மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு...
தமிழர் வரலாறு எப்படி மறைக்கப்பட்டது, திரிக்கப்பட்டது.
ஒரு உதாரணம்..
கொரிய நாட்டின் மன்னன் சுரோவை மணந்தவர் நெடுந்தொலைவில் உள்ள ஒரு நாட்டின் இளவரசி.
அவர் படகுகள் மூலமாக கொரியாவுக்குச் சென்று மன்னனை மணந்தார். அந்த இளவரசியின் படகு புறப்பட்ட இடம் ஆயுத்த, இதுதான் கிடைத்த தகவல்கள்.
இங்கேதான் டிவிஸ்ட் வைத்தார்கள்.. நாக்பூர் உருவாக்கிய வரலாற்றாய்வாளர்கள்.
அந்த இளவரசி அயோத்தியாவின் இளவரசி.
அவர்தான் கொரிய மன்னனை மணந்தவர் என்று புத்தகம் எழுதியதுடன், கொரியர்களையும் நம்பவைத்து அவர்களினன் அயோக்கியத்தனத்தால் அயோத்தியாவில் நினைவு மண்டபம் வரை எழுப்பி விட்டார்கள்.
ஆனால் உண்மையை அறிய...
பேராசிரியர் கண்ணன் இதுபற்றிய ஆய்வுகளைத் தொடங்க, கடல்சார் பண்பாட்டாய்வாளர் அய்யா ஒரிஸ்ஸா பாலு அவர்கள் இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து ஒரு பெருமுயற்சி எடுத்து இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட போது..
அயோத்தியாவில் கடலே இல்லை என்பதில் தொடங்கி அந்த இளவரசி மற்றும் அவரது வழிவந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த இளவரசியின் பெயர் செம்பவளம்.
அவர் புறப்பட்ட இடம் ஆயுத்த என்று அப்போது அழைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமரிப் பகுதி என்பதையும் நிரூபித்தனர்.
இதற்கேற்றார் போலவே, இரு நாட்டு கலாச்சார, பண்பாடு, மொழிக்கலப்பும் உள்ளதையும் பல தரவுகள் மூலமாக நிரூபித்தனர்.
இதை கொரியர்களும் ஏற்றுக் கொண்டதுடன், கொரிய துணைத் தூதரகம் இதுபற்றிய தெளிவான வரையறையைக் கொண்டுள்ளதுடன், கொரியாவில் பலலட்சம் பேர் வணங்கும் வகையிலான கடவுளுக்கு ஒப்பானவர் செம்பவளம் ஒரு தமிழச்சி என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.
செம்பவளம், படகு மூலமாகச் செல்லும் போது படகை (Balance) சமநிலை செய்வதற்காகக் கொண்டு சென்ற பவளப்பாறைகளை இன்னமும் வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் கொரியர்கள்.
தமிழின் வேர்கள் மிக ஆழமானவை, அறிவார்ந்தவை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.