12/10/2018

பெங்களூரில் சோழர் கோவில்கள்..


வெங்கலூர் (பெங்களூர்) மற்றும் அதைச் சுற்றிலும் சோழர் கட்டிய கோவில்கள் பல உள்ளன.

பழைய பெயர்கள் மறைந்து விட்டன. தற்போதைய பெயரையே தருகிறேன்..

எட்கர் தர்ஸ்டன் எழுதிய 'castes and tribes of india' volume-5' ல் கி.பி ஒன்றிலிருந்து 1024ல் சோழர்கள் பெங்களூரைக் கைப்பற்றும் வரையான காலத்தில் பெங்களூரை ஆண்ட மன்னர்கள் பற்றி கூறியுள்ளார்.

'கொங்குதேச ராஜாக்கள்' (Kongu chronicle) இதற்கான குறிப்புகளை வழங்கியுள்ளது.

பெங்களூரில் மரதஹல்லி (marathahalli)ல் உள்ள சோமேஸ்வர ஆலயத்தில் 1304ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு உள்ளது.

இதில் இப்பகுதியின் பழைய பெயர் நெற்குந்தி (nerkundi)என்று குறிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பெங்களூரின் அகரா (agara) பகுதியில் உள்ள 1200 ஆண்டுகள் பழமையான மற்றொரு சோமேஸ்வரசுவாமி கோயிலும் சோழர்கள் கட்டியதே.

பெங்களூரின் வசந்தபுரத்தில் 'வசந்த வல்லபரயர்' ஆலயமும் சோழர்காலத்தில் கட்டப்பட்டதே.

பெங்களூரின் நாகரத்பேட் (nagarathpet)ல் உள்ள 800ஆண்டுகள் பழமையான காளிகாம்பாள்- காமதேஸ்வரர் கோயிலும் சோழர் காலத்தைச் சேர்ந்தது.

பெங்களூர் புறநகரில் உள்ள ஹொஸ்கோட் (hoskote) தாலுகாவில் கோண்ட்ரஹல்லி (kondrahalli)ல் உள்ள தர்மேஸ்வரர் ஆலயம் 1065ல் சோழர்களால் கட்டப்பட்டது.

பெங்களூரில்  அனேகல் (anekal) தாலுகாவில் ஹுஸ்கூர் (huskur)ல் மதுரம்மன் ஆலயம் உள்ளது.

இதுவும் 11ம் நூற்றாண்டில் சோழர்கள் கட்டிய கோவில் ஆகும்.

பெங்களூர் அருகே ஹெப்பல் (hebbal) எனுமிடத்தில் உள்ள ஆனந்தகிரி குன்றுகளில் உள்ள 'ஆனந்த லிங்கேஸ்வரர்' கோவில் சோழர்கள் கட்டடக்கலையில் அமைந்துள்ளது. கட்டியது யாரென்று ஆராயப்படவேண்டும்.

இதேபோல பெங்களூர் நகருக்குள் மற்றொரு மதிவாலா சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது.

இதையும் சோழர்களே கட்டியுள்ளனர்.

இதில் 1247 மற்றும் 1365ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.

பெங்களூரின் காங்கேரி (kangeri)ல் ஈஸ்வரர் ஆலயம் ஒன்று உள்ளது. இதுவும் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது.

இது போக முக்கியமானவை,

1)பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்
இக்கோவில் பெங்களூரில் பேகூர்(Begur, Bangalore) என்ற இடத்தில் உள்ளது.

இவ்வூரின் பழைய பெயர் வெப்பூர் ஆகும்.

தமிழ் கல்வெட்டுகள் கொண்டது.

1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

நாகேஸ்வரர் கோவில் என்று தற்போது அழைக்கப்படுகிறது.

வெவ்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட ஐந்து லிங்கங்கள் உள்ளன. அதில் ஒன்று சோழேஸ்வரர் என்று பெயர்பெற்றுள்ளது.

2) சொக்கப்பெருமாள் ஆலயம்
பெங்களூரில் உள்ள தொம்லூர் (Domlur) என்ற இடத்தில் உள்ளது.

10ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.

இதன் பழைய பெயர் தொம்பலூர் அல்லது தேசிமாணிக்கப் பட்டணம் ஆகும்.

பெங்களூரை இலைப்பக்கநாடு என்றும் தென்கன்னடப் பகுதியை தடிகைப்பாடி என்றும் இக்கோவில் கல்வெட்டுகள் குறிக்கின்றன.

1258ஐச் சேர்ந்த ஒரு கல்வெட்டு ஆலால நம்பியார் என்பவர் பூசாரியான 'மணலி திரிபுரந்த ஆசாரியார்' என்பவருக்கு வழிபாட்டுக்கென வழங்கிய கொடையைக் கூறுகிறது.

1270ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் அழகியர் என்பவர் கதவுகள் அளித்தது பற்றியும் மற்றொன்று இக்கோவிலைக் கட்டிய தலைக்காடு பகுதியைச் சேர்ந்த 'திரிபுராந்தகன் செட்டியார்' மற்றும் அவரது மனைவி 'செட்டிச்சி பார்ப்பார்த்தி' ஜலப்பள்ளி மற்றும் விண்ணமங்கலம் குளம்  பகுதிகளை கொடையாக அளித்தது பற்றியும் கூறுகிறது.

(சான்று: epigraphica carnatica vol 9, insc of banglore, no 10&13 )

3) போகநாதீஸ்வரர் ஆலயம்
நந்திமலை அடிவாரத்தில் சிக்கபல்லப்பூர் (chikkaballapur) மாவட்டத்தில் உள்ள நந்தி கிராமத்தில் உள்ளது.

தமிழ் கல்வெட்டுகள் கோவில் சுவரில் காணப்படுகின்றன.

4) சோமேஸ்வரர் ஆலயம்
பெங்களூரில் உல்சூர் அல்லது ஹலசூரு என்ற இடத்தில் உள்ளது.

63நாயன்மார்களின் (தமிழர்கள்) சிலைகளும் உள்ளன.

5)கோலாரம்மன் ஆலயம்
கோலார் (kolar) நகரத்தில் அமைந்துள்ளது.

இதைக் கட்டியது ராஜேந்திர சோழன் ஆவான்.

முழுக்க முழுக்க தமிழ் கல்வெட்டுக்கள் நிறைந்துள்ளன.
(epigrapha carnatica vol 10  insc of kolar taluk)

6)முக்தி நாதேஸ்வரர் ஆலயம்
நீலமங்கல தாலுகாவில் பின்னமங்கலா (binnamangala) என்ற என்ற இடத்தில் உள்ளது.

குலோத்துங்க சோழன் காலத்தில் 1110ல் கட்டப்பட்டுள்ளது.

உடையான் ராஜராஜ குலோத்துங்கன் (எ) குலோத்துங்க சோழன் அதிமூர்க்க செங்கிராயன் எனும் பெயருடைய இப்பகுதியின் நிர்வாக அதிகாரியும் மன்னனும் ஆகிய சோழமன்னன்
விக்கிரம மண்டலத்தில் உள்ள குக்கனூர் நாட்டின் விண்ணமங்கலம் ஊரின் சுற்றியுள்ள நிலங்களை முத்தீஸ்வர உடைய மகாதேவருக்கு (இக்கோயில் கடவுள்) தேவதானமாக அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

(epigrapha carnatica vol 9 insc of nelamangala taluk, no:3)

7)சித்தேஸ்வரம் ஆலயம்
சோழதேவனஹல்லி  (soladevanahalli) எனும் இடத்தில் உள்ள முத்தரையஸ்வாமி கோவில் என்ற கோவில் உள்ளது.

ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

8)பிடாரி சாமுண்டேஸ்வரி ஆலயம்
இந்த கோவில் தற்போது காணக்கிடைக்கவில்லை.

நீலமங்கலா அருகே மைலானஹல்லி (mailanahalli) என்ற ஊரின் நுழைவாயிலில் இரண்டாம் அடுக்கில் தமிழ் கல்வெட்டு காணப்படுகிறது.

ராஜராஜசோழன் காலத்தையதான அதில் அப்பகுதி குக்கனூர்நாடு என்றறியப்பட்டதாகவும் அது விக்கிரமசோழ மண்டலத்திற்கு உட்பட்டிருந்ததாகவும் அறியக் கிடைக்கிறது.

மேலும், நீலமங்கலா தாலுகாவில்..

அ) மாதிகேரே (madikere)ல் உள்ள மாதேஸ்வரர் ஆலயம்,

ஆ)ஐங்கந்தபுரம் (ayinkandapura)ல் உள்ள கோபாலகிருஷ்ண ஆலயம்,

இ)சோலதேவன ஹல்லி தர்மேஸ்வர ஆலயம்,

ஈ) ஹெக்குண்டா (heggunda)ல் உள்ள மல்லிகார்ஜுன ஆலயம்,

தேவனஹல்லி தாலுகாவில் உள்ள..


அ) கங்கவாரா ஔடப்பன்ஹல்லி (gangavara chowdappanhalli)ல் சோமேஸ்வரர் ஆலயம்

ஹொஸ்கோட் தாலுகாவில் உள்ள
அ)கடுகோடி (kadugodi) காசி விஸ்வேஸ்வரர் ஆலயம்

சன்னபட்டண தாலுகாவில் உள்ள

அ)மல்லூர் பட்டண (malurpatana)ல் நாராயணஸ்வாமி ஆலயம் மற்றும்
அரக்கேஸ்வரர் ஆலயம்

ஆ)குட்லூர் (kudlur)ல் ராமதேவ ஆலயம் மற்றும் மங்கலேஸ்வரர் ஆலயம்

இ)சிக்கமலூர் (chikkamalur)ல்  அரக்கேஸ்வரர் ஆலயம், கோபாலஸ்வாமி ஆலயம், மற்றும் காளீஸ்வரர் ஆலயம்

ஈ)தொட்டமலூர் (doddamalur)ல் அப்ரனேயஸ்வாமி ஆலயம்

போன்றவையும் சோழர்காலத்தவையே..

ஆராய்ந்தால் நிறைய சான்றுகள் கிடைக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.