரண சரணாகதி அடைந்து அவர்தம் அறதருமப் பணிகளிலே தொண்டுகள் தனையும் தொடர்ந்து தருமங்கள் செய்தும் வந்தால்தான் அவர்களது முன்சென்மவினைகள் அவர் தம்மை தொடராது முழுமையாக அவர் தம்மை
விட்டகலும்.

இவ்வுலக மக்களெல்லாம் அவரவர் வினைகளை வென்று கடைத்தேறிடவே இவ்வுலகினிலே வாழும் கலியுக ஞானமகா தேசிகனாய் ஆறுமுகனின் அவதாரமாய் ஞானிகள் எங்கள் அருட்புதல்வனாய் தோன்றி அளவிலாத தருமங்களுடன் முற்று பெற்றுயர்ந்த ஞானிகள் எங்கள் திருவடி பூசைகளை செய்து உயர் ஞானம் பெற்றும் மக்களையெல்லாம் ஞானவழி செலுத்துகின்ற கலியுகத்தின் உயர் ஞான குருநாதர் ஞானிகள் எங்களின் அன்பு செல்வன் அருள் செல்வன் ஞானயோகி அரங்க மகா தேசிகனே ஆவார்.

தேசிகனே தருமத்தின் துணைகொண்டு தீவினையாம் கர்மவினைகளை போக்கி அழித்து வாசி வென்று ஞானமடைந்திட்ட மகா ஞானியாவார். ஆதலின் அண்ணல் அரங்கர் தமை பயபக்தியுடன் வணங்கி போற்றி துதித்து அவர்தம்மிடம் சீடனாகி உபதேசம் ஏற்று அரங்கர் வழிதனிலே உபதேசப்படி நடந்து சென்று தர்மங்களை அறப்பணிகளை தொண்டுகளை செய்து செய்து அரங்கர் வழி நடக்கின்றவர்களுக்கு மட்டுமே அவரவர் செய்திட்ட முன்வினை பாவங்கள் ஒழிந்து அவர் தம்மின் முழுபாவங்களும் ஒழிந்து முழுமையான ஞானம் எனும் அழியாமை நிலைதனை அடைவர்.

வேறு எந்த வழியிலும் எந்த வகையிலும் எப்படி செய்திட்டாலும் அவரவர் ஊழ்வினை உறுத்தலினால் கண்டிப்பாக வெற்றியடையார். அரங்கன் அருள் இல்லையேல் அரங்கன் உடனிருப்பில்லையேல் ஊழ்வினை வெல்லுதல் அரிதாம் என்று அவரவர் பாவம் வென்று ஞானம் பெற்றிட உத்தம உபாயம் உரைத்து ஞானசூட்சும நூல் கூறுகிறார் மகான் கருவூர் சித்தர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.