05/04/2019

மின்னல் எப்படி உருவாகிறது...


விண்வெளியில் நாம் ஆச்சரியபட கூடிய விடயங்கள் இன்னும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

அவற்றில் ஒன்று தான் மின்னல்...

மழை காலங்களில் மின்சக்தியின் தீப்பொறி வடிவத்தை தான் மின்னல்
என்போம்.

ஒரு நெருப்பு பொறி உருவாக.. மின்சக்தி குறிப்பிட்ட ஒரு மின்னழுத்த எல்லையை மீற வேண்டும்.

மின்னல் காற்றின் மூலமாக இரு மேகங்களுக்கிடையிலோ பூமிக்கோ கடத்தப்படுகின்றது. ஆனால், காற்று ஓர் அரிதிற்கடத்தி. சூரியனில் இருந்து வரும் கொஸ்மிக் கதிர்கள் காற்றுடன் மோதும் போது. காற்றினை அயனாக்கம் செய்து மின்னேற்றங்களை தூண்டும்.

சக்தி பகுப்பினால் ஏற்படுத்தபடுகின்ற
மின்விளைவு மிக அதிகம், அதாவது அதிகளவு சக்தி காலப்படும். சில நேரங்களில் 100,000 வோல்டினை விட
கூடியளவு அழுத்தத்தினை உருவாக்க கூடிய சக்தி காலப்படும்.

கடல் மற்றும் ஏனைய நீர்தேக்கங்களிலிருந்து நீரானது சூரியனின் வெப்பத்தினால் நீராவி நிலைக்கு மாற்றபட்டு மேலெழுந்து மேகங்களை அடைகின்றது. இந்த நீராவி மேலே செல்லும் போது வளிமண்டல அமுக்கம் குறைவதனால் நீராவி விரிவடையும், இதனால் நீராவி குளிரடையும்.

மழை மேகத்தில் காணப்படும் அணுக்கள் உராய்வு, சூரியனிலிருந்து வரும் கொஸ்மிக்கதிர் போன்ற காரணிகளால் ஏற்றம் பெரும். முகில் கூட்டங்களில் மேல் பகுதி ஒரு வகை ஏற்றமும் கீழ் பகுதிக்கு எதிரான ஏற்றமும் பெரும். இவ்வாறு, பெரும் மின்னேற்றம் அதிகமாகும் போது எதரி எதிர் ஏற்றங்கள் கொண்ட முகில் கூட்டம் அருகருகே வரும் போது மின்னேற்றம் ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் பாயும். இவ்வாறு பாயும் போது தீப்பொறி உருவாகும்.

மின்னலானது பூமியை நோக்கி
பயணித்து மனிதர்கள், விலங்குகளையும் தாக்கும். மின்னல் பூமியினை நோக்கி எறியும் காரணமாக கவர்ந்திழுக்கப்படும். மின்னலினால் ஏற்படும் பாதிப்பு மழைகாலங்களில் அதிகம்.

மின்னல் உருவாகும் போது, மரங்கள்
மற்றும் குடிசைகளுக்கு கீழேயோ,
அருகிலோ அல்லது சிந்த வண்ணமோ இருக்க கூடாது. இவை ஈரளிப்பாக இருக்கும் போது மரத்தின் உச்சியிலிருந்து அடியை நோக்கி மின்னோட்டம் பாயும், இந்த வேலையில் நாம் அருகிலோ மரத்தை தொட்ட வண்ணமோ இருந்தால் எம்மூடாக மின்னோட்டம் பாய்ந்து புவியை அடையும்.

மின்னலின் போது நிலத்தில் கிடையாக படுக்கவோ, மின்சாதன பொருட்கள், தொலைபேசி என்பனவற்றை பயன்படுத்தவோ கூடாது. நாம் காணும் அநேகமான மின்னல்கள் புவியை தொடுவதில்லை ஆனால் அவை மேகம் காற்று என தொடர்ந்து தடத்தினை அமைத்து பயணிக்கும்.

நடக்கும் போது அல்லது படுத்திருக்கும்
போது அல்லது கால்களை அகற்றி
வைத்திருக்கும் போது கிட்டத்தட்ட 1
மீட்டர் இடைவெளி காணப்படும் போது அழுத்த வித்தியாசம் காரணமாக மின் எம்மூடாக பாயக்கூடும்.

இதனால் தான் கால்நடைகள் அதிகளவு மின்னல் தாக்கத்தால் பலியாகின்றன.

இடிமின்னலிருந்து பாதுகாப்பு பெற
இடி தாங்கி பயன்படும்.

மாடி கட்டடங்களில் அதிகமாக இடி தாங்கி பொருத்தபட்டிருக்கும், இடி முழக்கத்திலிருந்து மின்சாதன பொருட்களை பாதுகாப்பதற்காக
பொருத்தப்படுகின்றது.

இங்கு மின்சாதனத்தை நோக்கி வரும்
மின்னை பூமியிற்கு திசை திருப்புவதே இதன் தொழில்.

இதற்காக பூமியை நோக்கி செப்பு கம்பினை பயன்படுத்தி கொண்டு செல்லப்படும். இறுதில் தடிப்பு கூடிய செப்பு கீற்று பயன்படுத்தப்படும்.

இங்கு தடையை குறைக்க தடிப்பமான செப்பு பிரயோகப்படுத்துவார்கள். உச்சியில் கூர்மையான உலோக அமைப்பு பயன்படும். ஏனெனில்
கூர்மையான அமைப்பு ஏற்றங்களை அதிகளவு கொண்டிருக்கும். இலகுவாக எதிர் ஏற்றத்தை கவரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.