அா்ஜூனா உன் வீரத்தை மெச்சினேன் என்ன வரம் வேண்டும் கேள்...
கிருஷ்ணா 14 வருடம் காட்டிலும் 1 வருடம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தும், போராலும் மனம் வேதனைப்பட்டுள்ளேன். அடுத்த ஜென்மத்திலாவது எனக்கு சுகபோக வாழ்க்கையை தரவேண்டும் பிரபு...
அப்படியே ஆகட்டும். உன்னை ஒரு நாட்டுக்கு மன்னராக்கி. பல கோடி அளவில் பொருட்களையும் தருகிறேன்.
வேண்டாம் கிருஷ்ணா, பதவியையும் - பொருட்களையும் பாதுகாக்க வேண்டும். எந்த நேரம் எதிரி போருக்கு வருவான் என்ற அச்சத்துடன் தினம் தினம் வாழ வேண்டும். அதனால்.....
அதனால் சொல்லு அா்ஜூனா....
என்னை பாரத நாட்டில் தமிழ் மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியராக நியமித்து, அதே அரசு பள்ளி ஆசிரியை மனைவியாக அருள்புரிவாய் ஆண்டவா ?
என்னை விந்தை இது ? அரசாளும் பதவி வேண்டாம்.அரசாங்க ஆசிரியா் பதவி வேண்டுமா ? என்ன சிறப்பு அது ?
கிருஷ்ணா, எந்த டென்சனும் வேண்டாம்.எதையும் கஷ்டப்பட்டு பாதுகாக்க வேண்டாம். 1ம் தேதிக்கு முன் தினம் 31,30,28 எந்த தேதியாக இருந்தாலும் இரவு 8 மணிக்கு சம்பளம் வந்துவிடும்.
வருடத்தில் 200 நாட்கள் பணி என்பாா்கள் 8 மணிநேர பணியை கணக்கிட்டால் 100 நாட்கள் கூட வராது. மனைவியும் ஆசிரியராகி ஒரே ஊரில் பணி அமைந்துவிட்டால் இந்திரலோகத்து அரசனைவிட நானே பாக்கியவன் பெற்றவனாவேன் பிரபு...
நல்லாயிருக்கே இந்த பணி மேல சொல்லு அா்ஜூனா..
வருடத்திற்க்கு ஒரு முறை சம்பள உயா்வு கேட்டு போராட்டம் நடத்தலாம்.
வருடத்திற்கு ஒரு முறையா ? அரசு நடவடிக்கை எடு்க்காதா ?
தோ்தல்பணி ஆசிரியா்கள் தானே பாா்க்க வேண்டும். அதனால் அரசும் ஆசிரியா்களுக்கு பயப்படும்.
மருத்துவா்கள் பணிநிறுத்தம் செய்தால் கூட அனுபவம் இல்லாத மருத்துவா்களை நியமனம் செய்வாா்கள். ஆனால் ஆசிரியா் வேலைநிறுத்தம் செய்தால் தற்காலிக பணியாளா்கள் நியமிக்க தயங்குவாா்கள்..
இதற்காகவா ஆசிரியராக பணி செய்ய கேட்கிறாய்..
இல்லை கிருஷ்ணா. கொரனோ ஊரடங்கில் கோவில்களை பூட்டி உன்னை கூட பட்டினி போட்டாா்கள். ஆனால் கொரானோ ஊரடங்கில் மனம் வாடாதவா்கள் ஆசிரியா்கள் தான்.
2 வருடத்திற்கு பிறகு இப்ப தான் பள்ளிகூடம் பக்கம் சென்றாா்கள். இந்த வருணன் இருக்கிறானே ஆசிரியர்களிடம் ஏதும் பெற்றானா என தெரியவில்லை.
2 மாதமாக தமிழகத்தை விட்டு வேறு எங்கும் போகாமல் ஆசிரியா்களை வீட்டைவிட்டு வெளியே வராமல் பாா்த்துக் கொண்டான்.
அப்ப இதற்கும் சம்பளம் உண்டா ?
ஆமா பிரபு..
அா்ஜூனா, நானும் ஆசிரியராகி விடவா ?
கிருஷ்ணா நான் பள்ளி ஆசிரியராகி நீயும் பள்ளி ஆசிரியரானால் நன்றாக இருக்காது. நீ அரசாங்க கல்லூரி புரபசர் ஆகிவிடு.
அங்கும் இப்படி சலுகைகள் கிடைக்குமல்லவா ?
இதைவிட அதிகம் கிடைக்கும்,
அப்ப வா, தமிழக அரசு ஆசிரியராக ஆகிவிடுவோம்...
🤓🤓🤓😂😂😂
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.