21/04/2021

கர்நாடகாவில் தமிழனுக்கு வேலை கிடைக்குமா?

1999ஆம் ஆண்டு, ஏ.ஜி.ஓ என்ற நடுவணரசு நிறுவனத்தின் அலுவலர்களாக தேர்வானவர்களில் 26 தமிழர்கள் இருந்தனர்..

கர்நாடகாவில் அவர்கள் பணியமர்த்தப்பட்டது தெரிந்ததும் கன்னடவர்கள் ஒன்றுதிரண்டு அங்கே தமிழர்களுக்குப் பதிலாகக் கன்னடர்களே அமர்த்தப்பட வேண்டும் என்று வன்முறையில் ஈடுபட்டனர்.

ஏ.ஜி.ஓ அலுவலகத்திற்கு அவர்கள் கூட்டமாக வருவது தெரிந்ததும் முதல்நாள் வேலைக்குச் சென்றிருந்த தமிழர்கள் ஓடி ஒளியவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

கூட்டமாக நுழைந்த கன்னடர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இது ஒரு நாளல்ல இரு நாளல்ல நாற்பது நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.

கிடைத்த பொருட்களையெல்லாம் உடைத்தனர்.

வெளியேயும் ஆர்ப்பாட்டம் தீவிரமாக செய்தனர்.

கர்நாடக சலுவளி, கர்நாடக கிரியா கேந்திரா, ராஜ்குமார் ரசிகர்கள், பா.ஐ.க, என்று கட்சி, இயக்க பேதமில்லாமல் மாநில மத்திய கட்சியைச் சேர்ந்த  எம்.பி, எம்.எல்.ஏ எல்லாரும் ஆதரவு தெரிவித்தனர், அறிக்கைவிட்டனர், கலந்து கொண்டர்..

எந்த ஊடகமோ, நாளிதழோ, மாந்தநேய அமைப்போ இதைத் தட்டிக்கேட்கவில்லை.

ஏஜிஓ மேலாண்மையே இதைக் கண்டிக்கவில்லை.

கர்நாடக தமிழர் இயக்கம் இதை வழக்குமன்றம் கொண்டு சென்றது.

இறுதியாக அந்த தமிழர்கள் வேறு நடுவணரசு நிறுவனத்திற்கு அனுப்பட்டு கன்னடர்களே அங்கே பணியமர்த்தப்பட்டனர்.

இது அறமா என்றால் உறுதியாக இல்லை எனலாம்.

தற்போதைய கர்நாடகத்தில் 22% தமிழர் நிலமாகும்.

அங்கே வசிப்பவர் பெரும்பாலும் தமிழரே.

பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற நகரங்களும் சத்தியமங்கலம், மாதேசுவரமலை போன்ற வளமான வனப்பகுதியும் காவிரி ஆறு பாயும் பகுதியும் இதில் அடங்கும்.

திப்பு சுல்தான் காலத்தில் பறிபோன நிலமானது மைசூர் சமஸ்தானமாக ஆங்கிலேயர் ஆட்சியில் நீடித்து பிறகு 1956ல் மாநில பிரிவினையின்போது கன்னடவரிடம் பறிபோனது.

தற்போதைய கர்நாடகத்தில் 50%கூட கன்னடர்கள் கிடையாது.

ஆனால், அவர்கள் தமது தாய்நிலத்தைப் போல இருமடங்கு நிலத்தைக் கைப்பற்றி மற்றவர்களை அடக்கி ஆண்டு வருகின்றனர்.

அங்கே 30%க்கும் மேல் தமிழர் இருந்தும் இனவழி அடிமைத்தனத்துக்கு முதல் இலக்காக ஆளாகியுள்ளனர்.

(வீரப்பனார் இருந்தவரை தமிழக எல்லையோரம் கொஞ்சம் விழிப்புடன் இருந்தது, இப்போது அதுவும் இல்லை).

அங்கே எங்கும் கன்னடம் எதிலும் கன்னடவர் என்ற இனவெறி முழக்கமே கேட்கிறது.

இங்கே தமிழகத்தில் என்ன நிலை?

அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவனும் வந்தேறியாக இருக்கிறான்,

வந்தேறி ஒவ்வொருவனும் அதிகாரத்தில் இருக்கிறான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.