09/04/2019

கருணாநிதி வீட்டு சிறை குறித்து விசாரணை.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி...


அரசியல் ஆதாயத்திற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறையில் வைத்தவர் ஸ்டாலின் என தமிழக முதல்வர் பழனிசாமி பேசி உள்ளார்.

நீலகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று (ஏப்.,08) பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தான் அரசியலில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் கருணாநிதியை 2 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைத்திருந்தார் ஸ்டாலின்.

அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்திருந்தால் நன்றாக பேசி இருப்பார் என அவர்களின் கட்சியினரே கூறுகிறார்கள். கருணாநிதிக்கு ஏற்பட்ட நிலை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் பொய் பேசுகிறார். தொடநாடு விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

நீலகிரி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எதுவும் செய்யவில்லை. நீலகிரி மாவட்டத்தை முன்னிலைப்படுத்த பல திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா என்றார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ஸ்டாலின் கூறி வரும் நிலையில், கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.