21/12/2018

பொன். மாணிக்கவேல் மீது 15 போலீசார் புகார்...


சென்னை: 'மாநில, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்க வேல், பொய் வழக்கு பதிவு செய்யச் சொல்லி மிரட்டுகிறார்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில், 15 போலீஸ்காரர்கள் புகார் அளித்துள்ளனர்.

பொன் மாணிக்கவேல் மீது 15 போலீசார் புகார்...

தமிழக ரயில்வே, ஐ.ஜி., யாக பணியாற்றி வந்த, பொன் மாணிக்கவேல், நவ., 30ல் ஓய்வு பெற்றார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவையும், அவர் கூடுதலாக கவனித்து வந்தார்.அவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக, சென்னை உயர் நீதிமன்றம், ஓராண்டுக்கு நியமித்து உள்ளது.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும், கூடுதல், எஸ்.பி., இளங்கோ உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட போலீசார், டி.ஜி.பி., அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள புகார்:

அயல் பணி யாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகிறோம். எங்கள் பிரிவின் சிறப்புஅதிகாரியான, பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்குகளில், உரிய ஆவணங்கள், சாட்சி கள் இல்லாமல், சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டும் என, கூறுகிறார்.

மறுத்தால், 'உங்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்' என, மிரட்டுகிறார். எங்களுக்கு பணி மாறுதல் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று மாலை, டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பொன் மாணிக்கவேல் மீது, கூடுதல், எஸ்.பி., - டி.எஸ்.பி., - போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் தலைமை காவலர்கள் ஆகியோர்,டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரனை சந்தித்து, புகார் அளித்துஉள்ளனர். அதன் மீது, உரிய நடவடிக்கை எடுக்க, பரிசீலிக்கப்படும் என,கூறப்பட்டுள்ளது.

டி.ஜி.பி.,க்கு கடிதம்...

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு  இளமை துடிப்புடன் உள்ள போலீசாரை பணி அமர்த்துவற்கான வேலையை, பொன் மாணிக்கவேல் துவக்கி உள்ளார். 'இ - மெயில்' வாயிலாக, டி.ஜி.பி., மற்றும் மாவட்ட, எஸ்.பி., உள்ளிட்ட, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், '30 முதல், 50 வயதுக்கு உட்பட்ட, சிறப்பு எஸ்.ஐ., - தலைமை காவலர், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள், 46 பேரை, அயல் பணியாக, ஆறு மாதங்களுக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணி அமர்த்த வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.