02/07/2020

காவல்துறை உங்கள் நண்பன் என்றால் அதற்கு முழு தகுதியானவர்கள் சிங்கப்பூர் காவலர்கள்...


இவர்கள் சாமானிய மனிதர்களிடமும் அன்பாக பழகக் கூடியவர்கள். யாரிடமும் ஆபாச கெட்டவார்த்தைகள் பேச மாட்டார்கள். முக்கியமாக இவர்கள் லஞ்சம் யாரிடம் வாங்க மாட்டார்கள்.

கடைகளில் வாங்கும் பொருள்கள் மற்றும் சாப்பிடும் உணவுகளுக்கு கட்டாயம் பணம் கொடுத்து விட்டுச் செல்வார்கள். யாரையும் உடனே கையை நீட்டி அடித்துவிட மாட்டார்கள்.

ஒருவர் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் சட்டத்தை தன் கையில் எடுக்க மாட்டார்கள். முறையாக நீதிமன்ற தீர்ப்பை மதிப்பவர்கள் குறிப்பாக இங்கு லாக்கப் மரணங்கள் நிகழ்வது இல்லை.

சிங்கப்பூர் காவலர்கள். பசி என்று கேட்டால் உணவு வாங்கித் தருவார். நாம் வீட்டிற்க்கு செல்வதற்கு பணம் இல்லையென்றாலும் பேருந்துகளில் செல்வதற்கு உதவி புரிவர். அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்சை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்து தருவார்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக சுற்றிப்பார்க்க இரவு பகல் பாராமல் பாதுகாப்பு வழங்குகின்றனர்.

நம்மிடம் ஏதாவது கேள்வி கேட்கும் முன் அடையாள அட்டையை காட்டிவிட்டு தான் கேள்வியே கேட்பார்கள். எந்த நிலையில் இருக்கிறோமோ அதே நிலையில் இருந்தே பதில் கூறலாம்.

சிங்கப்பூர் காவலர்களின் நற்பண்புகள் பற்றி சொல்வதற்கு இன்னும் இடம் தேவைபடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.