29/08/2020

ஜோதிடமும் நியூமராலஜியும் நவரத்னமும்...



ஒருவரது பிறந்த தேதிக்கு ஏற்றவாறோ பிறந்த ராசிக்கு ஏற்பவோ கண்ணை மூடிக் கொண்டு ரத்னங்களை வாங்கி போட்டுக் கொண்டால் வேலை செய்துவிடாது பலன் தந்துவிடாது என்பது என் அனுபவம்.

ஏன் என்றால் ஜெம்ஸ் கடையில் சென்று அவர்கள் நியமித்திருக்கும் (சம்பளத்திற்கு ஜோசியராம்... என்ன கொடுமை?) ஜோசியரிடம் ஜாதகத்தை காட்டினால் அவர் சிபாரிசு செய்யும் கல்லை அந்த கடைக்காரர்கள் தருகிறார்கள்.

ஜாதகத்தை பார்க்கும்போது பிறந்ததேதி 9 என்பதற்காக நாம் பவளம் அணிந்து விடக்கூடாது.

ஜாதகத்தில் லக்னம் மிதுனமாக இருந்துவிட்டால் அது எதிர்விளைவாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

ஏதிரிகள் தொல்லை. கடன்பிரச்சனை தோல்நோய உடல் உஷ்ணம் அதிக கோபம் போன்றவற்றை மிதுன லக்னத்தார்க்கு உண்டு பண்ணும்.

ஏனென்றால் பவளத்திற்கு உண்டான கிரகம் செவ்வாய். மிதுன லக்னத்திற்கு செவ்வாய் ருணரோக ஸ்தானாதிபதியாக ஆறுக்குடையவனாக கடன் எதிரியை உண்டு பண்ணுவதாக வருவதால் பவளம் அணிவது பிரச்சினையையே உண்டு பண்ணும்.

ஒரு ஜாதகத்தில் சுக்கிர திசை நடக்கும் போது நீலக்கல் அணிவதும் சந்திரதிசை நடக்கும் போது கோமேதகம் நீலம் அணிவதும் அதிக மனக்குழப்பத்தை உண்டு பண்ணும். பெண்களால் கெட்ட பெயர் அவமானத்தை ஏற்படுத்திவிடும்.

சுக்கிரதிசை நடந்த அன்பர் ஒருவர் மகரராசிக்கு நீலக்கல் அணிகிறேன் என கடையில் வாங்கி அணிந்தார்.

அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என அவர் நம்பினார். நடந்ததோ வேறு. அலுவலகத்தில் வேலை செய்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அலுவலகத்தில் கெட்ட பெயர் உண்டானது.

சுக்கிரன் சனி இணைவு அதிக காம உணர்வை உண்டாக்கும். சுக்கிரன் சந்திரன் இணைந்தால் இது இன்னும் அதிகம். பலருடன் தொடர்பு உண்டாகும்.

ராகு, சுக்கிரன் இணைவு ஆள் தராதரம் பார்க்காமல் செக்ஸ் வெறி பிடித்தவர்களாக இருப்பர். தொழிலை மறந்துவிட்டு இதே வேலையாக அலைவார்கள்.

இதனை சரி செய்ய நவரத்தின பரிகாரம் சிறந்ததாகும்.

அதற்கு நேர்மாறான எண்ணங்களை ஒழுக்கத்தை உண்டாக்கும் நவரத்னங்களில் ஒன்றை ஜாதகப்படி அணிய வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.