15/04/2021

கிளியோபட்ரா.....

 


வரலாற்று பேரழகிகளின்  பட்டியலில் தன் பெயரை என்றும் நிலைத்திருக்க செய்தவள்....

பாலில் குளிப்பால்... பல வண்ணங்களில் மை தீட்டி கண்களாலே பலரை வசியம் செய்யும் கொள்ளை அழகுக்காரி....

முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துபவள் என்றெல்லாம் வரலாறு அவளை வர்ணிக்கிறது....

எந்த அளவு வரலாற்றில் வர்ணிக்கபட்டாலோ  அதே அளவிற்கு தூற்றவும் பட்டால் ....

அவளது வாழ்வு மர்மங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தது......

அவளின் அழகால் எகிப்து.. ரோம்... கிரேக்கம் வரலாரே மாறி போனது....

எகிப்து பேரரசியாக இருந்தாலும் கிரேக்க பேரரசர் அலெக்ஸ்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவழியை சார்ந்தவள்...

தன்னை கிரேக்கர் என்று சொல்வதையே விரும்பியவள்......

எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி என பிரகனபடுத்தி கொண்டவள்.....

11 மொழிகளை சரளமாக பேசக் கூடியவள்..... அவள் பேச்சுக்கு மறு பேச்சில்லை.....

தனது 14 ஆம் வயதில் இருந்தே தந்தையுடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டாள்..

தனது 18 ஆம் வயதில் தந்தை இறந்து விட எகிப்தின் அரசியானாள்...

எகிப்து நாட்டு  வழக்கப்படி அரசி மட்டுமே ராஜ்ஜியத்தை ஆள முடியாது.. அரச வழக்கப்படி தனது தம்பி 13 ஆம் தாலுமியை திருமணம் செய்து கொண்டாள்....

எகிப்து நாட்டில் பெரும் போர் படைகள் கிடையாது.. எகிப்தில் தன்னகத்தே கொண்ட நைல் நதியின் செழிப்பு எகிப்தில் செல்வத்துக்கு பஞ்சமில்லை...

அதனால் எதிரிகளுக்கு எப்போதுமே எகிப்து மீது ஒரு கண் உண்டு...

எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க எண்ணிய கிளியோபட்டரா அப்போது பெரும் படை பலமுடன் திகழ்ந்த ரோம் பேரரசர் ஜுலியட் சீசரை காதலிப்பது என முடிவெடுத்தால்... முதல் பார்வையிலே அதில் வெற்றியும் பெற்றாள்... அப்போது கிளயோபட்ராவுக்கு வயது 21... சீசருக்கு வயது  54... இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்...

இதற்கிடைய தன் முன்னால் கணவன் 13 ஆம் தாலு மி மர்மமரணம் அடைய  சந்தேகம் கிளியோபட்ராவின் மீது விழ்ந்தது... கிளியோபட்ராவே கொலை செய்து விட்டதாகவும் வரலாறு சொல்கிறது....

அதன்பின் தன் காதலியை சீசர் எகிப்திலிருந்து ரோமிற்கு அழைத்து வந்து விட ... ரோமானியர்களுக்கு இது பிடிக்கவில்லை... அதிகார போட்டியில் சீசர் கொல்லபட (ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டியில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் இடைய ஆன சண்டையில் இனியும் ரோமில் இருந்தால் ஆபத்து என உணர்ந்து எகிப்திற்கு தப்பினாள்...

இந்நிலையில் ரோமில் ஆட்சியை கைப்பற்றிய ரோமானிய தளபதி மார்க்  ஆண்டனியை தனது தந்திரத்தால் காதல் வலையில் வீழ்த்தி மணந்து கொண்டால்... இந்த திருமணத்தில் அவர்களுக்கு 3 குழந்தைகள்... இந்த இடைபட்ட காலகட்டத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதர்களை கொன்று எகிப்தில்  தன்னை தவிர  ஆட்சியில் வாரிசுகளே இல்லாமல் பார்த்துக் கொண்டால்...

இந்நிலையில் ஆட்சியை பறிகொடுத்த சீசரின் வாரிசுகளால் எகிப்துக்கு ஆபத்து வந்தது...

சீசரின் வாரிசான அகஸ்டஸ் எகிப்து மீது போரிட்டு கிளியோபட்ராவையும் அவளின் வாரிசுகளையும் சிறைபடுத்தினான்... போரில் தோற்ற ஆண்டனி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டான்..

சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோ பட்ரா பாலைவனங்களில் இருந்த பாம்பை தீண்ட செய்து மரணித்தாகவும்... சிலர் அழகே உருவான அவள் பாம்பு திண்டினால் உடனே மரணம் நிகழ்வதில்லை மாராக அது ஒரு மரண போராட்டத்தை உருவாக்கி தனது அழகு அலங்கோலமாகி விடும் என்பதால் எகிப்தில் உள்ள ஓபி யும் எனும் கடுமையா விழத்தை உண்டு மரணித்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள்  கூறுகிறார்கள்.....

அப்படி மரணிக்கும் போது கிளியோபட்ராவுக்கு  வயது 39...

அழகே உருவான அவளின் கல்லரை வாசகம் இது தான்......

உலகத்திலே அழகான பிணம் இங்கே உறங்குகிறது... நல்லவேளை அவள் பிணமாகிவிட்டாள். இல்லையென்றால் ரோமாபுரி ராஜ்ஜியமே இந்த கல்லரையில் உறங்கியிருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.