28/09/2021

திராவிடன் யார்.?

 


1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை,  கன்னட ஈ.வெ.ரா திராவிடர் கழகம் என்று மாற்ற முயன்ற போது அதன் பெயரை "தமிழர் கழகம்" என்று மாற்றச்சொல்லி கி.ஆ.பெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் முயன்றனர்.

ஆனால் ஈ.வ.ரா விடாப்படியாக மறுத்து திராவிடர் கழகம் என்றே பெயர் மாற்றினார்.

அதற்கு அவர் சொன்ன காரணம் தமிழர் கழகம் என்று சொன்னால் இங்கே உள்ள பார்ப்பனரும்..

நாங்களும் இங்கேயே பிறந்து வளர்ந்து தமிழ்தான் பேசி  வாழ்ந்து வருகிறோம்..

அதனால் நாங்களும் தமிழர்கள்தான் என்று வந்துவிடுவார்கள்.

(இதற்கு பெயர் என்ன வெறி)

ஆனால் திராவிடன் என்று சொன்னால் எந்த பார்ப்பனரும் நான் திராவிடன் என்று உள்ளே வரமாட்டார் என்று காரணம் சொன்னார்.

( அதாவது இங்கேயே பிறந்த வளர்ந்த தமிழ் பேசும் பார்ப்பான் உள்ளே வரக்கூடாது..  ஆனால் இங்கே பிறந்து வளர்ந்து பிறமொழி பேசும் தெலுங்கரோ , கன்னடரோ, மலையாளியோ ஆண்டால் பரவாயில்லை.. அவர்களிடம் தமிழன் அடிமையானாலும் பரவாயில்லை )

ஆனால் உண்மையில் திராவிடர் என்ற சொல் பார்ப்பனர் அல்லாதவரை குறிக்கும் சொல் அல்ல.

வட இந்தியாவில் வாழும் பார்ப்பனர்கள் தென்னிந்தியாவில் ஐந்து நிலப்பகுதியில்  வாழும் பார்ப்பனர்களை  குறிக்கவே திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினர்.

தென்னிந்தியாவில் வாழும் சில பார்ப்பனர்களின் குடும்ப பெயரிலேயே திராவிடன் என்று பெயர் வழங்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் விடம்  உங்கள் பெயரின் பின்னால் திராவிட் என்று வருகிறதே என்று கேட்டதற்கு நாங்கள். கும்பகோணத்தை சேர்ந்த பிரமாணர் குடும்பம் என்று பதிலளித்தார்.

சனாதான தர்மத்தை மறுபரிபாலனம் செய்த ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லகரி என்ற நூலில் திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று குறிப்பிடுகிறார்.

ஆதிசங்கரர் கேரளாவில் பிறந்த பிராமணர்.

திராவிடம் என்ற பெயரை பயன்படுத்திய கால்டுவெல்லும் தான் திராவிடம் என்ற சொல்லை சம்ஸருத நூலான ஆரியர்களின் மனுஸ்மிருதியிலிருந்து எடுத்தேன் என்று கூறியுள்ளார்.

ஆரியத்தையையும., மனுதர்மத்தையும் கடுமையாக எதிர்க்கும் அவையெல்லாம் பொய் புரட்டு கட்டுக்கதைகள் என்று சொல்லும் திராவிட அறிவு ஜீவிகள் தங்களது இயக்கத்திற்கு பெயரை அதே மனுஸ்மிருதியிருந்து எடுத்து பயன்படுத்துகிறார்கள்.

ஒரே ஒரு சங்கத்தமிழ் இலக்கியத்தில் கூட திராவிடம் என்ற சொல் பயன்படுத்தியதில்லை.

மனுஸ்மிருதி நம்மையெல்லாம் திராவிடன் என்று இழிவாக சொல்கிறது. அதையே நமது பெருமைக்குரிய அடையாளமாக மாற்றவே நாம் திராவிடம், திராவிடன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம் என்கிறார் சுப.வீ..

அதே மனுஸ்மிருதி தான் நம்மையெல்லாம் சூத்திரன் என்கிறது. அதை தூக்கி போடுங்கள் என்று சொல்வதும் இதே திராவிட அறிவு ஜீவிகள் தான்.

இரண்டும்  ஒன்றுக்கொன்று முரண்.

மனுஸ்மிருதியில் அவன் கொடுத்த சூத்திரப்பட்டம் எவ்வுளவு இழிவானதோ..

அதை விட இழிவானது அவன் சொன்ன திராவிடன் என்ற சொல்லை பயன்படுத்தி இன்னும் தமிழர்கள் தங்களை தாங்களே திராவிடன் என்று சொல்லிக் கொள்வது..

ஆக திராவிடர் என்றால் அதில் பார்ப்பானர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லி..

தமிழர்களுடைய உண்மையான இனப்பெயரை அழித்து நீ திராவிடன் என்று ஒரு பொய்யான மாயையை திணித்து தமிழர்களின் தொன் பெருமையை அழித்த ஒரு வரலாற்று மோசடியை செய்தவர் ஈ.வெ.ராமசாமி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.