03/09/2020

41F நம்பர் பஸ்ல ஒரு வயதான அம்மா வள்ளுவர்கோட்டம் ஸ்டாப்ல ஏறி மந்தைவெளிக்கு டிக்கெட் எடுத்தாங்க...


கூட்டம் அதிகமா இருந்ததால நின்னுக்கிட்டே வந்த அந்த அம்மா மீது பாவப்பட்டு கண்டக்டர் அவர் சீட்டுல இடம் கொடுத்து உக்கார சொன்னார் !

முன்னாடி எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்துட்டு அவர் சீட் நோக்கி வரும்போது அந்த அம்மா அலறுனாங்க !

என்னம்மான்னு அவர் கேட்டாரு ?? எவனோ கழுத்துல இருந்த செயின்ன திருடிட்டான்னு அந்த அம்மா அழுதாங்க !

அந்த கண்டக்டர் பதட்டபடாம சுத்தி பாத்தாரு !

அந்த அம்மா கிட்ட உங்க செயின் நிச்சயமாக திரும்ப கிடைக்கும் பதட்டபடாதீங்க.., பயப்படாதீங்கன்னு ஆறுதல் சொன்னார் !

அடுத்து வந்த எல்லா ஸ்டாப்லயும் பஸ் நின்னது.. சில பேர் ஏறுனாங்க.. சில பேர் இறங்குனாங்க !

ஆனால் கண்டக்டர் தேடவே இல்லை !

இந்த அம்மாவுக்கு பயம் அதிகமாகி கண்டக்டர்கிட்ட கேட்டாங்க.. என்ன கண்டக்டர் தம்பி செயின் கிடைக்குமுன்னு சொன்னீங்க.. ஆனால் இது வரை அதுக்காக நீங்க எதுவுமே பண்ணலையேன்னு கேட்டாங்க !

அந்த கண்டக்டர் அதுக்கு அமைதியா சிரிச்சிகிட்டே உங்க செயின் 1நிமிஷத்துல கிடைக்க போகுதுன்னு புதிர் போட்டார் !

அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல ???

அந்த பஸ் டிரைவர் அடுத்த ஸ்டாப்ல நிறுத்த பஸ் ஸ்லோவ் பண்ணும்போது கண்டக்டர் டபுள் விசில் கொடுத்தார் !

பஸ் அந்த ஸ்டாப்ல்ல நிக்காம மூவ் ஆகிடுச்சு !

அந்த சமயம் பார்த்து ஒரு குரல்.. யோவ் கண்டக்டர் பஸ் ஸ்டாப்ல நிக்காம போகுது"ய்யா.. நான் இந்த ஸ்டாப்ல தான் இறங்கணும்.. பஸ்ஸ நிறுத்த சொல்லுய்யான்னு அந்த அம்மா முன் சீட்டு பக்கத்துல இருந்து ஒரு குரல் !

கண்டக்டர் இப்போ அந்த செயின் பறிகொடுத்த அம்மாவை பார்த்து சிரிச்சிகிட்டே சொன்னாரு !

அம்மா உங்க செயின் கிடைச்சாச்சின்னு !

சொல்லிட்டு அந்த ஸ்டாப்ல நிறுத்த சொன்ன அந்த ஆளை செக் பண்ணாரு !

அவன்கிட்ட தான் செயின் இருந்தது.. அந்த செயின் வாங்கி அந்த அம்மாகிட்ட கொடுத்துட்டு அந்த திருடனை பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சாரு கண்டக்டர் !

இப்போ அந்த அம்மாவுக்கு ஒரே ஆனந்தம்... அதோட ஆச்சரியமும் கூட !

அதெப்படி அவன் திருடன்"னு அவ்ளோ துல்லியமா கண்டுபிடிச்சிங்கன்னு கேட்டாங்க !?

அதுக்கு அந்த கண்டக்டர் அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்தான் அவனை காட்டி கொடுத்ததுன்னு சொன்னாரு !

அப்படி என்னப்பா அந்த ஸ்டாப் பேருன்னு அந்த அம்மா ஆர்வமா கேட்டாங்க !?

கண்டக்டர் அந்த ஸ்டாப் பேர சிரிச்சிகிட்டே சொன்னாரு !

அது அண்ணா அறிவாலயம்"ன்னு !

  🤣🤣🤣

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.