24/12/2018

திருவனந்தபுரம் தமிழர் நகரம்...


1750 வரை திருவனந்தபுரம் மலையாளிகள் கைக்குப் போகவில்லை..

இதைக் கைப்பற்றிய மார்த்தாண்ட வர்மா தமிழ் அரச பரம்பரையான வேணாடு அரசர் குலத்தவன். அதாவது முழுத் தமிழன் இல்லையென்றாலும் அவனை மலையாளி என்று கூறமுடியாது.

இந்த வேணாட்டு அரசர்கள் காலங்காலமாக பாண்டிய நாட்டின் கீழ் ஆண்டு வந்தனர்.

சேரநாட்டின் பகுதியாகக் கூட என்றுமே இருந்ததில்லை.

1950 களில் மார்சல் நேசமணி திருவனந்தபுரம் இருக்கும் நெய்யாற்றின்கரை தாலுகாவில் தமிழர் பெரும்பான்மையை சான்றுகளோடு நிறுவி அப்பகுதியை தமிழகத்துடன் இணைக்க எவ்வளவோ போராடினார்.

30 தமிழர்கள் சுடப்பட்டு இறந்தனர்.
400 பேர் வரை கைதானார்கள்.
3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.

நேசமணி திருவனந்தபுரம் கிடைக்க தமிழர்கள் 60% வரை வாழ்ந்த நெடுமங்காடு தாலுகாவை விட்டுக் கொடுக்கவும் செய்தார்.

ஆனால் அவரால் கன்னியாகுமரியை மட்டுமே மீட்க முடிந்தது. (கேட்டதில் பாதிக்கும் குறைவு).

மலையாள மொழியானது 500 ஆண்டுகளுக்கு முன்னே உருவாகிய மொழி ஆகும்.

1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு (பாலக்காடு மாவட்டம்) அச்சகத்தில் அச்சடித்த முதல் மலையாள நூல்..

அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது (கால்டுவெல் குறிப்பு).

1650 எழுத்தச்சன் பச்சமலையாளம் என்ற மொழி உருவாக்கினார். இது செந்தமிழே.

1860 முதல் மலையாள இலக்கண நூல் எழுதப்பட்டது.

1900 வரை மலையாளிகள் தமிழும் படித்தனர்.

(பாவாணர், திராவிடத்தாய் நூலில்).

எடக்கல் எனுமிடத்தில் பழைய தமிழ் (பிராமி) எழுத்தில் 'ஓ பழமி' என்று எழுதியிருந்ததை மலையாளிகள் 'இ பழம' என்று மலையாளத்தில் எழுதியிருப்பதாக எவ்வளவோ திரிக்க முயன்றனர்.

இதற்கு ஐராவதம் மகாதேவன் உடந்தையாக இருந்தார்.

நல்லவேளையாக நடன காசிநாதன் அது தமிழே என்றும் அது தமிழ் தெய்வம் பழையோள் என்றும் நிறுவினார்.

ஆக மலையாளிகள் எந்த வகையிலும் தமிழரிடமுள்ள சான்றுகளுடன் போட்டி போட முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.