22/02/2019

அன்பு சக்தியும் படைப்பும்...


1. நீங்கள் விரும்பும் ஒன்றை உங்களிடம் கொண்டு வருவதானாலும் சரி , அல்லது உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை நீங்கள் மாற்ற விரும்பினாலும் சரி, அதற்கான செயல்முறை ஒன்றுதான்: கற்பனை செய்யுங்கள்.. உணருங்கள்.. பெறுங்கள்.

2. உங்கள் கற்பனை நீங்கள் விரும்பும் விசயத்துடன் உங்களை இணைக்கிறது. உங்கள் விருப்பமும், அன்பு உணர்வுகளும் காந்த சக்தியை உருவாக்குகின்றன. அந்தக் காந்த சக்தி உங்கள் விருப்பத்தை உங்களிடம் ஈர்த்து வருகிறது.

3. நீங்கள் உங்கள் விருப்பத்துடன் இனைந்து இருப்பதுபோல கற்பனை செய்ய வேண்டும். அதே நேரத்தில் , நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் விஷயங்கள் குறித்து அன்பாக உணர வேண்டும்.

4. நீங்கள் ஆழமாக விரும்பும் ஒரு விஷயத்தை உங்கள் இதயபூர்வமாக விரும்ப வேண்டும். ஏனெனில் ,விருப்பம் என்பது அன்பு உணர்வு. நீங்கள் நேசிப்பதை பெற , நீங்கள் அன்பை கொடுக்க வேண்டும்.

5. நீங்கள் விரும்பும் எந்தவொரு நேர்மறையான விசயத்தையும் கற்பனை செய்து , அதன் மீது அன்பு செலுத்தும் போது , நீங்கள் அன்பின் ஆற்றலை பயன்படுத்துகிறீர்கள்.. உங்கள் கற்பனையின் எல்லைகளைத் தகர்த்தெறிந்து , உங்களால் முடிந்த அளவுக்குச் சிறப்பான, மென்மையான விளைவைக் கற்பனை செய்யுங்கள்.

6. உங்களால் கற்பனை செய்ய முடிகின்ற எந்தவோர் ஆழமான விருப்பமும் ஏற்கனவே படைக்கப்பட்டு விட்டது. அது எதுவாக இருந்தாலும் சரி, ஒன்றை உங்களால் கற்பனை செய்ய முடிந்தால் , அது ஏற்கனவே படைப்பில் உள்ளது என்று பொருள்.

7. உங்கள் உரையாடல்களிலும் , உங்கள் என்னங்ககளிலும் , "_____நடந்தால் எப்படி இருக்கும்" என்று கூறி , நீங்கள் விரும்பும் விசயங்களைக் கொண்டு அந்த வாக்கியத்தின் முதற்பகுதியை பூர்த்தி செய்யுங்கள்.

8. நீங்கள் கற்பனை செய்வதற்கு உதவும் சில பொருட்களைப் பயன்படுத்துங்கள், துணிகள் , படங்கள், புகைப்படங்கள், உங்கள் விருப்பத்திற்குப் பொருத்தமான பொருட்கள் ஆகியவை உங்களைச் சூழ்ந்திருக்கும்படிச் செய்யுங்கள். அப்போது , நீங்கள் விரும்பும் விசயங்களை நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டதாக உங்களால் உணர்வுப்பூர்வமாகக் கற்பனை செய்ய முடியும்.

9. உங்கள் புலன்களும் உங்கள் கற்பனைக்கு உதவும் பொருட்கள்தான். எனவே, நீங்கள் விரும்புவதை நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டதாக உணர்வதற்கு உங்கள் புலன்களையும் தொட்டுப் பாருங்கள். ருசித்துப்பாருங்கள், முகர்ந்து பாருங்கள், கண்களால் பாருங்கள். காதுகளால் கேளுங்கள்.

10. படைப்புச் செயல்முறையில் நீங்கள் உங்கள் பங்கை ஆற்றி முடிந்தவுடன், படைப்பு நிறைவேறிவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களால் பார்க்க முடியாவிட்டாலும் கூட , நீங்கள் விரும்பிய அந்த விசயத்தைக் கொண்ட ஒரு புதிய உலகிற்குள் நீங்கள் இடம் பெயர்ந்து விட்டீர்கள். அதை நீங்கள் நிச்சயமாக பெறுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதற்காக நன்றி சொல்லுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.