29/11/2017

இரத்தம் பற்றிய கேள்வி - பதில்கள்...


இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, இரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.

இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.

இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

இரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

இரத்தத்தில் உள்ள பிளேட்லட் அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “வலை’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?

இரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

இரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

இரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.

இரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

உடலில் இரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?

ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராசரி வேகத்தைவிட அதிகம்.

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

இரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா?

24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

தலசீமியா என்பது தொற்று நோயா?

இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் வர வாய்ப்பில்லை.

மூளையின் செல்களுக்கு இரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?

மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

இரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

இரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

இரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. “‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

இரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?

இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.

ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

இரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

யார் இரத்த தானம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு இரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு இரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

இரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

இரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

இரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்...

தேனியில் பதினேழு வருடங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்...


தேனியில் பதினேழு வருடங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து தங்களது சிரமத்தை தெரியப்படுத்தினர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அவர், மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், "பொம்மிநாயக்கன்பட்டி வடக்கு காலனியில் கடந்த 17 வருடங்களாக குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறோம்.

இரவு நேரங்களில் வி‌ஷப் பாம்புகள் நடமாட்டம் இருப்பதால் மிகுந்த அச்சத்துடன் வாழ்கிறோம். குடிநீர் கிடைக்காமல் தனியார் தோட்டத்து கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறோம். எனவே, எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

குள்ளப்புரத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மக்கள் அளித்த மனுவில், "குள்ளப்புரத்தில் நாங்கள் விவசாயம் செய்து வந்த பகுதியில் தற்போது கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு குவாரி நடத்துபவர்கள், அதிகாரிகள் துணையுடன் விவசாயிகளை விவசாய நிலங்களுக்கு செல்ல விடாமல் பாதையை மறித்து இடையூறு செய்கின்றனர். எனவே, இந்த குவாரியை ரத்து செய்து, விவசாயிகள் விவசாய பணிகளை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கூறியிருந்தனர்...

பெரம்பூர் எஸ் 2 சத்யம் சினிமா தியேட்டர் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை...


ஒரே குழுமத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை...

டிச 1 அன்று ஆர்கே நகரில் வேட்புமனு தாக்கல் செய்வார் டிடிவி தினகரன் - திருச்சி கூட்டத்தில் முடிவு...


அடையார் முகத்துவாரத்தில் செத்து கரை ஒதுங்கும் மீன்கள்...


கழிவு நீர் அதிகமாகி ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் செத்து கரை ஒதுங்குவதாக கூறப்படுகின்றது...

உபி உரை மாவட்டம் : கழுதையை கைது செய்து நான்கு நாள் சிறையில் அடைத்த உபி காவல்துறை...


விலை உயர்ந்த சேடிகளை சாப்பிட்டதற்காக கழுதைகளை கைது செய்த உபி காவல்துறையினர் அதை நான்கு நாள் சிறையில் அடைத்து பின்னர் லோகல் அரசியல் கட்சி பிரமுகரின் தலையீட்டால் நேற்று கழுதைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது...

சாலையில் சென்றேன் பேனரை பார்த்தேன் அது பொதுமக்களுக்கு இடையுறாக இருந்தது , பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்குமாறு இருந்தது. அகற்றினேன் வழக்கு பதிவு செய்தேன்.. பாலா கைது போராட்ட FIR ல் திருவல்லிக்கேணி எஸ்.ஐ...



சார் அப்ப இது என்ன சார் என சமூக வலைதளத்தில் கோவையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது,

மேலும் இதற்கு நியாயமான பதில் கிடைக்குமா எனவும் கேள்வி கேட்கப்பட்டு வருகின்றது...

பிறப்பின் இரகசியம்...


மனிதன்.. உயிர் இருந்தால் தான்? இல்லையேல் பிணம்..

மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்.. இல்லையேல் நாம் சவம்..

உயிர் இருந்தால் தான் வாழ்வு.. உயிர் உடலைவிட்டு போய்விட்டால்? சாவு தான்..

உடலும் உயிரும் சேர்ந்திருந்தாலே பிரயோஜனம்.. பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை.. உடலோடு உயிர் இருந்தாலே இயக்கம்..

உடலைவிட உயிரே முக்கியமானது..

உயிர் உடலுடன் இருக்கும் போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன்.

இப்படி தலை கால் தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே..

ஒருவன் எப்படி பிறக்கிறான்?

பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்?

இதுதான் தேவரகசியம். பிறப்பின் இரகசியம்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது..

இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே?

விஞ்ஞான வளர்ச்சி, டெஸ்ட்டியுப் குழந்தை உருவானது. ஆயிரம் பல்லாயிரம் முயற்சி செய்தால் ஒன்று உருவாகிறது. எல்லாம் ஜனிப்பதில்லை. எல்லோராலும் முடியாது..

விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே.. இன்றைய உலக வளர்ச்சி விஞ்ஞானத்தின் பரிமாணம் தான் மறுக்க முடியாது..

பஞ்சபூதங்களை அப்படி இப்படி, எதையாவது செய்து ஏதோதோ கண்டு பிடித்து சுகபோகமாக வாழ வழி கண்டனர் பலர்..

எல்லோரும் இந்த பூமியில் உள்ளவர்கள் தானே.. இந்த பூமியில் தானே பிறந்தார்கள், இந்த பூமியில் தானே, எப்படியெப்படியோ வாழ்ந்து மடிந்தார்கள்.

இந்த மனிதர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள்.. எல்லோரும் – பெரும்பாலானவர்கள் இறந்து போயினர். இறந்து அவர்கள் போனது எங்கே?

பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே?

அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே? பின் எதற்கு? உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம். உயிர் இன்றி உடல் இருந்தால் மண் தான்..

உயிர் தான் பிரதானம். உயிர் தான் பிறக்கிறது உடல் கொண்டு. உடலை விட்டு உயிர் பிரிவதே மரணம். பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்..

நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல் மட்டுமே.. அன்னையின் உடலில் உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும் உதிரமே, அன்னை தந்தையின் சுரோணித சுக்கில சேர்க்கையால் உருண்டு திரண்டு கருவாகி பிண்டம் உருவாகிறது..

தீட்டு என்கிறோமே – நம் உடலே தீட்டு தான். நம் தாயின் தீட்டு தான் நாம். மனிதன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே..

ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர் சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால் தான் புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம்..

ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும், பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே-இணைந்தாலே சக்தி பிறக்கும்-இயக்கம் ஆரம்பமாகும்..

தாயின் கருவிலே வயிற்றிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு தான் உயிர் வருகிறது. இதுவே அற்புதம் கருவுக்கு உயிர் எப்படி வந்தது?

இங்கே தான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்..

தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது. உயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வந்து சேர்க்கிறது.

இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம் வல்லவன் வகுத்து வைத்தது. அவன் அருள் ஆக்ஞைபடியே உயிர் தாய் கருவிலே வருகிறது..

இதுவே தேவரகசியம். எப்படி வருகிறது? யாரும் இதுவரை அறிந்திராத ஒன்று..

இந்த காலத்தில் வருகிறது - வந்தது என்று அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிவார் இல்லை..

உயிர் என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி. அவனே சித்தன்..

ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27 நாட்களே. 27 நட்சத்திரங்களே 1 மாதம். 10 மாதம் என்றால் 270 நாட்களே.

பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு அறிகுறி.. கன்னிக்குடத்திலே – குளத்திலே மிதந்து கொண்டு, ஸ்டிரா மூலம் குளிர்பானம் அருந்துவது போல, தொப்புள் கொடி மூலம் வேண்டிய உணவை தாயிடமிருந்து உறிஞ்சும் சிசு..

படைக்கும் பரமாத்மா உயிர்களை படைக்கும் ஆற்றல் இருக்கிறதே, அப்பப்பா அதிசயம். அற்புதம். எண்ணிப் பார்க்க இயலாத ஒப்பற்ற அதி உன்னத செயலாகும்..

படைத்த பரமன் காக்க மாட்டானா? இறைவன் தான் நம்மை காப்பாற்றுகிறான். தாயின் கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து காப்பவன் இறைவன் மட்டுமே..

கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளப்பவன் காப்பவன் இறைவன் ஒருவனே..

நம்மை படைத்து காப்பவன் நம்மிடமிருந்து, நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? இது போன்ற எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில் விட்டு விடுகிறான். என்னே அவனின் திருவிளையாடல்..

பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்திக் காட்டு கின்றான்..

ஆனால் அறிவோர் உணர்வோர் வெகு சிலரே. எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே உருவானவன். அருங்கடல். எல்லா உயிர்களும் தன்னை அடைய அருள்மழை பொழிகிறான். மனிதனாக பிறக்கும் அனைவருக்கும் இறைவன் அருளும் அரிய சந்தர்ப்பம் இது..

மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கு ஏற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்..

அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்குக்கேற்ற நிலையை தந்தருள்கிறார்..

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே..
அவரே படைக்கிறார் அப்போது அவர் பிரம்மா..

அவரே காக்கிறார் அப்போது அவர் விஷ்ணு..

அவரே மறைக்கிறார் அப்போது அவர் மகேஸ்வரன்..

அவரே அருள்கிறார் அப்போது அவர் சதாசிவம்..

அவரே அழிக்கிறார் அப்போது அவரே ருத்திரன்..

ஆக ஏக இறைவனே எல்லாம் புரிகிறார்..

எல்லாமே அவன் செயலே..

அவனின்றி ஓர் அணுவும் அசையாது...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கவனித்திற்கு...


ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் சுமார் 400 அடி கொண்ட இரண்டு ஆழ்த்துளை கிணறுகள் மெயின் ரோட்டில் பலநாட்களாக கவனிப்பாரின்றி கிடக்கிறது.

ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் மூட வேண்டுகிறோம்...

கேப்டன் சரஸ்வதி ராஜமணி...


சரஸ்வதி ராஜமணி. குழந்தை வயதில் காந்தியுடன் அஹிம்சை பற்றி விவாதம் செய்தவர். இளம் வயதில் INA உளவாளியாக பணியாற்றியவர். அதிகம் பேசப்படாதா பெண் சாதனையாளர்.

சரஸ்வதி ராஜமணி பர்மாவில் வசித்த பெரும் செல்வந்தரின் தமிழ்மகள். தன் 16 வயதில் நேதாஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தன்னிடமிருந்த தங்கத்தையும், வைரத்தையும் நிதியாக நேதாஜி கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்திற்கு கொடுக்கிறார்.

இதை கேள்விப்பட்ட நேதாஜி அந்த நகைகளுடன் அவர் வீட்டிற்கு வந்து தந்தையிடம் "விவரம் தெரியாத இளம் பெண் ஆர்வத்தில் நகையை கொடுத்துள்ளார், இதை திரும்ப வாங்கி கொள்ளுங்கள்" என்று கொடுக்கிறார். "இல்லை அது என் நகை, திரும்ப வாங்க முடியாது" ராஜமணி பதில் அளிக்கிறார்.

அவரது ஆர்வத்தை கண்ட நேதாஜி அவரை INAவின் உளவு பிரிவில் இணைத்து கொள்கிறார். இளம் வயதில் உளவாளியாகிறார். மணி என்ற பெயரில் ஆணாக உளவு பார்த்து ஒருமுறை ஆங்கிலேயர்களிடம் சிக்கி காலில் துப்பாக்கி தோட்டாவுடன் தப்பிக்கிறார்.

அதன் பின் நேதாஜியின் பெண்கள் படையணியில் முக்கியமானவராக அறியப்பட்டவர். சுதந்திரத்திற்கு பின்னும் நேதாஜி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு இன்றும் போராடுகிறார். டெல்லியில் அது சமந்தமான பேரணி என்றதும் உற்சாகமாக எங்களுடன் கிளம்பி வந்தார்.

90 வயதாகிறது. உடலில் முன்பிருந்த வலு இல்லை. குடும்ப உறவுகள் அதிகம் இல்லை. மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படவுமில்லை. அரசாங்கத்தின் பென்சனில் வாழ்கிறார்.


சென்னையில் சுனாமி வந்த போது சேர்த்து வைத்த பென்சன் தொகையும் நிவாரணத்திற்கு கொடுத்துள்ளார்.

அவரை சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைத்திருக்கிறார்.

இந்தி, ஆங்கிலம் சரளமாக பேசுகிறார். கையெழுத்து கேட்பவர்களுக்கு தமிழில் கவியெழுதி கையெழுத்திடுகிறார்.

முதுமை, வறுமை, தனிமை, வெறுமை எதுவும் அவரை கலங்க வைக்கவில்லை.

ஆனால் நேதாஜி பற்றியும் அவர்களது விடுதலை போராட்டம் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது அழுகிறார்.

ஆம் ஒரு உண்மையான போராளிக்கு அது தானே செல்வம், அது தானே இழப்பு.

இந்தியா தன் புதிய உலக அழகியை கொண்டாடிக் கொண்டிருந்தது. எனக்கு அம்மா சரஸ்வதி ராஜமணி அழகியாக தெரிந்தார்.. வாழ்க அவரது தொண்டு.. வளர்க நேதாஜி புகழ்...