27/02/2022

விதி வலியது......

 


அமெரிக்காவின் ஆயுத கறுப்புச் சந்தையாக விளங்கியது உக்கிரேன். விடுதலை அமைப்புகள் பலவற்றுக்கான ஆயுத கறுப்புச் சந்தையாக  உக்கிரேன் விளங்கிவருகிறது.

எங்களுக்கு பெரும் அழிவுகளை உண்டாக்கிய ஸ்ரீலங்கா விமானப்படையின் மிகையொலி விமானங்களை ஆரம்பத்தில்  இயக்கிய விமானிகள் உக்கிரேன் நாடடைச் சேர்ந்தவர்கள் மேலும் அவர்களே இலங்கை விமானிகளுக்குப்  பயிற்சிகளையும்  அளித்திருந்தார்கள்.

இறுதியுத்தகாலத்தில் எமக்கான பெருமளவு ஆயுதங்களை வழங்குவதாக ஒப்புதல் அளித்து  பணத்தைப்பெற்று அமெரிக்காவுடன் இணைந்து ஏமாற்றியவர்களும் உக்கிரேனியா நாடு. 

அன்று எமது ஆயுதக்கப்பல்களை அழிக்காமலும் , எமக்கான ஆயுதங்களை அதற்கான பணம் முழுவதையும் பெற்று  தராமல் ஏமாற்றாமலும் விட்டிருந்தால் நாங்கள் நிச்சயம் எமது தாயகப் போரில் வென்றிருப்போம்.

 இன்று உலகில் அமெரிக்காவினால் அதன் "தான்" என்கின்ற  இறுமாப்புக்காக உலகில் பலபாகங்களில்  பல்லின அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுவருகிறார்கள். 

இன்று அமெரிக்காவின் பலிக்கடாவாக தங்களையே அழித்துக்கொள்ளுகிறது உக்கிரேன். ஒருவகையில் ரஸ்யா எடுக்கும் படையெடுப்பானது நியாயமானதென்றே கூறலாம்.

 உக்கிரேனில் அமெரிக்கா தங்களது கைக்கூலி அமைப்புகளை உருவாக்கி ஆயுதங்களையும் கொடுத்து அவர்களுக்கு  பயிற்சிகளையும் கொடுத்து ரஸ்யாவுக்கெதிராக பயன்படுத்திக்கொண்டிருப்பதன் விளைவேதான் இன்றைய ரஸ்யாவின் உக்கிரேன் மீதான படையெடுப்பாகும்.

 அதாவது ரஷ்யா அமெரிக்காவின் மறைமுக அச்சுறுத்தல்களிருந்து தங்களைப்  பாதுகாத்துக்கொள்ளுமுகமாக இந்த இராணுவநடவடிக்கையைத்  தொடங்கியுள்ளது எனலாம்.

இன்று மேற்குலகம் எல்லாம் ரசியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக குரல் கொடுக்கத்தொடங்கியதோடு ரஸ்யாவுக்கெதிராக பொருளாதாரத் தடையையும் விதித்துள்ளன. 

அன்று ஸ்ரீலங்கா இராணுவம்  எங்கள் மீதான  ஆக்கிரமிப்பைச் செய்து எம்மக்களை வகைதொகையின்றி கொல்லும்பொழுது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகம் இன்றுதான் விழித்துக்கொண்டிருக்கின்றது . அன்று ஸ்ரீலங்கா இராணுவம் செய்தது சரியென்றால் இன்று ரஸ்யா செய்வதும் சரியேதான்.

என்னதான் உலகத்தில் எங்கு போரென்றாலும் எங்கும் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களேதான் ஆதலால் எங்கென்றாலும் போரை வெறுக்கிறேன். போரின் வலிகளை பல தசாப்தங்களாக போருக்குள்ளே வாழ்ந்து அனுபவித்துள்ளேன். 

ஏகாதியபத்திய அரசுகளின் நலனுக்காகவும் , பலப்பரீட்சைக்காகவும் யாரோ அப்பாவிமக்கள்தான் பலிக்கடாவாக்கப்படுகிறார்கள் என்பதுதான் இங்கு நிதர்சனம். 

உக்கிரேன் அப்பாவி மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களின் நிலையை எண்ணி வருந்துவதோடு உங்களுக்காக கடவுளைப்  பிரார்தித்துக்கொள்கிறேன்.

ஒரு இனம் மற்றொரு இனத்தை அழித்து வாழ்வது என்பது  மனிதர்களுக்கு பொருந்தாது.....!!! 

ஆனால் அதை செய்து  மகிழ்ந்தது யார் என்ற கேள்விக்கு உலகளவில் பதில் கிடைத்தால், 

 தீவிரவாதிகள், தடை, என்ற ஒரு  "கறுப்பு புள்ளிகள்" புலிகள் மீது இருக்க வாய்ப்பில்லை.... 

அதே வேலை ரஷ்யா ஒன்றும் எங்கள் பாதுகாவலன் நாடு கிடையாது. 

அன்று முள்ளிவாய்க்காலுக்காக ஒரு சொட்டு கண்ணீரை விட கூட மறந்து போன உலகநாடு...... 

இன்று 13 ஆண்டுகளுக்கு பிறகு   உலக நாடுகள் கோமாவில்  இருந்து எழுந்து உக்ரைனுக்காக கதறுகிறார்கள்..... 

ஆனால் இவ்வுலகத்திற்கு நினைவூட்ட இன்னும் பல விடயங்கள் உள்ளன., 

அதில் 👇🏻

உக்ரைன் நாட்டு பெண் விமானிகளே  அதித போர் விமானங்களைச் செலுத்தி, புது குடியிருப்பு வெண்புறா மற்றும் ஏனைய மக்கள் குடியிருப்புகள் மீது குண்டு வீச்சுதாக்குதல்  மேற்கொண்டதை நாம் மறக்க முடியாது. 

எங்கள் மீது குண்டு வீசியது உக்ரைன் நாட்டிற்கு நியாயமானதாக இருந்தால், 

இப்போது ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதும், குண்டு வீசுவதும் நீதியா?.. அநீதியா..?. என்பதை  இதனை படிக்கும் உங்களிடமே விட்டு விடுகிறேன். 

செஞ்சோலை வளாகம் மீது குண்டு வீச பயன்படுத்திய 27விமானங்களுக்கு பொறுப்பாக இருந்த  பெண் விமானி  பின்நாளில் இது தொடர்பாக வருத்தமும் தெரிவித்ததும் நாம் அறிவோம்...!!!!!! 

இப்போது உக்ரைன் ரஷ்யா யுத்த காட்சிகளை தொலைகாட்சி ஊடாக பார்க்க முடிகிறது,. இதை பார்க்கும் போது எனக்கு எதுவும் பெரிதாக தோண்டவில்லை, தாயின் கருவறையில் இருந்து யுத்தத்தோடும் பதுங்கு குழியோடும் வாழ்ந்த எனக்கு இதயம் மறத்து போனதோ?... 

அன்று உலக தொலைகாட்சிகள் கூட எமக்காக கண்ணை மூடிக்கொண்டது வலியின் கொடுமை.... 

எங்களுக்கு நடந்த கொடுமைகளையும், அநீதி களையும், வலிகளையும் வெளி உலகிற்கு எடுத்த செல்ல ஊடகங்கள் கூட ஊமையானது என்று சொன்னாலும் மிகையாகாது. .!!!!! 

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது இந்த யுத்தம் ஈழத்தில் நடந்ததில் நூற்றில் ஒரு பங்கு மட்டுமே...... 

அவ்வளவு கொடூரமான யுத்தம் என் மண்ணில் நிகழ்ந்தது..!!.. 

அப்போது அண்டை நாடுகளும் உலகமும் அதன் பங்குக்கு தன் கண்ணை மூடிக்கொண்டது..... 

என் மண்ணில் கூட்டு பாலியல் "தேசிய விளையாட்டாக" இருந்தது. 

உலகம் அதை கண்டு மகிழ்ந்தது..!!!.. 

13ஆண்டுகளாக கேட்கிறேன், கேட்கிறேன்...!!!! 

"நான் பிடித்து மகிழ்ந்த கடல் செந்நீராய் மாறியது ஏன்? "

"நந்தி கடலே நில்லு நடந்தது என்ன சொல்லு? "

நான் ஈழ மண்ணில் பிறந்த தமிழச்சி,

வல்வை__ அகழியா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.