14/04/2021

மீண்டும் சொல்கிறேன். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் ஒருபோதும் கட்டாயமாக்கப்படாது...

 


Dr. கோ. பிரேமா MD(Hom)...

இன்றைய பிரதமமந்திரி முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு பிறகு கொரோனா நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு சில விதிகளை சொல்லியிருக்கிறது. 

அதில், 45வயதிற்கு மேலுள்ளவர்கள் தடுப்பூசி போட அரசு அறிவுரை செய்கிறது என்பதை, 45+ அனைவரும் போடவேண்டும் என ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி சில ஊடகங்கள் சொல்கிறது. 

அனைவரும் போடவேண்டும் என்றால் கட்டாயம் என்ற பொருள் வரும்‌.

அறிவுரைக்கும், அனைவரும் போட வேண்டும் (கட்டாயம் )என்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. 

ஊடகங்களின் இந்த கீழ்த்தரமான செயலினால் பொதுமக்கள் குழம்பவேண்டாம். 

இந்தியாவில் கொரோன தடுப்பூசி விநியோகம் ஆரம்பித்த ஜனவரியிலிருந்து இன்றுவரை மூன்று முறை பிரதமமந்திரி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்/அதிகாரிகள், இழப்பீடு மற்றும் காப்பீடு பற்றிய கேள்விகளுக்கு கொரோனா தடுப்பூசி  கட்டாயம் கிடையாது விருப்பத்தேர்வு தான் என சொல்லி வருகிறார்கள். 

மார்ச் 23 தேதியிட்ட தகவல் அறியும் சட்டத்தின் பதிலிலும் இந்திய அரசு , கொரோனா தடுப்பூசி பாதகத்திற்கு இழப்பீடு தருவது பற்றிய சந்தேகத்திற்கு இது விருப்பத்தேர்வு தான் கட்டாயமில்லை என சொல்லியிருக்கிறது‌.

ஆகையால் உங்களை எவரேனும் அரசு தரப்போ தனியாரோ, கல்வி நிறுவனங்களோ, போக்குவரத்து நிறுவனங்களோ, தடுப்பூசி போடாததால் உங்களுக்கான சேவையே மறுத்தால் அது சட்டப்படி குற்றம் என்பதை தைரியமாக அமைதியாக உறுதியாக உங்களது உரிமையை எடுத்து சொல்லி அவர்களது சட்டவிரோதமான செயலை கண்டிக்கவும்‌. 

மனிதரில் இருவகை...

1. "அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே"

2. "அச்சம் தவிர்"

இவ்விரண்டில் நீங்கள் எந்த வகை என இனி நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்‌...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.