15/02/2019

டிரைவருக்கு திடீர் மாரடைப்பு... தன்னுயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றினார்...


 திருவள்ளூரில் இருந்து சென்னை வரும் விரைவு அரசுப் பேருந்தை இன்று அதிகாலை அரசுப் பேருந்து ஊழியர் ரமேஷ்  (47 வயது) ஓட்டி வந்தார். மனிதனின் சராசரி வயதான இந்த வயதில் ரமேஷூக்கு திடீரென மாரடைப்பு அறிகுறி தென்பட்டு அவருக்கு நெஞ்சடைத்தது போன்றதொரு உணர்வு தோன்றியுள்ளது.

சிறிது நேரத்தில் அந்த உணர்வு மேலோங்கி நெஞ்சம் முழுவதும் அடைத்துள்ளது. தனது மாரடைப்பை முற்றிலுமாக உணர்ந்த டிரைவர் ரமேஷ், மிகவும் சமயோஜிதமாக யோசித்து.

எப்படியேனும் பேருந்தில் உள்ள பயணிகளை காப்பாற்றிவிட வேண்டும் என்கிற நோக்கில், பேருந்தை மெதுவாக இயக்கிச் சென்று சாலையின் ஒருபுறமாக நிறுத்திவிட்டார்.

ஆனால் துரதிர்ஷ்ட வசமாக, பேருந்தை நிலைநிறுத்திய கணமே அவரது மூச்சும் நின்றுவிட்டது. தனது மூச்சியக்கம் நின்றதும் அந்த டிரைவர், தான் இயக்கிவந்த  பேருந்து ஸ்டியரிங்கின் மீது தலைகவிழ்ந்தபடி சரிந்தார்.

பதறிப்போன மக்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றமர். அங்கு அவர் உயிர் பிரிந்துவிட்டார் என்பதை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.