22/07/2020

EIA - EIAdraft2020 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் (EPA) கீழ் உள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) செய்வதற்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்து உள்ளார்கள்...



EIA draft 2020 வெளியிடப்பட்டுள்ளது...

இதில் சில கருத்துக்கள் நேர்மாறாக உள்ளது...

அதாவது...

1.  நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு கிளியரன்ஸ் சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளலாம்..

2. பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது..

3. நிறுவனத்தில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் பொதுமக்கள் அதை சுட்டிக்காட்ட முடியாது அந்த நிறுவனமோ அல்லது அரசாங்க அதிகாரிகள் தான் அதை சுட்டிக்காட்ட முடியும்..

4. மத்திய அரசாங்கமோ அல்லது மாநில அரசாங்கமும் ஒரு நிறுவனத்தை Strategic என்று குறிப்பிட்டிருந்தால் அதன் மீது கருத்து சொல்ல பொதுமக்களுக்கு அதிகாரம் இல்லை..

5.Border area LAC பகுதிகளிலிருந்து100 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்படும் நிறுவனங்களுக்கு பொதுமக்கள் கருத்து கேட்க தேவையில்லை..

6. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிக்கையை 6 மாதத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை இப்பொழுது 12 மாதத்திற்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டுள்ளது..

7. ஒரு நிறுவனத்தில் அனுமதி பெற்று கட்டிடம் கட்டுவதற்கான நில அளவு முன்பு இருந்ததை விட 8 மடங்கு அதிகப்படுத்த பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.