22/02/2019

தமிழர் வீடுகளில் திண்ணைகளின் பயன்பாடுகள்...


திண்ணை என்பது, மரபுவழி வீடுகள் மற்றும் அது போன்ற கட்டிடங்களில், வாயில் கதவுக்கு அருகிலோ அல்லது அவற்றின் உட்பகுதியில் சில இடங்களிலோ காணப்படுகின்ற மேடை போன்ற அமைப்புக்களாகும்.

சாலைகளை அண்டியுள்ள வீடுகளின் திண்ணைகள் பொதுவாகச் சாலைகளுக்குத் திறந்தே இருப்பது வழக்கமாதலால் பழங்காலத்தில் தூரப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கு உரிய இடமாகவும் இவை பயன்பட்டன. பழந் தமிழ் இலக்கியங்களில் இதற்கான சான்றுகளைப் பரவலாகக் காணமுடியும்.

உடன்பிறந்தோர் வந்தாலே விரட்டி அடிக்காக் குறையாக உபசரிக்கும் இக்காலத்து மனிதர்கள் இருக்கையில்,

வழிப்போக்கர்களும் தங்கி செல்ல ஓரிடத்தை ஒதுக்கிய பழந்தமிழர்கள் எத்தகைய சிறப்புடையவர்கள் ?

முன்னைய காலத்தில் போக்குவரத்துச் சாதனங்களின் போக்குவரத்து ஒழுங்கு மிகவும் அரிதாகவும், குக்கிராமங்களிற்கு முற்றாகவே அற்றுமிருந்தது.

ஆகையால் மக்கள் இப்படியான திண்ணைகளை மிக அதிகமாகப் பயன்படுத்தினார்கள். அப்போதெல்லாம் வழிப்போக்கர்கள் மிகவும் நேர்மையாகவும், களவுகளில் ஈடுபடாது தமது பயணங்களைத் தொடர்ந்தனர்.

இப்பொழுதெல்லாம் இப்படியான திண்ணைகளுமில்லை இவற்றில் வந்து தங்கிப்போகும் வழிப்போக்கர்களை நம்பி வீட்டுக்காரர்கள் வீட்டில் தூங்கக் கூடியதாக தமிழ்மக்களின் வாழ்க்கை முறையும் இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.