16/09/2021

அமானுஷ்யம் - மனுஷங்களைப் போல தான் பேய்களிலும்... ஏகப்பட்ட குரூப்கள்...


சில வகைப் பேய்கள் மக்களோடு தான்
இருக்கும்..

நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது, கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப் பேய்களுடைய சமாச்சாரங்கள்.

தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச் செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள்.

ரொம்ப உஷாரா இருங்க இவை புத்திசாலிப் பேய்கள்.

சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டே இருக்கும்..

கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில் கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் ஒரே கதை சொல்றாங்கன்னா, இந்த வகைப் பேய்கள் தான்.

சில வகைப் பேய்கள் நினைவு நாள்
பேய்கள்..

செத்துப் போன நாளைக் கொண்டாட மட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கி விடும். ஆனால் ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவே இருக்குமாம்.

சினிமாவில் வருவது போல, மனிதர்களைப் பிடித்து உள்ளே நுழையும் பேய்கள் இன்னொரு வகை..

மனிதனுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும். கொஞ்சம் டேஞ்சரஸ் பேய் இது.

நிறைவேறாத ஆசை பேய்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்..

பையனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசைப்பட்டேன் என ஏக்கத்துடன் இறந்து போனவர்கள், அந்தப் பையனுக்கு திருமணம் நடக்கும் வரை ஆவியாகி சுற்றிச் சுற்றி வருவார்களாம்.

சிலவகைப் பேய்கள் மெசெஞ்சர்
பேய்கள்..

நல்ல பேய்கள் லிஸ்டில் வைக்க வேண்டிய பேய்கள் இவை.

பெரும்பாலும் ஒரு குடும்பத்திலுள்ள மரணச் செய்தியை நெருங்கிய சொந்தக்காரர்களுக்குச் சொல்லும் செய்தியாளன் இது.

சட்டென மனதில் ஏதோ தோன்ற ஊருக்கு போன் பண்ணினால், ஆமாப்பா இப்போ தான் தாத்தா போயிட்டார் என கிடைக்கும் புரியாத Ghost (22)கதைகளின் நாயகன் இந்தப் பேய்தான்.

இன்னொரு வகை பேய் பாசக்கார பேய்..

சொந்தக்காரர்களைத் தேடி வரும். பார்த்து விட்டுப் போய்விடும். பல வேளைகளில் அது வருவதே கூட யாருக்கும் தெரியாது. இறந்து போன பிறகும் வீட்டிலுள்ளவர்களைக் காவல் காப்பவை இவை.

நல்ல பேய் இனத்தில் பாதுகாக்கும்
ஏஞ்சல்ஸ் முக்கியமானவை..

இவை ஒவ்வொருவருடைய தோளிலும்
அமர்ந்திருந்து நம்மைப் பாதுகாக்குமாம்.

பல நேரங்களில் மயிரிழையில் தப்புவதெல்லாம் இந்த காவல் தேவதைகளின் புண்ணியத்தினால் தான்.

சில வகைப்பேய்களுக்கு தான் இறந்து போனதே தெரியாது. உயிருடன் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும்.

குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
வசிக்கும் வயதானவர்கள் கவனிக்க
யாருமின்றி இறந்து போனால், அவர்கள்
ஆவியான பின்னும் மனிதர்களைப் போலவே வாழ்ந்து கொண்டே இருப்பார்களாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.