06/05/2021

டெலிபதி எனும் சித்தர் கலை...

 


இன்று என் பழைய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது... 

அப்போது அவர்களில் ஒருவரின் நண்பர் என்னுடன் சில காலம் ஆன்மீக பாதையில் பயணித்தார்...

அன்றைய காலகட்டத்தில் ( 2012 )அந்த நண்பருடன் சேர்த்து மேலும் 7 பேர் (7 + 1)  என்னுடன் பயணித்தனர்...

இதில் நான் ஒருவன் மட்டுமே பல ஆன்மீக கலைகளை பல குரு விடம் கற்று கொண்டு,  ஆராய்ச்சி, பயிற்சி, மற்றும் சோதனைகளை செய்து வெற்றியும் கண்டுள்ளேன்...

ஆகையால் அவர்கள் என்னிடம் டெலிபதி  கற்று கொடுக்கும் படி கேட்டுக் கொண்டதால்.. நானும் எத்தனை நாட்கள் தான் மாணவனாக இருப்பது என்று நினைத்து குரு வாக மாறி விட்டேன் 😁

(குறிப்பு : நான் பல குரு விடம் பல விதமான ஆன்மீக பயிற்சி கற்றுள்ளேன்ர.. ஆனால் யாரிடம் தீட்சை மற்றும் வாங்கியதில்லை.. நான் ஏன் தீட்சை வாங்கவில்லை என்பது இரகசியம்)

பிறகு அந்த 8 பேருக்கு சொல்லி கொடுத்து பயிற்சி கொடுத்தேன்... அதில் 2 பேர் மட்டுமே நம்பிக்கையோடு விடா முயற்சியில் பயிற்சி செய்து வெற்றியும் கண்டனர்... 

தற்போது அந்த நபரின் நண்பரை தான் சந்தித்தேன்... உன் நண்பன் எப்படியுள்ளான் என்று விசாரித்தேன்... அதற்கு அவர் சொன்ன பதில்...

பயிற்சியும் செய்யாமல் விட்டுவிட்டு.. இனி என்னால் அனைத்தையும் செய்ய முடியும் என்று அவன் கற்ற கலையை தவறாக உபயோகித்ததாலும்... 

தற்போது அவன் அரை மெண்டலாகவே மாறி விட்டானாம்... 

இதற்கு தான் ஞாணிகள் எப்போதும் ஒன்றை சொல்வார்கள்...

நீ கற்ற கலையை வைத்து ஆணவத்தில் ஆடாதே... தவறாக உன் சுயநலத்திற்காக பயன்படுத்தாதே... மீறினால் அதுவே உனக்கு வினையாகும் என்று...

( வெற்றியடைய 90 நாள் முதல் 180 நாள் வரை ஆகும்) பிறகு அதை தினமும் பயிற்சி செய்து கொண்டே வந்தால் இன்னும் பல விடயம் உணர முடியும்...

காந்த சத்தியை நம் உடலில் அதிக படுத்தினால் நமக்கு அனைத்து பயிற்சியும் விரைவில் வெற்றியில் முடியும்... 

நீங்கள் எந்த Super natural power பயிற்சி செய்தாலும் அதற்கு காந்த சத்தி மிகமிக முக்கியம்...

இந்த பதிவு எதற்காக போட்டேன் என்றால்.. என்னிடம் சிலர் பயிற்சி கொடுக்க முடியுமா என்று கேட்கிறார்கள்... அவர்களுக்காக தான்...

நான் யாருக்கும் பயிற்சி கொடுக்க விரும்பவில்லை... 

ஆனால் ஒன்று நீங்கள் யாரிடம் பயிற்சி பெற்று எந்த கலையை கற்றுக் கொண்டாலும்.. உங்கள் சுயநலத்திற்காக கலையை தவறாக உபயோகித்து விடாதீர்கள் அது வினையாகி விடும் என்று எச்சரிக்க தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.