09/04/2019

கள்ளக்காதலர்கள் அபிராமி - சுந்தரம் நேருக்கு சந்திப்பு.. கோர்ட் வளாகத்தில் பரபரப்பு...


சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர் விஜய். தனியார் வங்கியில் பணியாற்றுகிறார். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தன.

அபிராமிக்கு அதே பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. இதைதொடர்ந்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அபிராமி, சுந்தரத்தை வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த விஷயம் விஜய்க்கு தெரிந்ததும், அபிராமியை கண்டித்துள்ளார். இதனால் அபிராமி, தனது காதலன் சுந்தரத்துடன் வாழ முடிவு செய்தார். இதற்காக, கணவன் மற்றும் குழந்தைகளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதற்கு சுந்தரமும் உடந்தையாக இருந்துள்ளார்.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, காதலன் சுந்தரத்தின் ஆலோசனைபடி தனது 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். மேலும் இதில் கார்னிகா துடிதுடித்து இறந்தார். ஆனால் மகன் அஜய் இறக்காததால், தலையணையால் முகத்தை அழுத்தி கொடூர கொலை செய்தார்.

பின்னர் காதலனுடன் அபிராமி தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸார் பிடித்தனர். பின்னர் காதலன் சுந்தரத்தையும்  கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, தற்போது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணைக்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபிராமி, அவரது காதலன் சுந்தரம் ஆகியோரை ஒரே வேனில் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.

பின்னர் நீதிபதி வேல்முருகன் முன் 2 பேரையும் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.