29/11/2017

நான் படித்த உளவியலில் இருந்து.. நாம் ஏன் பொய் சொல்கிறோம்?


இதுக்கான பதிலை ஒரு வரியில சொல்லணும்னா, நமக்கும் நல்லவனா இருந்துக்கிட்டு, மத்தவங்களுக்கு முன்னாடியும்  நம்மை நல்லவனா காட்டிக்கிறதுக்காகவும் தான்னு  உளவியல் ஆய்வாளர்கள் சொல்றாங்க..

பொய் சொல்வது எனும் செயல் ஒருவரின் சுயமரியாதையுடன் நெருங்கிய தொடர்புடையது.

ஒரு மனிதன் எப்போது தன் சுயமரியாதைக்கு பங்கம் வருகிறது என்று பயப்படுகிறானோ, அப்போதே அவன் அதிகமாக பொய் சொல்கிறான் அப்படீன்னு சொல்றாரு அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் திரு.ராபர்ட் ஃபெல்டுமேன்..

பொய் குறித்த உளவியல் காரணங்கள்/கருத்துக்கள்...

உங்களுக்கே தெரியும்  நாம சொல்கிற எல்லாப் பொய்களுமே தீமையானது அல்ல என்று.. சில/பல சமயங்கள்ல நம்முடைய மற்றும் நம்மைச் சார்ந்தவர்களுடைய சுயமாரியாதையை காப்பாற்றிக்கொள்ள அல்லது நடக்கப் போகும் ஒரு அசம்பாவிதத்தை தடுக்க பொய் சொல்வதை விட ஒரு சிறந்த வழி இல்லைன்னு சில ஆய்வாளர்கள் சொல்றார்கள்.

தன்னைப் பற்றி உயர்வாக சொல்லிக் கொள்ள, அல்லது தான் ஒரு எளிமையானவன் என்பது போல காட்டிக் கொள்ள வேண்டி சொல்லும் பொய்கள் ஒன்றும் பெரிய குற்றமல்ல.

ஆனால், அப்பட்டமான (முழு நீள) பொய்கள், உதாரணமாக உண்மைக்குப் புறம்பான அல்லது உண்மையை மறைத்துச் சொல்லும் கருத்துகள் போன்றவை, ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், நெருக்கத்தையும் குலைத்து விடுபவை என்பதால் சமுதாயத்தின் பார்வையில் அவை குற்றங்களே.

தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றும் குணாதிசயம்..

பல விலங்குகள் தங்களுடன் வாழும் சக விலங்குகளை ஏமாற்றுவது இயற்கைதான் என்றாலும், தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றி விளையாடும் (?) குணாதிசயம் என்பது மனிதர்களுக்கே (மட்டுமே) உரித்தான பண்பு என்கிறார்கள் உளவியலாளர்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மனிதர்கள் பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள்/எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதிலேயே அதிக நேரம் மூழ்கிப் போய் விடுவதால், நாம் பிறரிடம் சொல்வது உண்மையா இல்லை முற்றிலும் (அபத்தமான ஒரு) பொய்யான விஷயமா, என்பதை தாங்களே இனம் பிரித்து பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று ஃபெல்டுமேனின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு ஆய்வில் முன்பின் அறிமுகமே இல்லாத இருவரை ஒரு அறையில் தங்க வைத்து, அவர்களின் உரையாடலை காணொளியாக பதிவு செய்தனர். பின்னர், அவ்விருவரையும் தனித்தனியாக, அக்காணொளியைக் கண்டு அதில் அவர்கள் பேசியவற்றில் முற்றிலும் உண்மையல்லாத (பொய்யான) ஒரு விஷயம் கூறப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து சொல்லுமாறு கேட்டதில், “தனக்கு சுத்தமாக பிடிக்காத ஒருவரை மிகவும் பிடித்தவர் என்று சொல்வதில் தொடங்கி, தான் ஒரு பிரசித்தி பெற்ற பாப் பாடகர்/இசையமைப்பாளர் என்பது போன்ற அபத்தமான விஷயங்களை” தாங்கள் சொல்லியதாக ஒப்புக்கொண்டார்களாம்? அடப் பாவிகளா…..

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குறிப்பிட்ட அந்த உரையாடல் காணொளியைக் காணும் முன்பு, அச்சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இருவரையும், நீங்கள் பேசிய அனைத்தும் உண்மைதானா எனக்கேட்டதற்க்கு, “ஆம் நாங்கள் பேசிய அனைத்தும் முற்றிலும் உண்மையே” என்றார்களாம். அட…. இது நல்லாருக்கே..

சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு 10 நிமிட உரையாடலில் 60% மக்கள், சராசரியாக 2.92 பொய்களை சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அப்படிப்போடு….. ஃபெல்டுமேன் அவர்களின் ஆய்வுக் கூற்றுகளின்படி, மக்கள் தன்னிச்சையாக பொய்களை சொல்லுகிறார்களாம், சமுதாயத்தில் அவை ஏற்படுத்தும்  விளைவுகளைப் பற்றி கண்டு கொள்ளாமலேயே
இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல இருக்கிறது இத

நாம் மற்றவர்களை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுவதைவிட, மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவார்களோ, அப்படி இருப்பதற்காகவே பெரிதும் முயல்கிறோமாம்?

ஒரு சுமூகமான சமூக சூழலை ஏற்படுத்த வேண்டியும், பிறரின் கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பதன் மூலம், அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதற்காக வேண்டியும், நாம் பெரும்பாலும் மற்றவர்களுடன் (எண்ணங்களுடன்) ஒத்துப்போகவே விழைகிறோமாம்.

பெண்களை விட ஆண்களே அதிகம் பொய் சொல்கிறார்களாம். ஆண்களின் பொய்கள் பெரும்பாலும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவும், ஆனால் பெண்களின் பொய்கள் பிறரை மகிழ்ச்சி கொள்ளச் செய்யவுமே சொல்லப்படுகிறதாம்.

கூச்ச சுபாவமுள்ளவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வெளிப்படையானவர்களே பெரிதும் பொய் சொல்கிறார்களாம்...

இலுமினாட்டி நாடான அமெரிக்கா வை எதிர்த்தாலோ.. அல்லது கட்டுப்பட மறத்தாலோ...


அந்த நாடு தீவிரவாதி நாடாக சித்தரிக்கப்பட்டு அழிக்கப்படும் என்பதே உண்மை...

ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ்...


1990க்கு முந்தைய தலைமுறை வரைக்கும் தான் ஆப்பிள் என்றது நியூட்டனை நினைவு கூறும். அதற்கு பின் வரும் அனைவருக்குமே ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் தான் நினைவுக்கு வருவார் என்ற வாக்கியம் எப்போதுமே இணையத்தில் வைரல்.

புதுமை என்ற விஷயம் ஒவ்வொரு ஆப்பிள் தயாரிப்பிலும் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஜாப்ஸை கேட்டால் புதுமை என்று எதையுமே கூறிவிட முடியாது. அடுத்த நொடியே இதைவிட புதுமையான விஷயம் உருவாகிவிடும் என்பாராம். இன்றைய ஸ்மார்ட்போன் உலகின் வீரியத்தை முன்பிலிருந்தே உலகுக்கு எடுத்து சொன்ன ஸ்டீவ் ஜாப்ஸின் பிறந்த நாள் இன்று. அவர் பற்றிய சுவாரஸ்யமான 10 விஷயங்கள்.

1. 1955ம் ஆண்டு சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தவர் ஜாப்ஸ். பிறந்தவுடன் தன் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பால் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். அவர்களிடம் ஜாப்ஸ் மகிழ்ச்சியாக வளர்ந்தாலும், தான் தத்துப்பிள்ளை என்பது ஜாப்ஸுக்கு அடிக்கடி வருத்தமளிக்கும் விஷயமாகவே இருந்துள்ளது. படிப்புக்காக தத்து கொடுக்கப்பட்ட ஜாப்ஸ் கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டவர்.

2. எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின்மீதும், வரைகலையின் மீதும் ஆர்வம் கொண்ட ஜாப்ஸால் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. அதோடி கல்வியில் சுதந்திரம் வேண்டும் என்று விரும்பியவர் ஜாப்ஸ். பிற்காலத்தில் வரைகலை பயின்ற ஜாப்ஸ் மாக் கம்ப்யூட்டருக்கான அழகான எழுத்துருக்களை தானே வடிவமைத்தார்.

3. படிப்பை விட்ட காலத்தில் நண்பர்களின் அறையில் தங்கி இருந்த ஜாப்ஸ் நீண்ட தொலைவுகளுக்கு நடந்து சென்றும், பசியால் வாடும் நேரத்தில் ஹரே கிருஷ்ணா கோவிலில் உணவு உண்டும் தனது காலத்தை கழித்துள்ளார்.

4. 1974ம் ஆண்டில் தலையில் நீண்ட முடியோடு, இந்தியாவில் இமையமலைப்பகுதிகளில் ஆன்மீக தேடலில் இருந்த ஜாப்ஸுக்கு தோல் நோய்கள் வந்துள்ளது. மேலும் கடும் புயலில் சிக்கி கொண்ட ஜாப்ஸ் ஆன்மீக தேடலை கைவிட்டு அறிவியல் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இல்லையென்றால் இந்தியாவில் சாமியாராகி இருப்பார் ஜாப்ஸ்.

5. ஆப்பிள் 1 கணினிக்கு பின்னால் அவர் நிகழ்த்திய மேஜிக் அளப்பறியது. தனது நண்பருடன் இணைந்து ஆப்பிள் 1 கணினியை உருவாக்கிய ஜாப்ஸ் அதனை ஒரு வீடியோ கேம் கணினிகளை விற்கும் ஃபைட் ஷாப் உரிமையாளரிடம் விளக்கினார். அவர் ஒரு மாதத்தில் 50 கணினிகள் வேண்டும் என ஆர்டர் தர இதனை ஒப்பந்தமாக எழுதி வாங்கி, அந்த ஒப்பந்தத்தை காட்டி மூலப்பொருட்களை கடனில் வாங்கி கணினியை தயாரித்துள்ளார் ஜாப்ஸ்.

6. 1985ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஜாப்ஸ். தளராமல் பிக்ஸார் அனிமேஷன் நிறுவனம் மூலம் ஹிட் அடித்தார். ஆப்பிள் நிறுவனமே வீழ்ச்சிக்கு சென்ற நிலையில் ரீ-என்ட்ரி கொடுத்து ஆப்பிளை முன்னணி பிராண்ட் ஆக்கினார் ஜாப்ஸ்.

7. ஜாப்ஸ் ஒரு சிறந்த வழிகாட்டி. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை மூடிவிடலாம் என்று முடிவில் இருந்த போது இந்தியா சென்றுவிட்டு வா ஒரு ஐடியா கிடைக்கும் அவசரப்பட்டு நிறுவனத்தை மூடிவிடாதே என அறிவுரை கூறி மார்க்கை இன்று உலகின் நம்பர் 1 மனிதனாக மாற்றியதும் ஸ்டீவ் ஜாப்ஸ்தான்.

8. ஜாப்ஸ் ஒரு பெஸ்டேரியன் (pescetarian) அதாவது மீன் தவிர மற்ற மாமிசங்களை உண்ணாதவர். வாழ்நாளில் 7 மாதங்கள் தீவிரமாக புத்த மதத்தை பின் தொடர்ந்தவர் ஜாப்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

9. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரஷ்யாவின் பங்குச் சந்தையை விட அதிகம், ஆப்பிளின் செயல்பாட்டு கையிருப்பு அமெரிக்காவின் கஜானாவை விட அதிகம் என்பதும் ஆப்பிளின் மிகப்பெரிய சிறப்பு.

10. ஆப்பிள் ஐபோன்களை ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உலகுக்கு அறிமுகம் செய்தார். முதன் முதலில் 9:41 மணிக்கு இந்த போன்களை அறிமுகம் செய்ததால் அனைத்து ஐபோன்களும் வெளியிடப்படும் மாடல்கள் மற்றும் போன்களின் புகைப்படங்களில் 9:41 என்ற மணியையே காட்டும்...

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு...


கடந்த 8 நாட்களாக தலைமறைவாக உள்ள அன்புச்செழியனை, தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில், முன் ஜாமின்  கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்...

சுனாமி என சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை - நாகை ஆட்சியர் எச்சரிக்கை...


ஒத்திகை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து சுனாமி வரப்போகுது யாருமே சொல்லல என சமூக வலைதளத்தில் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வண்ணம் பொய்யான தககவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்...

பாஜக மோடி அரசியல்...


நான் டீ விற்றேன், நாட்டை விற்க்கவில்லை - பாஜக மோடி...


தேர்தல் செலவு உபகாரத்துக்காக கார்பரேட் முதலாளிகளிடம் லீசுக்கு தான் விட்டிருக்கிறேன் இன்னும் விற்க்கவில்லை என சொல்றார் போல?

தூத்துக்குடி அருகே கரை ஒதுங்கிய 20 டால்பின்கள் கடலில் விடப்பட்டன. இதில் உயிரிழந்த 4 டால்பின்கள் கடற்கரையில் புதைக்கப்பட்டன. ..


தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கடலோர மீனவ கிராமம் ஆகும். தாமிரபரணி ஆறு சங்கமிக்கும் இப்பகுதியில் கடற்கரையில் இருந்து கடலுக்கு படகுகள் எளிதில் செல்லும் வகையில் 2 தூண்டில் வளைவு பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நேற்று இரவில் இந்த தூண்டில் வளைவு பாலங்களின் அருகில் சுமார் 20–க்கும் மேற்பட்ட டால்பின் மீன்கள் கரை ஒதுங்கி உயிருக்கு போராடியவாறு கிடந்தன.

உடனே அப்பகுதி மீனவர்கள், மாலுமிகள் நாட்டுப்படகுகளில் சென்று அந்த டால்பின் மீன்களை கைகளால் பிடித்தும், கயிற்றால் கட்டியும் கடலுக்குள் இழுத்து சென்று ஆழமான பகுதியில் விட்டனர். ஆனாலும் அந்த டால்பின் மீன்கள் மீண்டும் கரை ஒதுங்கியவாறு இருந்தன. சிறிது நேரத்தில் 4 டால்பின் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் மழையை பொருட்படுத்தாமல் இரவிலும் கரை ஒதுங்கியவாறு இருந்த டால்பின் மீன்களை மீனவர்கள் கடலுக்குள் கொண்டு சென்று விடும் பணியில் ஈடுபட்டனர். இதில், உயிரிழந்த 4 டால்பின்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் கடற்கரையில் புதைக்கப்பட்டன.

வானிலை மாற்றம் காரணமாக டால்பின்கள் கரை ஒதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புன்னக்காயலை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், டால்பின் மீன்கள் கூட்டமாக அணிவகுத்து செல்லக்கூடியவை. கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக டால்பின் மீன்கள், ஆழம் குறைவான கடற்கரை பகுதிக்கு கரை ஒதுங்கி இருக்கலாம். அவைகளை ஆழமான பகுதிக்கு கொண்டு சென்று விட்டாலும், அவைகளால் நீந்தி செல்ல முடியாமல் மீண்டும் கரை ஒதுங்கி விடுகிறது. எனவே கரை ஒதுங்குகிற பெரும்பாலான டால்பின் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்றனர்...

நீங்களே படைப்பாளி...


முதலில் நாம் தேவையை உருவாக்காமலேயே, நமக்கு அது கிடைக்கவில்லை இது கிடைக்கவில்லை என வருந்துகிறோம்.

இப்போதே உங்கள் தேவைகள் அனைத்தையும் பட்டியல் இடுங்கள்.

அதை மனதில் அடிக்கடி நினைத்து வாருங்கள்.

உங்களுக்கு தேவையற்ற விடயங்களை மனதில் போட்டு உழற்றாமல் மகிழ்ச்சியான மன நிலையில் எப்போதும் இருங்கள்.

உங்கள் எண்ணம் ஒவ்வொன்றாக நிறைவேற துவங்கும்.

ஆம் மனதால் ஆழ்ந்து நினைப்பதை பிரபஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதே அதன் நியதி.

அப்படி மனதால் படைக்கப் பட்டதே பிரபஞ்சம். ஆம் உங்கள் மனதால் வேண்டியதை படைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பிரபஞ்சத்தை படைத்த அந்த மாபெரும் சக்தியே நீங்கள்தான்.

வாழ்க்கை அற்புதமானது. அதை கொண்டாடுங்கள். அன்பு என்கிற விசைதான் அனைத்தையும் இயக்குகிறது.

உங்கள் வாழ்க்கையை வழக்கம் போல் நகர்த்தாமல் சற்று மாற்றி பாருங்கள், அனைத்தும் மாறும் இது சத்தியம்...

பணி நிரந்தரம் செய்வதற்கு? குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் செவிலியர்கள் பணியாற்ற வேண்டும் –அமைச்சர் விஜயபாஸ்கர்...