தமிழனை வீழ்த்தியது திராவிடன் எனும் வடுகர்களே...
மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?
இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது.
அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?
காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்...
தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது.
அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா? எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?
வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை.
மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.
இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.
பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல..
அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கர்னாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..
மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.
'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கர்னாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.
அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்..
Source:
http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm
தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.
குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு..
என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.
சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே. அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்து கொண்டது இல்லை.
இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்...
பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், அண்ணா, கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.