22/01/2019

ஆலயநுழைவு ஆதரவாளர் சாந்து பட்டர்...


இந்த புகைப்படத்தில் இருப்பவர் தான் சாந்துபட்டர்.

1939 இல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடந்த ஆலயப் போராட்டத்தின் பின்விளைவுகளை தன் வாழ்நாள் முழுவதும் சந்தித்தவர்.

ஆலயதுழைவுக்கு எதிராக அப்போது மீனாட்சியம்மன் கோவில் பூசாரிகள் 13 பேரில் 12 பேர் வேலைநிறுத்தம் தொடங்க தனியாளாக கோவிலை நடத்தியவர்.

திருநெல்வேலியில் இருந்து 12 பூசாரிகள் வரவழைக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் அனுமதி வழங்கி கோவில் தொடர்ந்து நடக்க முக்கிய காரணம் இவரே.

1945 இல் மற்ற பூசாரிகளும் வேலைக்கு வந்துவிட்டனர்.

போராட்டம் நடத்தியோர் பெயர் வாங்கிக் கொண்டு போய்விட்டனர்.

பட்டியல் மக்களும் ஆலயத்திற்கு வந்து போக ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் இவரது குடும்பம் மட்டும் அவரது சமூகத்திலிருந்தே ஒரு தலைமுறைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இவரது மரணத்திற்கு பிறகே இவரது குடும்பம் ஒதுக்கலில் இருந்து மீண்டது.

இது பற்றி விரிவாக "லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில்" மானுடவியல் பேராசிரியராக இருக்கும் சி.ஜே. ஃபுல்லர், தனது Servants of the Goddess புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.