07/02/2019

பாஜக மோடி இராணுவத்தையும் இராணுவ வீரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை...


தற்போது போதிய நிதி இல்லாததால் ராணுவ வீரர்களுக்கு போக்குவரத்து செலவிற்கு பணம் தற்போது கொடுக்க இயலாது - ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புதுறை அமைச்சகம்...

பணம் வந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் - The Principal Controller of Defence Accounts வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாதுகாப்புதுறை அமைச்சகம்..

”ஜிஎஸ்டியில் அத்தனல லட்சம் கோடி வரி வாங்கியிருக்கோம் இத்தன லட்சம் கோடி வரி வாங்கிருக்கோம், வரி கட்ரவங்க அத்தன மடங்க உயர்ந்துள்ளார்கள் இத்தன மடங்கு உயர்ந்துள்ளார்கள் என்றாலும் கூறியவர்கள் அந்த பணத்தை யாருக்கு செலவு செய்கின்றார்கள் , விளம்பரத்திற்கும் விமான செலவிற்கும் மட்டும் தானா நாட்டை காக்கும் ராணுவீரர்களுக்கு இல்லையா என எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றது.

விமர்சனத்தை தொடர்ந்து The Principal Controller of Defence Accounts இணையதளத்தில் இருந்து அந்த அறிவிப்பு நீக்கப்பட்டது.

மேலும் இதனை தொடர்ந்து இது தற்காலிக நிதி பற்றாக்குறைதான், சரி செய்யப்படும் என பாதுகாப்புதுறை அமைச்சக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இவ்வாறு நடப்பது யதார்த்தமானதது தான் ஊடகங்கள் அதை தேவையில்லாமல் பெரிதாக்கக் கூடாது இது அடிப்படையற்றது என விளக்கம் அளித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.