02/11/2020

சோழர் மண்டலம் திருச்சியருகே கொத்தமங்கலம் அடர்ந்த காட்டில் சோழர்கட்டிய உலகில் எங்கும் கண்டிராத கலங்கரை விளக்கு ஆலயம்.கி.பி 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம், கவனிப்பாரற்று பாழடைந்து முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது...

 


திருச்சி அருகே இருக்கும் “கொத்தமங்கலம்” என்ற ஊருக்கு அருகில்  ஒரு அடர்ந்த காடு!. 

ஒத்தையடி பாதையில் முகத்துக்கு நேராக விழுந்த முட்களை விலக்கிச் சென்று கொண்டே இருந்தால் தூரத்தில் ஒரு அற்புதம் தெரிந்ததை கண்ணல் காணலாம்.ஆம். அதுதான் அந்த கலங்கரை விளக்கம் போன்ற சோழர் காலத்திய கோயில். இதுவரை இது போன்ற வடிவில் யாருமே பார்த்திராத கோயில் அந்த காட்டில் தன்னந்தனியே யாராவது தன்னை பார்க்க வருவார்களா என்ற ஏக்கத்தோடு நின்று கொண்டிருக்கிறது.

அடிப்பகுதி கருங்கல் கட்டுமானத்துடம் மேல் பகுதி முழுக்க வட்ட வடிவில் செங்கல் கட்டுமானம்! கும்பகோணம் அருகிலும் ஒரு கோயில் உள்ளது ஆனால் இந்த வடிவில் இல்லை! தூண்களில் அவ்வளவு வேலைப்பாடு. செய்தவன் இந்த நிலையை கண்டால் கண்ணீர் வடிப்பான். கருங்கல் முழுக்க உத்தம சோழன், இராஜராஜன், குலோத்துங்கன் கல்வெட்டுகள். உள்ளே சுவர் முழுக்க சோழர் கால ஓவியங்கள் சிதிலமடைந்த நிலையில். வெளியே பெருமாள் அனாதையாக மரத்தின் நிழலில்.

ஏன் இப்படி இருக்கு? தமிழ்நாட்டுல ஆயிரம் கோயில்கள் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு கோயில இது வர பாத்தது இல்லையே! இத எதுவும் பண்ணி காப்பாத்த முடியாயா? என்று நண்பர்கள் கேட்க. இல்ல நான் அஞ்சி வருசம் முன்னாடியே வந்து விசாரிச்சிட்டேன்.. ஊர்ல ஏதோ சாதி பிரச்சனையாம். அவங்க இங்க வரமாட்டாங்களாம் இவங்க அங்க போக மாட்டாங்களாம்.

இதுல பலி கெடா நம்ம கோயில் தான். இத சும்மா பத்தோடு பதினோராவது கோயிலா மட்டும் பாக்காதிங்க. தஞ்சாவூர் கோயில் எப்படி கல்லுல பெருசோ.. இந்த கோயில் செங்கல்ல பெருசு.. இத வந்து பாக்க தான் நாதி இல்ல பாவம்!  இடிந்து கிடந்த அந்த கோயிலில் புதைந்து கிடந்த இராஜராஜனின் கல்வெட்டுகள் தான் மனதை பிசைந்தது!கண்களில் நீர்தான் வரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.