12/10/2018

பிராணயாமம் - (அட்டாங்க யோகம்)...


பிராணயாமம்...

ஐவருக்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்குங் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.  -- 564

பஞ்சேந்திரிய சக்திகளாகிய ஐந்து வர்ணங்களையுடைய ஒளிகளுக்கு நாயகனாகவும், அவைகளிருக்குமிடத்திற்கு முதலாகவுமுடைய மூலாக்கினியான தான் அதிகமாகப் பிரகாசிக்கப் பிடித்து ஏறும் குதிரையாகிய பிரணவம் ஒன்று உண்டு.  அது சத்தியமான ஞான சாதனையை யுடையவர்களுகுப் பிடி கொடுக்கும்.  மற்றவர்களாகிய பொய்யருக்குப் பிடிகொடாமல் போய் குதித்துத் தள்ளிவிடும்.

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை.
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந்தானே.  -- 565

ஆரியனாகிய அக்கினியானது மிகவும் நல்லது.  சூரியன் சந்திரன் என்னும் இரண்டு குதிரைகள் இருக்கின்றன (அவைகளை) பிரகாசிக்கச் செய்துப் பிடித்துக் கொள்ளும் உபாயத்தை அரியவர்கள் கிடையாது.  கூர்மையான அறிவையுடைய நாதனாகிய குருவின் அருளைப்பெற்றால் சேர்த்துப் பிடிக்க வசப்பட்டுவிடும்.

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.

திசைகளோடு கூடிய உலகமானது அடங்கியிருக்கும் பிரணவத்தினிடத்திலிருந்து சூரிய கலையைப் பதினாறு மாத்திரை யளவாக மேலேற்றுதல் பூரகம்.

வாமபாகத்திலுள்ள சந்திர கலையை முப்பத்திரண்டு மாத்திரையாக கல்ல வைத்தல் ரேசகம்.

பிரணவத்தின் நடுவீட்டில் சூரிய சந்திர கலைகளை அறுபத்திநாலு மாத்திரையளவு அசைவற்று நிறுத்தல் கும்பகம் ஆகும்.

பூரகம்:  பூரிப்பை அதாவது கலை (ஒளி) விரிவை செய்வது.

ரேசகம்: சூரிய கலையோடு, சந்திர கலையை ரேசிக்க அல்லது கலக்கும்படி செய்தல்.

கும்பகம்: பிரணவமாகிய கும்பத்தின் அகம்மென்னும் நடு வீட்டில் இரண்டு கலைகளையும் (சூரிய ஒளி, சந்திர ஒளி) சேர்த்தல்.

பிராணன் வேறு, பிராணனின் அசைவினால் ஏற்படும் வாயுவேறு.  வாசி என்பதைப் பாமரர்கள் மூக்கில் வரும் கழிவு பதார்த்தமாகிய வாயுவென்று உரை செய்வது அடாது.  அப்படி உரை செய்வதினாலே யோகமானது பாமரர்களால் அருவருக்கப்படுகிறது.

இம்மந்திரத்துக்கு மேற்கோளாக முன் ஔவையார் செய்த குரலின் சிவயோக நிலையில் முன்னமேரேசி முயலுபின் பூரகம் பின்னது கும்பம்பிடி.

முதலில் இரேசகதைச் செய்து பிறகு பூரகத்தைச் செய்து கடைசியில் கும்பத்தைச் செய்ய வேண்டுமென்பது கருத்து.

உலகத்தார்  நினைத்துக் கொண்டிருக்கும் கழிவு பதார்த்தமாகிய உஸ்வாச நிஸ்வாசத்தை இந்த முறையில் ஏலாதென்பதைக் கவனிக்கவும்.

பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே -- 577

பன்னிரண்டு கலையுள்ள சூரியனுக்கு பகலும், இரவும் இருக்கிறது.  அந்த சூரியனைப் பக்குவஞ் செய்யும் சாதகன் அறியவில்லையே.  அறிந்தபின் சூரியனுக்கு இரவும் பகலும் அற்றுவிடும்.

விளக்கம்:  பிராயணாயாமமாவது சத்தியம்சமாகிய பிராணனையும், சிவ அம்சமாகிய அபானனையும் பிரணவத்தின் மத்தியிலுள்ள விஷ்ணு ஸ்தானத்தில் சேர்த்து மேலெழுப்ப வொட்டாமல் தடுத்தலாகும்.

பிராணாபானனைத் தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் ஆசாரியன் மூலமாய்த் திருவடிகளைத் தரிசிக்க வேண்டிய தந்திரத்தை அறிந்து பிறகு அதன் மூலமாகச் சூரிய சந்திரர்களைக் கண்டு அவைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் உபாயத்தைச் செய்து அவை சேர்ந்தவுடன் எழும்பும் அக்கினியைக் கண்டு அதை மேலே நோக்கும்படி செய்தால் பிராணாபானனைக் காணக்கூடும்.

திருவடி என்பது எது என்பதை நமது  ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் மெய்ஞான உபதேசம் வாயிலாக எவ்வித ரகசியமுமின்றி உலக மக்கள் அறிய "திருவடி உபதேசம் " வீடியோவாக அளித்துள்ளார் கிளிக் செய்யவும்.

பிராணாபானனைச் சேர்க்கும் தந்திரம்...

பஞ்சேந்திரிய சத்திகளின் ஒளிகளுக்கு மூலகாரணமாக மூலாக்கினியானது அதிகமாய்ப் பிரகாசிக்கப் பிடித்து ஏறும்படியான பிரணவமாகிய குதிரையானது, உண்மையான யோக சாதனையை யுடைவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும்.

சூரியன், சந்திரன் என்னும் இரண்டு குதிரைகளையும் பிரகாசிக்கச் செய்யும் தந்திரத்தைச் செய்தால், அக்கினியின் பிரகாசதத்தைப் காணலாம்.

பட்சியைப் பார்க்கிலும் பறப்பதில் வல்லமையுடைய பிரணவத்தை மேலே கொண்டு போனால் தனக்குத்தானே ஆனந்தத்தைக் கொடுக்கும்.  அபானனை வெளிப்படுத்தி மேல்நோக்காகச் செலுத்தும்.  சோம்பலை ஒழித்துவிடும்.  பிராணனும் மனமும் விட்டுப் பிரியாமலழுந்திப் பிராணனிலுள்ள அசைவு நீங்கினால் பிறப்பு இறப்பு ஒழிந்து விடும்.  இதை விட்டுப் பிராணனுடைய நடையினால் ஏற்படும் பேசும் சத்தம் மாத்திரம் வெளிப்படுவதால் உண்டாகும் அற்பப் பெருமையையடைந்து உலகம் சந்தோஷிக்கின்றது.

திசைகளோடு கூடிய உலகம் அடங்கியிருக்கும் பிரணவத்திலிருந்து பிராணனாகிய சூரியகலையைப் பதினாறு  மாத்திரையளவாக மேலேற்றி மறுபடியும் பிரணவத்தின் மத்திய பாகத்தில் கொண்டு வந்து சேர்ப்பது பூரகமாகும்.

இடது பக்கத்திலுள்ள அபானனாகிய சந்திரகலையை முப்பத்திரண்டு மாத்திரையளவாக சூரியகலையோடு சேர்ப்பது இரேசகமாகும்.

இந்த இரண்டு கலைகளையும் பிரணவத்தின் மத்தியில் சேர்த்து அசைவற்றிருத்தல் கும்பகமாகும்.

பூரகம் பூரிப்பையுடையதாகும். 
இரேசகம் சூரியனோடு இரேசித்தலாகும்.
கும்பகம் பிரணவத்தின் மத்தியில் பிராணாபானனை லயிக்கச் செய்தலாகும். 

பிராணாபான வாயுக்களை இரேசக பூரக கும்பகாதிகளால் வாங்கிப் பிரணவத்தின் மத்தியில் பிரகாசிக்கும் வீட்டில் அடைத்து வைப்பதனால் முதியோனாகினும் இளையோனாய்ப் பளிங்குக் கல்லைப் போலாவான்.  மாத்திரைகள் அப்பியாசிகளுக்கு முதலில் உபயோகமானவை.

பார்வையை உபயோகப் படுத்துவதிலேயே எல்லா யோக தந்திரங்களும் அடங்கி இருக்கின்றன.  பார்வையைச் சூரியகலையினிடத்தில் நிறுத்தி, இடகலையினால் பூரகத்தைச் செய்ய, சூரியகலையானது அதிகப் பிரகாசத்தை அடையும்.  சங்குத்தொனி உண்டாகிற வரையில் சூரிய கலையைப் பார்வையோடு செலுத்திப் பூரகஞ் செய்ய வேண்டியது.

பிராணாபானன்களையும் பார்வையையும் மேல் ஏற்றுவதும் இறக்குவதுமாகிய வழியை அறிந்து கொள்பவர்கள் கிடையாது.  அறிந்து கொண்ட யோகிகளிடத்தில் எமனுக்கு வேலை கிடையாது.  பிரணவத்திற்கு மேல் பாகத்திலும், கீழ்பாகத்திலும், கலைகள் எழும்புவரை பூரித்து, லக்ஷ்மீகரம் பொருந்திய உந்திக்கமலத்தில், சூரிய கலைகள் ஆகிய இவைகள் சேரும்படி செய்தால் மாயையாகிய இருள் நீங்கப்பெற்று சிவத்தின் அருளை உடனே அடையலாம்.

பிங்கலையினால் சூரிய கலைகளைச் சந்திர கலைகளில் சேர்த்துப் பரவிமேலெழும்பும்படி பதினாறு மாத்திரை அளவு பூரிக்க வேண்டியது.  இடகலையினால் சந்திர கலைகளைச் சூரிய கலைகளில் கலக்கும்படி முப்பத்திரண்டு மாத்திரை அளவு இரேசிக்க வேண்டியது.  பிறகு இரு கலைகளும் பிரணவ பீடமாகிய உந்திக் கமலத்தில் சேரும்படி அறுபத்தினாலு மாத்திரை அளவாகக் கும்பிக்க வேண்டியது.

இவ்விதமாக எல்லாத் கலைகளும் சேர்ந்த உந்திக் கமலமானது கலைக் குறைவை அடையாதபடி சந்திரனால் அதிகமாக இரேசிக்க இடா, பிங்கலா, சுழிமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, அலம்புடை, புருடன், குரு, சங்கினி ஆகிய இந்த தசவித நாடிகளும் கனத்தை அடைந்துவிடும்.  அப்போது பிராணாபான வாயுக்கள் பிரணவ உச்சிக்குச் சென்று  பரிசுத்தமாகும்.  இதனால் தேகம் சிவந்த நிறத்தை யடைவதோடு சிவம் தேகத்தை விட்டுப் பிரியாது.  மேலும் ஐந்து இந்திரிய சத்திகளும் நக்ஷத்திர கலைகளுஞ் சேர்ந்து ஆக ஒன்பது கலைகளாகிய சத்திகளும் (நவசக்தி) பிரணவமாகிய வீட்டை ஏற்படுத்தி அதில் வகிப்பதற்காக ஓடிவரும்.  மறுபடியும் திரும்பிவிடும்.

இப்படி பலதடவைகளில் ஓடிவருவதும் திரும்பிப் போவதுமாயிருக்கும் சமயத்தில் பார்வையைத் தந்திரமாக மேல் நோக்கினால் எல்லாம் ஒன்று சேரும்.  அப்போது பன்னிரண்டு அங்குள அளவிற்குமேல் சென்று சாதகன் எட்டு அங்குல நீளத்தில்தன் பார்வையின் தந்திரத்தால் துண்டித்துப் பிரித்து விட்டால் அந்த நாளு விரற்கடை நீளமுள்ள கலைகள் ஒன்று சேர்ந்து பஞ்சாக்ஷர சொரூபமாக விளங்கி நிற்கும்.

இந்தப் பிராணாயாம அப்பியாசத்தினால் சூரிய சந்திர அக்கினிகளையும் பிரணவத்தையும் தரிசித்துப் பிரணவத்தின் மத்தியிலுள்ள உந்திக் கமலத்தையும் திறந்து விடலாம்.

உந்திக்கமலமே மௌன பீடமாகவும், நாபிக் கமலமாகவும், இருதய குகையாகவுமிருந்து திறக்கப்பட்டவுடனே ஞானச் செல்வங்கள் வெளிப்பட்டு விடும்...

பாஜக மோடியின் சாதனைகள்...


பெங்களூரில் சோழர் கோவில்கள்..


வெங்கலூர் (பெங்களூர்) மற்றும் அதைச் சுற்றிலும் சோழர் கட்டிய கோவில்கள் பல உள்ளன.

பழைய பெயர்கள் மறைந்து விட்டன. தற்போதைய பெயரையே தருகிறேன்..

எட்கர் தர்ஸ்டன் எழுதிய 'castes and tribes of india' volume-5' ல் கி.பி ஒன்றிலிருந்து 1024ல் சோழர்கள் பெங்களூரைக் கைப்பற்றும் வரையான காலத்தில் பெங்களூரை ஆண்ட மன்னர்கள் பற்றி கூறியுள்ளார்.

'கொங்குதேச ராஜாக்கள்' (Kongu chronicle) இதற்கான குறிப்புகளை வழங்கியுள்ளது.

பெங்களூரில் மரதஹல்லி (marathahalli)ல் உள்ள சோமேஸ்வர ஆலயத்தில் 1304ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு உள்ளது.

இதில் இப்பகுதியின் பழைய பெயர் நெற்குந்தி (nerkundi)என்று குறிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பெங்களூரின் அகரா (agara) பகுதியில் உள்ள 1200 ஆண்டுகள் பழமையான மற்றொரு சோமேஸ்வரசுவாமி கோயிலும் சோழர்கள் கட்டியதே.

பெங்களூரின் வசந்தபுரத்தில் 'வசந்த வல்லபரயர்' ஆலயமும் சோழர்காலத்தில் கட்டப்பட்டதே.

பெங்களூரின் நாகரத்பேட் (nagarathpet)ல் உள்ள 800ஆண்டுகள் பழமையான காளிகாம்பாள்- காமதேஸ்வரர் கோயிலும் சோழர் காலத்தைச் சேர்ந்தது.

பெங்களூர் புறநகரில் உள்ள ஹொஸ்கோட் (hoskote) தாலுகாவில் கோண்ட்ரஹல்லி (kondrahalli)ல் உள்ள தர்மேஸ்வரர் ஆலயம் 1065ல் சோழர்களால் கட்டப்பட்டது.

பெங்களூரில்  அனேகல் (anekal) தாலுகாவில் ஹுஸ்கூர் (huskur)ல் மதுரம்மன் ஆலயம் உள்ளது.

இதுவும் 11ம் நூற்றாண்டில் சோழர்கள் கட்டிய கோவில் ஆகும்.

பெங்களூர் அருகே ஹெப்பல் (hebbal) எனுமிடத்தில் உள்ள ஆனந்தகிரி குன்றுகளில் உள்ள 'ஆனந்த லிங்கேஸ்வரர்' கோவில் சோழர்கள் கட்டடக்கலையில் அமைந்துள்ளது. கட்டியது யாரென்று ஆராயப்படவேண்டும்.

இதேபோல பெங்களூர் நகருக்குள் மற்றொரு மதிவாலா சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது.

இதையும் சோழர்களே கட்டியுள்ளனர்.

இதில் 1247 மற்றும் 1365ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.

பெங்களூரின் காங்கேரி (kangeri)ல் ஈஸ்வரர் ஆலயம் ஒன்று உள்ளது. இதுவும் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது.

இது போக முக்கியமானவை,

1)பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்
இக்கோவில் பெங்களூரில் பேகூர்(Begur, Bangalore) என்ற இடத்தில் உள்ளது.

இவ்வூரின் பழைய பெயர் வெப்பூர் ஆகும்.

தமிழ் கல்வெட்டுகள் கொண்டது.

1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

நாகேஸ்வரர் கோவில் என்று தற்போது அழைக்கப்படுகிறது.

வெவ்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட ஐந்து லிங்கங்கள் உள்ளன. அதில் ஒன்று சோழேஸ்வரர் என்று பெயர்பெற்றுள்ளது.

2) சொக்கப்பெருமாள் ஆலயம்
பெங்களூரில் உள்ள தொம்லூர் (Domlur) என்ற இடத்தில் உள்ளது.

10ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.

இதன் பழைய பெயர் தொம்பலூர் அல்லது தேசிமாணிக்கப் பட்டணம் ஆகும்.

பெங்களூரை இலைப்பக்கநாடு என்றும் தென்கன்னடப் பகுதியை தடிகைப்பாடி என்றும் இக்கோவில் கல்வெட்டுகள் குறிக்கின்றன.

1258ஐச் சேர்ந்த ஒரு கல்வெட்டு ஆலால நம்பியார் என்பவர் பூசாரியான 'மணலி திரிபுரந்த ஆசாரியார்' என்பவருக்கு வழிபாட்டுக்கென வழங்கிய கொடையைக் கூறுகிறது.

1270ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் அழகியர் என்பவர் கதவுகள் அளித்தது பற்றியும் மற்றொன்று இக்கோவிலைக் கட்டிய தலைக்காடு பகுதியைச் சேர்ந்த 'திரிபுராந்தகன் செட்டியார்' மற்றும் அவரது மனைவி 'செட்டிச்சி பார்ப்பார்த்தி' ஜலப்பள்ளி மற்றும் விண்ணமங்கலம் குளம்  பகுதிகளை கொடையாக அளித்தது பற்றியும் கூறுகிறது.

(சான்று: epigraphica carnatica vol 9, insc of banglore, no 10&13 )

3) போகநாதீஸ்வரர் ஆலயம்
நந்திமலை அடிவாரத்தில் சிக்கபல்லப்பூர் (chikkaballapur) மாவட்டத்தில் உள்ள நந்தி கிராமத்தில் உள்ளது.

தமிழ் கல்வெட்டுகள் கோவில் சுவரில் காணப்படுகின்றன.

4) சோமேஸ்வரர் ஆலயம்
பெங்களூரில் உல்சூர் அல்லது ஹலசூரு என்ற இடத்தில் உள்ளது.

63நாயன்மார்களின் (தமிழர்கள்) சிலைகளும் உள்ளன.

5)கோலாரம்மன் ஆலயம்
கோலார் (kolar) நகரத்தில் அமைந்துள்ளது.

இதைக் கட்டியது ராஜேந்திர சோழன் ஆவான்.

முழுக்க முழுக்க தமிழ் கல்வெட்டுக்கள் நிறைந்துள்ளன.
(epigrapha carnatica vol 10  insc of kolar taluk)

6)முக்தி நாதேஸ்வரர் ஆலயம்
நீலமங்கல தாலுகாவில் பின்னமங்கலா (binnamangala) என்ற என்ற இடத்தில் உள்ளது.

குலோத்துங்க சோழன் காலத்தில் 1110ல் கட்டப்பட்டுள்ளது.

உடையான் ராஜராஜ குலோத்துங்கன் (எ) குலோத்துங்க சோழன் அதிமூர்க்க செங்கிராயன் எனும் பெயருடைய இப்பகுதியின் நிர்வாக அதிகாரியும் மன்னனும் ஆகிய சோழமன்னன்
விக்கிரம மண்டலத்தில் உள்ள குக்கனூர் நாட்டின் விண்ணமங்கலம் ஊரின் சுற்றியுள்ள நிலங்களை முத்தீஸ்வர உடைய மகாதேவருக்கு (இக்கோயில் கடவுள்) தேவதானமாக அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

(epigrapha carnatica vol 9 insc of nelamangala taluk, no:3)

7)சித்தேஸ்வரம் ஆலயம்
சோழதேவனஹல்லி  (soladevanahalli) எனும் இடத்தில் உள்ள முத்தரையஸ்வாமி கோவில் என்ற கோவில் உள்ளது.

ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

8)பிடாரி சாமுண்டேஸ்வரி ஆலயம்
இந்த கோவில் தற்போது காணக்கிடைக்கவில்லை.

நீலமங்கலா அருகே மைலானஹல்லி (mailanahalli) என்ற ஊரின் நுழைவாயிலில் இரண்டாம் அடுக்கில் தமிழ் கல்வெட்டு காணப்படுகிறது.

ராஜராஜசோழன் காலத்தையதான அதில் அப்பகுதி குக்கனூர்நாடு என்றறியப்பட்டதாகவும் அது விக்கிரமசோழ மண்டலத்திற்கு உட்பட்டிருந்ததாகவும் அறியக் கிடைக்கிறது.

மேலும், நீலமங்கலா தாலுகாவில்..

அ) மாதிகேரே (madikere)ல் உள்ள மாதேஸ்வரர் ஆலயம்,

ஆ)ஐங்கந்தபுரம் (ayinkandapura)ல் உள்ள கோபாலகிருஷ்ண ஆலயம்,

இ)சோலதேவன ஹல்லி தர்மேஸ்வர ஆலயம்,

ஈ) ஹெக்குண்டா (heggunda)ல் உள்ள மல்லிகார்ஜுன ஆலயம்,

தேவனஹல்லி தாலுகாவில் உள்ள..


அ) கங்கவாரா ஔடப்பன்ஹல்லி (gangavara chowdappanhalli)ல் சோமேஸ்வரர் ஆலயம்

ஹொஸ்கோட் தாலுகாவில் உள்ள
அ)கடுகோடி (kadugodi) காசி விஸ்வேஸ்வரர் ஆலயம்

சன்னபட்டண தாலுகாவில் உள்ள

அ)மல்லூர் பட்டண (malurpatana)ல் நாராயணஸ்வாமி ஆலயம் மற்றும்
அரக்கேஸ்வரர் ஆலயம்

ஆ)குட்லூர் (kudlur)ல் ராமதேவ ஆலயம் மற்றும் மங்கலேஸ்வரர் ஆலயம்

இ)சிக்கமலூர் (chikkamalur)ல்  அரக்கேஸ்வரர் ஆலயம், கோபாலஸ்வாமி ஆலயம், மற்றும் காளீஸ்வரர் ஆலயம்

ஈ)தொட்டமலூர் (doddamalur)ல் அப்ரனேயஸ்வாமி ஆலயம்

போன்றவையும் சோழர்காலத்தவையே..

ஆராய்ந்தால் நிறைய சான்றுகள் கிடைக்கும்...

இதயம், நுரையீரல் பிரச்னையில் தவித்த மாணவன் - பள்ளியே சேர்ந்து காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்...


பிறந்தது முதல் இதயம்,நுரையீரல் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி மூச்சு விடக்கூட சிரமபட்ட ஏழை மாணவனை அவன் படிக்கும் பள்ளியில் உள்ள அனைவரும் சேர்ந்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது அ.வெங்கிடாபுரம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகன் செபஸ்டியான் என்ற மாணவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த கிராமத்தில் உள்ள கூலித்தொழிலாளிகளான பிரான்சிஸ் - குழந்தை தெரஸ் தம்பதியின் இரண்டாவது மகன்தான் சுகன் செபஸ்டியான்.

சிறுவயது முதலே அவருக்கு நுரையீரல் மற்றும் இதயத்தில் பிரச்னை இருக்க மூச்சுவிட சிரம்பட்டு,சின்ன வேலையைக் கூட செய்ய முடியாமல் அவதியுற்று வந்திருக்கிறார்.

அவருக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதை அறிந்த பெற்றோர், பிறந்தபோதே டாக்டர்களிடம் காண்பித்திருக்கிறார்கள்.

ஒரு வயதிற்குள் அறுவைச் சிகிச்சை செய்யலன்னா பிரச்னைதான்' என்று சொல்லி இருக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், 'பல லட்சம் ரூபாய்க்கு எங்கே போவது' என்று மகனுக்கு அறுவைச் சிகிச்சை செய்யாமல் பத்து வயது வரை கடத்தி வந்திருக்கிறார்கள்.

இதனால், செபஸ்டியான் நிலைமை மோசமானது. அடிக்கடி மயங்கி விழுந்திருக்கிறார். இதனை அறிந்த அ.வெங்கிடாபுரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷாகுல்ஹமீது, செபஸ்டியானை காப்பாற்றியே தீருவது என்று களத்தில் இறங்கியிருக்கிறார்.

இதற்கிடையில்,செபஸ்டியானின் தந்தை பிரான்ஸிஸூக்கு சர்க்கரை வியாதி முற்றி, அவரது வலது காலை எடுக்க வேண்டிய நிலைமை.

அதன்பிறகு,நடந்தவற்றை தலைமை ஆசிரியர் ஷாகுல் ஹமீதே விளக்குகிறார்."அவங்க குடும்ப நிலைமையை பார்த்து மொத்த பள்ளிக்கூடத்துக்கும் கண் கலங்கிட்டு.

 'செபஸ்டியானை எப்படியாச்சும் காப்பாத்தனும்'ன்னு பள்ளி மாணவர்களே சபதம் எடுத்தாங்க. ஒரு டீச்சர் மாசம் மாசம் அவங்க குடும்ப உணவுக்கு உதவுனாங்க. நாங்க ஆசிரியர்களெல்லாம் கையில் கிடைச்சத போட்டோம்.

மாணவர்கள் அனைவரும் வீட்டுல கொடுக்கும் அஞ்சையும்,பத்தையும் இன்னும் சிலர் உண்டியல் காசை எல்லாம் கொண்டு வந்து கொட்டினாங்க. அதை வச்சு செபஸ்டியானுக்கு ஆபரேஷன் பண்ண செக்கப் செய்ய வைத்தோம்.

மருத்துவர்கள், 'ஆபரேஷன் பண்ண வேண்டிய கட்டத்தை பையன் தாண்டிட்டான். மோசமான நிலையில் இருக்கான். ஆபரேஷனில் 10 சதவிகிதமே நல்லது நடக்க சான்ஸ் இருக்கு'ன்னு அதிர்ச்சி கொடுத்தாங்க.

 சென்னை சூர்யா மருத்துவமனையில் தான் அறுவைச் சிகிச்சை நடந்தது. பல லட்சம் செலவாகுற ஆபரேஷன். செபஸ்டியானின் குடும்ப நிலைமையை பார்த்து, மருத்துவமனை நிர்வாகம் பணத்தைத் தாண்டி மனிதநேயத்தோடு ஆபரேஷனை செய்தார்கள். அங்கே உள்ள பல டாக்டர்கள் செபஸ்டியான் குடும்பத்திற்கு சாப்பாடு வாங்கி தர்றது, பஸ்ஸூக்கு காசு தர்றதுன்னு உதவுனாங்க.

ஆபரேஷன் முடிஞ்சாலும் பேச்சு மூச்சில்லாமல் 15 நாள்கள் ஐ.சி.யூவிலேயே இருந்தான். ஒட்டுமொத்த பள்ளியும் செபஸ்டியான் குணமாக வேண்டி தினமும் பிரேயர்ல பிரார்த்தனை செய்தோம்.

மருத்துவமனை மருத்துவர்களும் வேண்டிக்கிட்டாங்க. எல்லோருடைய வேண்டுதல் பலனாக கண் முழித்தான் செபஸ்டியான். அதை கேட்டதும் ஒட்டுமொத்த பள்ளியும் அழுதது. இப்போ மத்த மாணவர்கள்போல் நலமாகி வருகிறான்.

இவன் கடவுள் குழந்தை சார். இல்லைன்னா சாவை அதன் வாசலுக்கே போய் சந்திச்சுட்டு உயிரோடு திரும்பி வந்திருப்பானா? என்றார் நெக்குருகிபோய்..

இதில் யாரை வணங்குவது...?
இத்தனை சாமிகளா...?

சாதி வெறியன் பா. ரஞ்சித் படத்தில் நடிக்க நடிகர் அஜித் மறுப்பு...


திருட்டு திராவிடர்களின் சாதி வெறி கொலைகள்...


தெலுங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவ கொலை.. கலப்பு திருமணம் செய்தவர் படுகொலை...

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் தடிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (23). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சாயிதீபிகாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆகையால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். காதல் விவகாரத்தை அறிந்த மாணவி குடும்பத்தினர் குமாரை மிரட்டினர்.

மேலும் அவர் மீதும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் குமாரை மிரட்டி இனிமேல் மாணவியை பார்க்கவும், பேசவும் கூடாது என்று எச்சரித்து அனுப்பினார். அதன் பிறகு குமார் காதலியை பார்க்காமல் இருந்து வந்தார். அதன்பின் 6 மாதங்களுக்கு பிறகு குமார் சந்தித்து பேசினார்.

பிறகு எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். குமாரின் வீட்டில் இருவரும் வசித்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குமார் மாயமானார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக குமாரின் சடலம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடலைக் கண்டு காதவி மற்றும் பெற்றோர்கள் கதறி அழுதனர்.

இந்த கொலை தொடர்பாக மனைவி சாயிதீபிகா கூறுகையில் போலீசாரின் அலட்சியத்தால் தான் கொலை நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சாதி வெறி தொடர்பாக கொலை நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானாவில் தொடர்ந்து இதுபோன்ற ஆவணக்கொலை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது...

தமிழகத்தை அழிக்க துடிக்கும் பாஜக அடிமை அதிமுக ஊழல் எடப்பாடி...


கெடுவார்.....


நிட்டூர மாக நிதிதேடும் மன்னவனும்
இட்டதனை மெச்சா இரப்போனும் முட்டவே கூசிநிலை நில்லாக் குலக்கொடியும்
கூசிய வேசியும் கெட்டு விடும்.

பொருள்: அடாவடித்தனமாகப் பொருள் தேடும் மன்னவன், இட்டது எதுவாயினும் அதனை வாழ்த்தாத பிச்சைக்காரன், கூச்சப்படாத குலமகள் மற்றும் கூச்சப்படும் விலைமகள் ஆகியோர் வாழ்வு கெட்டுவிடும் என்கிறார் ஔவையார்...

"1964 மற்றும் 1968 க்கு இடையில் எகிப்து நாபியாவில் உள்ள அபு ஸிமல்பே கோவில்களின் இடமாற்றம்" நடந்த போது எடுத்த படம்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பண்டைய செர்பியாவில் "வின்ஸ்கா" கலாச்சாரத்தால் விட்டுச்சென்ற சிலைகள் நீண்ட காலமாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை குழப்பிக் கொண்டிருக்கின்றன.

விஞ்ஞான உலகத்தின் விளக்கங்கள் இதில் மாறுபடும். ஆனால் நம் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை நாம் தான் வெளிபடுத்த வேண்டும்: இந்த சிற்பங்கள் அனைத்து ஒரு வேற்றுகிரகவாசியின் இனத்தை விவரிக்கின்றன.

அதான் நாங்கள் அடிக்கடி கூறும். "ஊர்வனஇனம்"(Reptilians) சாயலிலேயே உள்ளது.

விசித்திரமான தலை வடிவம் மற்றும் ஊர்வன இனத்திற்கு உண்டான நிலைகுத்தான கண்கள். அகியவை ஊர்வன இனத்தினையே மனதில் கொண்டுவருகின்றன, மேலும் இந்த வகையான சிலைகள் தென்சீனப் பிராந்தியத்தில் பல இடங்களிலும் கண்டுபிடித்து உள்ளனர்.

வின்ஸ்கா கலாச்சாரம், டர்டா-வின்ஸ்கா கலாச்சாரம் என்றும் அழைக்கப்படுகிறது, தென்கிழக்கு ஐரோப்பியாவில் கி.மு5,700-4,500 கி.மு.காலத்திற்கு முற்பட்ட கலாச்சாரமாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் யூப்ரடிஸ் மற்றும் பண்டைய எகிப்தின் பெரும் பண்டைய நாகரிகங்களுக்கு முன்பாக, மிகவும் வளர்ந்த சமுதாயமாக வின்சா கலாச்சாரம் திகழ்ந்தது.

சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மர்மமான புராதன சமுதாயத்திற்கு கணக்கெடுப்பு நடத்தினர். செர்பிய பெல்கிரேட் நகரின் நிழலில் அவர்கள் பெரும் எண்ணிக்கையிலான அகழ்வாராய்ச்சியை நடத்தினர், அவர்கள் வியப்புக்குள்ளாக, சுற்றியுள்ள கலாச்சாரத்தின் கலைக்கு முற்றிலும் மாறுபட்ட 2,000 க்கும் அதிகமான அசாதாரண சிலைகளை கண்டெடுத்தனர்.

இந்த கதாபாத்திரங்கள் அதாவது விண்ணிலிருந்து வந்ததாக கருதப்படுகிற சிலைகள், முக்கோண முகங்கள், பல்லிகளின் கண்கள், மற்றும் ஒரு சிறிய வாய் மற்றும் மூக்கு. சில உருவங்கள் வெட்டுக்கிளிகளைப் போலவும், மற்றவர்கள் அரை-மனித, அரை ஊர்வன மனிதாபிமானத்தையும் சித்தரிக்கின்றன.

இந்த சிலைகளின் தோற்றம் ஆச்சரியமாக இருக்கிறது. பண்டைய இலக்கியம் மற்றும் கலை, வெளிநாட்டினர் பல விளக்கங்கள் அதே ஓவல் தலை, பெரிய பாதாம் கண்கள், சிறிய மூக்கு மற்றும் சிறிய வாய் இருந்தது. வின்சாவின் இந்த சிலைகள் வானத்திலிருந்து வந்த கடவுளர்களை விவரிக்கும் விதமானகாவே உள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர்.

வின்ஸ்காவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கு இந்த ஊர்வன இனங்களே உதவியிருக்க வேண்டும். மேலும் இந்த உயர்ந்த பழங்கால மக்கள் வேற்று கிரக வாழ்க்கைடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர். உலகில் உள்ள மற்ற கலாச்சாரங்களைப் போலவே இவர்களும் தங்கள் வளர்ச்சிக்கு உதவியர்களை, கடவுளின் வெளிப்பாடாகவே கொண்டு வணங்கியிருக்க வேண்டும். என்ற முடிவிற்கு வந்தனர்...