12/10/2018

திராவிட வந்தேறிகளும் ஒழுக்கமும்...


திராவிட பயல்கள் பார்ப்பனர் மீது போட்ட பழியெல்லாம் வந்தேறிகள் செய்து வந்தவை..

இதற்கு சிறந்த உதாரணம் ஈ.வே.ரா மணியம்மை திருமணம்.

1928இல் வயது பொருந்தாத திருமணம் கூடாது என ஈ.வே.ரா கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்,

மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும்,
பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்து விட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்
(குடியரசு 03-06-1928)

1940 இல் அண்ணாதுரை எழுதிய "தாத்தா கட்ட இருந்த தாலி" எனும் கதை வயது பொருத்தமில்லாத திருமணம் பற்றியது.

அதில் ஒரு வயதான பார்ப்பனர் இளம் கன்னியைத் திருமணம் செய்வதுபோல எழுதியிருப்பார்.

ஆனால் அதன்பிறகு ஈ.வே.ரா 72 வயதில் 26 வயதான மணியம்மையை அதாவது வளர்ப்பு மகளையே திருமணம் செய்தார்.

இதை எதிர்த்து அண்ணாதுரை கட்சியை விட்டு வெளியேறினார்.
ஈ.வே.ராமசாமியை விமர்சித்து கீழ்க்கண்டவாறு எழுதினார்.

'அப்பா! அப்பா!' என்று அம்மை  மனம் குளிர, வாய் குளிர,
கேட்போர் காது குளிரக் கூறவும்;
'அம்மா! அம்மா!' என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும்;
இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.
அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார்.
(திராவிட நாடு 03.07.1949)

இதைவைத்து அண்ணாதுரை ஒழுக்கமானவர் மானமுள்ளவர் என்ற முடிவுக்கு வரவேண்டாம்.
அண்ணாதுரை இதைவிடவும் கேவலமான பின்னணி கொண்டவர்.

அண்ணாதுரை பற்றி பாரதிதாசன் எழுதியது வருமாறு,

அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை.
அன்னையோ சென்னையில் ஐயரோடு.
(குயில் 30.09.1958)

காஞ்சிபுரம் வாராகி தெரு என்பது தேவதாசிகள் வரும் தெரு ஆகும்.
அங்கே நய்யாண்டி ஐயர் என்பவரது வைப்பாட்டி பங்காரு அம்மாள் என்கிற தேவதாசிக்கு பிறந்தவரே அண்ணதுரை.

அண்ணாதுரை பிரிந்து சென்றபோது ஈவேரா அளித்த விளக்கத்தில் பிரிந்துபோனவர்கள் ஒரே சாதி என்றும் குற்றம்சாட்டினார். (ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி 1, பக்கம் 249-250).

ஆம். தேவதாசி சாதிகளான மேளக்கார (பிற்காலத்தில் இசைவேளாளர் என்று மாற்றிக்கொண்டனர்) சாதியைச் சேர்ந்த அண்ணாதுரை, மூவலூர் ராமாமிர்தம், கருணாநிதி ஆகியோர் பிரிந்து தொடங்கியதே தி.மு.க.

ஆக பிராமண ஆதிக்கத், உயர்சாதி வெறி, நிலவுடைமை ஆதிக்கம், விபச்சாரம், பெண்ணடிமை, ஒழுக்கமின்மை, தமிழர் வெறுப்பு என வந்தேறிகள் தாம் செய்து வந்த அனைத்தையும் பார்ப்பனத் தமிழர் மீது போட்டு அதை இவர்கள் எதிர்ப்பது போல நடித்து வந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.