08/12/2018

External factor...


கடந்த பதிவை பார்த்த சிலர் external factor என்றால் வேற்று கிரகவாசியானு கேள்வி எழுப்பி இருந்தாங்க..

என்னுடைய புரிதலின் படி இந்த  external factor என்னவா இருக்கலாம்னு விளக்குறேன்.

மீண்டும் இதில் இருந்து துடங்கவே விரும்புகிறேன் இயற்கை மற்றும் மற்ற உயிர்கள் நிம்மதியாக இவுலகில் வாழவேண்டும் என்றால் ஆறறிவு கொண்ட இந்த மனித இனம் முற்றிலும் அழிக்கப்படவேண்டும்.

இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் அதன் படி நிலைகளையும் உணர்வுகளை வைத்து மட்டுமே பிரிக்க முடியும்.

உதாரணத்திற்கு ஒரு செல் உயிர்களான பாக்டீரியா சில ராசாயினங்களை உணர கூடியவை. ஒளிச்சேர்க்கை உயிரான Euglena என்னும் ஒரு செல் உயிரி வெளிச்சத்தை உணர்ந்து அதை கிரகித்து அதன் மூலம் உணவை உற்பத்தி செய்துகொள்ளும் வல்லமை வாய்ந்தது. இந்த நிலையில் உள்ள உயிர்களை உணர்வின் பால் கீழ் நிலையில் உள்ள உயிர்கள் என வகுக்கலாம். அடுத்தகட்டமாக இந்த உணர்வு படிநிலையில் நாம் தாவரங்களை பார்க்கப்போகிறோம் தாவரங்களுக்கு ரசாயனத்தை உணர்வது, வெளிச்சத்தை உணர்வது, சில தாவரங்களுக்கு தோடு திறன், வேர்கள் மூலம் ஒரு மரம் இன்னொரு மரத்திற்கு தகவல்களை பரிமாற்றிக்கொள்ளும் திறன் என பல சொல்லலாம். புல்லை நீங்கள் வெட்டும் பொது அது ஒரு வித ஹார்மோனை உற்பத்தி செய்து அருகில் இருக்கும் புற்களுக்கு சமிக்கை தருமாம். இதற்க்கு அடுத்தகட்டமாக சிறு பூச்சிகளை எடுத்துக்கொள்வோம், அவற்றிற்கு தோடு திறன், பார்வை, முகர்த்தல், கேட்டல் என பல திறன்கள் நம்மை போல் உண்டு. அதே போல் அடுத்த கட்டமாக விலங்குகள் மற்றும் பறவைகள் இவற்றிற்கும் பூச்சிகளுக்கு இருக்கக்கூடிய அணைத்து திறன்களும் அதை தாண்டிய சில திறன்களை சுற்றத்திற்கு ஏற்றவாறு பரிணமித்து வைத்துள்ளன.

எதையோ கூறவந்து சம்பந்தம் இல்லாததை விளக்குகிறேன் என எண்ணவேண்டாம். உணர்வுகளின் கட்டமைப்பை உணர்ந்தாள் மட்டுமே அந்த External factor பற்றி சிறிது விளக்க முடியும். இப்பொழுது இந்த படிநிலை படி பார்த்தல் ஒரு ஒரு செல் உயிரான பாக்டீரியாவால் அது வாழும் அதே சமூகத்தில் வாழும் ஓர் தாவரத்தை உணரமுடியாது. நீங்கள் இதை தாவரத்தின் அளவையும் ஒரு செல் உயிரின் அளவையும் வைத்து புரிந்து கொள்ள வேண்டாம். பாக்டீரியா அளவிற்கு அந்த தாவரம் இருந்தாலும் அந்த பாக்டீரியாவால் இந்த தாவரத்தை உணரமுடியாது. ஏன் என்றால் அதை உணர கூடிய எந்த விதமான ஒரு உறுப்பும் ஒரு செல் உயிரான பாக்டீரியாவிற்கு கிடையாது. பாக்டீரியாவில் உலகை பொருத்தமட்டும் அதனுடைய உலகில் அதுவே மேல் தட்டு. அதே போல் தாவரங்களால் அதை விட மேம்பட்ட உணர்வுள்ள எந்த ஒரு உயிர்களையும் உணர முடியாது. வெகு  சில மாமிச உண்ணி தாவரங்கள் மட்டுமே பூச்சிகளை உணர்ந்து உணவாக உண்ணும் திறனை கொண்டது. எனவே தாவர உலகை பொறுத்த மட்டும் அதன் உலகில் அதுவே மேல் நிலை. அதாவது தாவரங்கள் அந்த எண்ணத்தில் உள்ளன என கூறவில்லை. அவற்றை பொருத்தமட்டும் தாவரங்கள் மட்டுமே உலகம் மற்றும் அதனுடன் கீழ் நிலையில் உள்ள ஒரு செல் உயிர்களை உணர கூடியது. தாவரங்களுக்கு அது வசிக்கும் அதே உலகில் ஒரு சிங்கம் நடமாடுவது ஓர் பறவை தன மீது கூடு கட்டி இருப்பதையும் உணரும் அளவிற்கு உணர்வுகளை பெறவில்லை. இதே போல் இதற்க்கு மேல் நிலை தான் விலங்குகளும் மனிதனும். பெரிய வித்தியாசமில்லை இந்த மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரிக்க ஆறறிவை தவிர. இந்த ஆறறிவை தவிர மனித இனமும் மிருக இனமும் ஒரே வகையான உணர்வுகளையே கொண்டுள்ளன. (சொல்லப்போனால் சில மிருகங்கள் மனிதனையும் தாண்டிய பல உணர்வுகளை கொண்டுள்ளன).

எப்படி ஒரு செல் உயிர்க்கு அது வாழும் அதே சுற்றத்தில் இருக்கும் தாவரத்தை உணர உறுப்பு இல்லையோ, எப்படி ஒரு தாவரத்திற்கு அது வாழும் அதே நிலப்பரப்பில் வாழும் விலங்கையும் மனிதனையும் உணர உறுப்பில்லையோ, அதே போல் மனிதனுக்கும் அவன் வாழும் அதே நிலப்பரப்பில்  உள்ள அந்த external_factor ஐ உணரக்கூடிய எந்த ஒரு உறுப்பும் இல்லை என எடுத்துக்கொள்ளலாம். ஆம் ஒரு தாவரத்தின் அருகிலேயே ஒரு மாடு நிற்கும் அந்த தாவரத்தையே அந்த மாடு உண்ணும் ஆனால் அந்த தாவரத்திற்கு மாடை பற்றியும் தெரியாது நாம் தான் இந்த மாட்டின் உணவு என்றும் தெரியாது . அதே போல் நம் அருகிலேயே அந்த external_factor இருந்தாலும் அதன் உருவம் ஒரு ஒரு செல் உயிருக்கும் ஒரு புழுவுக்கும் உள்ள அளவு இருந்தாலும் சரி அதன் அளவு சராசரி மனிதனின் அளவு இருந்தாலும் சரி அதை உணர கூடிய உணர்ச்சி, உடல் உறுப்பு  மாந்தனிடம் இல்லை. ஏன் அந்த external_factor ஐ உணர கூடிய அந்த உறுப்பு நெற்றிக்கனாக இருக்க கூடாது ? என நீங்கள் கேட்கலாம். இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அது அல்ல இந்த கட்டுரையின் நோக்கம். ஏன் அந்த external_factor இந்த மானுட இனத்தை உருவாக்கியது எதற்கு இந்த ஆறறிவை தந்தது என்பதே. இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம் கீழ் நிலையில் உள்ள உயிரை மேல் நிலையில் உள்ள ஒரு உயிர் தான் உருவாக்கி இருக்க வேண்டுமா ? அனைத்து உயிர்களும் இயற்கையின் சுழற்சியில் தானே அதன் பரிணாம படி நிலையை அடைகின்றன.. அப்புறம் ஏன் மனித இனம் மட்டும் ஓரு external_factor என்னும் மேல் நிலையை சேர்ந்த ஒன்றால் உருவாக்க பட்டது என உளறுகிறாய் என கேட்கலாம்.

இதற்கான பதில், மனித இனம் இயற்கையாக உருவான ஒன்றே அனால் அதன் ஆறறிவு அதற்க்கு சொந்தமல்ல அதை தந்தது தான் அந்த external_factor . இது ஒன்றும் புது விடையம் அல்ல இதே விடையத்தை மனித இனம் இன்று அதற்க்கு கீழ் நிலையில் உள்ள தாவரங்கள், விலங்குகள் என அனைத்திலும் மரபணு மாற்றம் என்ற பெயரில் செய்து வருகிறது. தன்னுடைய வயிற்று மற்றும் முக்கியமாக அறிவு பசியை போக்க இயற்கை தாவிரங்கள் பலவற்றை GMO  என்று கூறி மூல கூறுகளை மாற்றியமைக்கிறது.  GMO கொசுக்கள் கூட உருவாக்கப்பட்டது. மனிதனாகிய மேல் நிலை உயிர்களால் மாற்றியமைக்கப்பட்ட இந்த கீழ் நிலை உயிர்கள் முற்றிலும் இந்த சூழலுக்கு எதிரானவை அதை மாசுபடுத்த கூடியவை. அதே போல் தான் மனித இனமும் ஒரு மேல் நிலை external_factor ஆள் மாற்றியமைக்க பட்டு ஆறறிவு என்னும் விஷம் பொருத்தப்பட்டு இங்கே உலாவ விடப்பட்டுள்ளது.

ரொம்ப simple ஆ சொல்லனும்னா மனித இனமே ஒரு ப்ராய்லர் கோழி போல தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.