20/08/2017

இது குஜராத் நிலவரம்...


மாவட்ட ஆட்சியர்: ஒரு மாட்டுக்கு இருநூறு தருகிறேன் செத்த பசுமாடுகளை அப்புறப்படுத்துங்கள்.

தலித் மக்கள்: நாங்கள் ஐநூறு தருகிறோம். அதிகாரிகளை அப்புறப்படுத்தச் சொல்லுங்கள்.

ஆட்சியர்: என்ன சொல்றீங்க?

தலித் மக்கள்: பசுவை தாய்னு சொல்றவங்களைக் கூப்பிடுங்க அவங்க தாயை அவங்களே புதைக்கட்டும்...

நம்ப முடியாத மருத்துவத்துறை உண்மைகள்...


அதிமுக கலாட்டா...


காவல் துறையினர் பொதுமக்களை அடித்தால் எந்த சட்டத்தில் வழக்கு தொடரலாம்..?


பாஜக மோடியால் உண்டான கேன்சர் கட்டி இந்த எடப்பாடி அரசு...


தமிழகத்தை சாய்க்குமுன் வெட்டி எறிய வேண்டும் அதனை..

தமிழக மக்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு                                             தமிழக வாழ்வுரிமைக் கட்சி அழைப்பு..

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன்அவர்கள் இன்று 19.08.2017 விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:.......

தமிழக மக்களின் உணர்வுக்கும் விருப்பத்துக்கும் மாறாக, அவர்கள் நிராகரித்த மோடியின் உணர்வுக்கும் விருப்பத்துக்கும் ஏற்பவே நடக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி.

உணவு, கல்வி, விவசாயம். மின்சாரம் என அடிப்படை வாழ்வியல் நல உரிமைகள் அனைத்தையும் நடுவண் பாஜக மோடி அரசுக்குப் பலியிட்டிருக்கிறார்.

அந்த வகையில் இப்போது தமிழகத்தின் உயிர்-நீர் ஆதாரமான காவிரிக்கும் முடிவுரை எழுதுகிறார்.

தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்கள் தொடர்பான பிரச்சனையில் எடப்பாடி அரசின் வழக்குரைஞர் சேகர் நாப்தே தமிழகத்துக்கு எதிரான, விரோதமான, துரோகமான வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்திருக்கிரார்.

காவிரி இறுதித் தீர்ப்பு தொடர்பான நான்கு மாநிலங்களின் மேல் முறையீட்டு விசாரணை கடந்த 17ந் தேதியன்று தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வின் முன் நடைபெற்றது.

அப்போது “தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரைத் தேக்கி வைக்கவே மேகதாதுவில் புதிய அணை” என வஞ்சதந்திரத்துடன் வாதிட்டது கர்நாடகம்.

கர்நாடகத்தின் இந்த வாதத்தை தமிழகம் ஏற்கலாம்தானே என்று நீதிபதிகள் சொல்ல; அதை எதிர்க்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டார் தமிழக அரசின் வழக்குரைஞர்.

தமிழகத்துக்கு தண்ணீர் தர தடையில்லையென்றால் மேகதாதுவில் புதிய அணை கட்டவும் தமிழகம் எதிர்க்காது என்றார் தமிழக வழக்குரைஞர்.

அதோடு புதிய அணையைக் கண்காணிக்க சிறப்பு ஆணையம் ஒன்றையும் அமைக்க வேண்டும் என்றார்.

தமிழக அரசு வழக்குரைஞர் சேகர் நாப்தேவின் இந்தக் கருத்துக்கள் தமிழகத்திற்கு எதிரானவை; காவிரி பிரச்சனை வழக்கில் தமிழக அரசு கொண்டிருக்கும் நிலைப்பாட்டிற்கும் எதிரானவை.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர்ப் பகிர்வு ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரு அமைப்புகளையும் சட்டப்படி நடுவண் அரசு அமைத்தாக வேண்டும் என்பதுதான் இறுதியும் அறுதியும் உறுதியுமான நிலை.

இந்த நிலையை சீர்குலைத்து காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்றுக் குழு, ஏன், நடுவர் மன்றத்தையேகூட ஒழித்துக்கட்ட முனைகிறது மோடி அரசு.

மோடி அரசின் இந்த வஞ்சகத் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக வழக்குரைஞர் வாதிட்டிருக்கிறார்.

மேகதாதுவில் அணை கட்டுவது, மாநிலங்களுக்கிடையிலான தேசிய நதிநீர்த் தாவா சட்டப்படி மாத்திரமல்ல; நாடு விட்டு நாடு பாயும் நதிகள் குறித்த பன்னாட்டளவிலான சட்டப்படியும் கூடாது என்பது சட்டம் படித்த தமிழக வழக்குரைஞருக்குத் தெரியாதா என்ன?

இப்படி அவர் வாதிட்டிருப்பது தான்தோன்றித்தனமாகவா அல்லது பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் சொல்லித்தானா என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

எப்படி இருந்தாலும் தமிழக அரசின் நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தில் பதிவாகிவிட்டிருக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமிதான் முழு பொறுப்பு.

இதற்கு முன்னர் தமிழகத்தின் நல-உரிமை தொடர்பான விடயங்களில் மோடியின் உணர்வுக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப நடந்து கொண்டபடியே காவிரி பிரச்சனையிலும் முடிவுரை எழுதியிருக்கிறார் எடப்பாடி என குற்றம் சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

நோய் வந்தால் உடல்நலம் கெடும்; செயல்பாடு முடங்கும். தமிழகத்திற்கு வந்திருப்பதோ புற்றுநோய்; உயிர் குடிக்கும் நோய்; மோடியால் உண்டான “கேன்சர் கட்டி”; எடப்பாடி அரசு எனும் கேன்சர் கட்டி!

இந்த கேன்சர் கட்டி தமிழகத்தின் உயிரைக் குடிக்குமுன் அதனை வெட்டி எறிந்தாக வேண்டும்.

அதற்காக தமிழக மக்கள், கட்சிகள், அமைப்புகள் ஓரணியில் திரள வேண்டும் என அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி...

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் ஊர் மக்களிடம் முன்னாள் முதலமைச்சர் ஒபிஸ் க்கு சொந்தமான கிணறு மற்றும் 18 செண்ட் நிலம் தானமாக வழங்கப்பட்டது...


அமானுஷ்யம் - லிங்கனும் கென்னடியும்...


அமெரிக்க ஜனாதிபதி லிங்கனின் வாழ்க்கைக்கும், மற்றொரு ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியின் வாழ்க்கைக்கும் இடையே நிறைய ஒப்புமைகள் உள்ளன. நம்ப முடியாத நிஜங்களாக உள்ள அவற்றைப் பற்றிய தகவல்கள் கீழே…

ஆப்ரஹாம் லிங்கன்...

ஆப்ரஹாம் லிங்கன் காங்கிரஸ் மகா சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது 1846.
ஜான் எஃப் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டது 1946.

லிங்கன் துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1856.
ஜான் எஃப் கென்னடி துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1956.

லிங்கன் ஜனாதிபதி ஆனது 1860.
ஜான் எஃப் கென்னடி ஜனாதிபதி ஆனது 1960.

ஜான் எஃப். கென்னடி...

லிங்கன் தோற்கடித்த ஸ்டீபன் டக்லாஸ் பிறந்தது 1813.
கென்னடி தோற்கடித்த ரிச்சர்ட் நிக்ஸன் பிறந்தது 1913.

லிங்கன், கென்னடி இருவருமே சிவில் விவகாரங்களில் தொடர்பு கொண்டிருந்தனர்.

இருவரது மனைவிகளுமே வெள்ளை மாளிகையில் வசித்தபோது குழந்தையைத் தொலைத்தனர்.

இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு வெள்ளிக் கிழமையில்.

இருவருக்குமே காயம் பட்டது தலைப் பகுதியில்.

லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி
கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.

இருவருமே கொல்லப்பட்டது அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால்.

இருவருமே தோற்கடிக்கப்பட்டது அதே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால் தான்.

இருவருடைய துணைத் தலைவரது பெயரும் ஜான்ஸன் என்பது தான். லிங்கனின் துணைத் தலைவர் பெயர் ஆண்ட்ரூ ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1847. லிங்கனை வென்ற அவர் பிறந்தது 1808.

கென்னடியின் துணைத் தலைவர் பெயர் லிண்டன் ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1947. கென்னடியை வென்ற அவர் பிறந்தது 1908.

லிங்கனைக் கொன்ற ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1838ல்.
கென்னடியைக் கொன்ற லே ஹார்வி ஒஸ்வால்ட் பிறந்தது 1939ல்.

கொலையாளிகள் இருவரும் மூன்று விதமான பெயரில் அழைக்கப்பட்டார்கள்.

லிங்கனைக் கொன்றவர் ஜான் என்றும், வில்க்ஸ் என்றும், பூத் என்றும் மூன்று வகையாக நண்பர்களால், உறவினர்களால், தங்கள் அதிகாரிகளால் அழைக்கப்பட்டார்.

அதுபோல கென்னடியைக் கொன்றவர் லே என்றும், ஹார்வி என்றும், ஒஸ்வால்ட் என்றும் அழைக்கப்பட்டார்.

இருவருடைய பெயரிலும் மொத்தம் 15 எழுத்துக்கள் இருந்தன.

லிங்கன் கொல்லப்பட்ட தியேட்டரின் பெயர் ஃபோர்ட்.
கென்னடி கொல்லப்பட்டது லிங்கன் என்ற பெயர் கொண்ட ஃபோர்ட்’ தயாரித்த காரில்.

லிங்கனைக் கொன்ற ஜான் தியேட்டரிலிருந்து தப்பி ஓடி ஒரு கிடங்கில் பிடிபட்டான்.
கென்னடியைக் கொன்ற ஒஸ்வால்ட் ஒரு கிடங்கிலிருந்து தப்பி ஓடி தியேட்டரில் பிடிபட்டான்.

பூத் மற்றும் ஓஸ்வால்ட் இருவருமே தங்கள் தண்டனையை அனுபவிக்கும் முன்னரே கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

இல்லை.. இல்லை.. இதெல்லாம் தற்செயல் தான் என்கிறீர்களா?

ஓரிரண்டு விஷயங்கள் வேண்டுமானால் தற்செயலாக இருக்கலாம். இவ்வளவு விஷயங்களும் தற்செயலாக இருக்குமா என்ன?

தோழர் பெ. மணியரசன் அவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்...


காவிரியின் குறுக்கே அணை கட்ட கன்னடனுக்கு பச்சைக்கொடி காட்டி மண்டியிட்ட தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே காவிரிப்படுகையில் கால் வைக்காதே திரும்பி போ என கருப்புக் கொடி காட்டிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்...

இம்பூட்டு தான் தெலுங்கன் விசால் ரெட்டி நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களை காக்கும் வீதம்...


படிக்காத ஏழை விஞ்ஞானி, வறுமையின் பிடியில்...


தனது கண்டு பிடிப்புக்காக டெல்லி செல்ல வழியின்றித் தவிக்கும் மதுரை விஞ்ஞானி அப்துல் ரசாக், உதவும் உள்ளங்களே; இவருக்கும் கொஞ்சம் உதவுங்களேன்...
   
தண்ணியிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் கருவியைக் கண்டு பிடித்த மதுரை விஞ்ஞானி அப்துல் ரசாக்குக்கு அழைப்பு வந்தும் பண வசதி இல்லாததால் தில்லிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

தண்ணீரிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் கருவியைக் கண்டு பிடித்த மதுரை விஞ்ஞானி அப்துல் ரசாக், அதனை விஞ்ஞானிகள் முன்பு செய்து காட்ட தில்லியிலிருந்து அழைப்பு வந்தும் பண வசதி காரணமாக செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

மின் விசிறியிலிருந்து குக்கர் வரை மக்களின் வசதிக்கு ஏற்றாற்போன்று உருவாக்கி வைத்திருக்கிறார். ஒற்றை மோட்டாரில் இரண்டு பக்கமும் பொருத்தப்பட்ட மின்விசிறியைக் கண்டு பிடித்துள்ளார்.

இதுபோன்று 45 பொருட்களைக் கண்டு பிடித்து காப்புரிமை பெற்றுள்ளார். தனது மனைவியின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு உருவாக்கிய ரைஸ் குக்கர்தான் இவரது முதல் படைப்பு.

கடலில் கொட்டும் எண்ணெயை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை அண்மையில் உருவாக்கியுள்ளதுதான் அவரின் கண்டு பிடிப்பிலெல்லாம் மிக மையமானது.

வெறும் 7ஆம் வகுப்பே படித்துள்ள அப்துல் ரசாக், 'சென்னை துறைமுகத்துல ரெண்டு கப்பல் மோதி கொட்டிய எண்ணெயால அந்தப் பகுதி சுற்றுச்சூழலே ரொம்ப பாதிக்கப்பட்டிருச்சி... அதைவிட அதை அள்ளுறதுக்கு வாளிய பயன்படுத்துனது தான் எனக்குள்ள ஒரு தாக்கத்த ஏற்படுத்திருச்சு... அந்த வேகத்துல உருவாக்குனதுதான் சார் இந்த மிஷின்' என்கிறார்.

தனது நண்பர் கிருஷ்ணபிரசாத் செய்த பண உதவியால் இச்சிறு மாடல் கருவியை உருவாக்கியிருக்கிறார். பண வசதியின் பொருட்டு கருவியின் அளவை பெரிதாக்கலாம் என்கிற ரசாக். அது செயல்படும் விதத்தை நமக்கு டெமோ-வாகக் காட்டுகிறார்.

'இக்கருவியின் மூலம் 90 சதவிகித எண்ணெய் பிரிப்பு பணியைச் செய்துவிடலாம் என்றும் மிச்சம் மீதியுள்ள எண்ணெய்ப்படலத்தை மற்றொரு கருவியின் துணை கொண்டு முற்றிலுமாக நீக்கிடவிட முடியும்' என்று கூறும் ரசாக்கை, புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசிய அறக்கட்டளை தில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அப்துல் ரசாக் கண்டுபிடித்துள்ள எண்ணெய் பிரிக்கும் இயந்திரத்தின் முழு மாடலோடு, வருகை, விஞ்ஞானிகள் மத்தியில் அதனை டெமோ செய்து காட்ட அழைப்புவிடுத்துள்ளது. 'இந்த இயந்திரத்தை அதன் முழு வடிவத்தோடு, தயாரிப்புச் செய்ய குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் செலவாகும். அது போக தில்லி செல்வதற்கான செலவுகள் என ஒரு லட்சத்திற்கும் மேல் தேவைப்படுகிறது' என்கிறார்.

கண்டுபிடிப்புச் செய்வதை மட்டுமே தனது வேலையாகக் கொண்ட அப்துல் ரசாக்கிற்கு, தில்லி செல்வதற்கான செலவுகள் அவருக்குள் மலைப்பை ஏற்படுத்திவிட்டது. இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையீடு செய்துள்ளார். அவர், இவரது கோரிக்கை மனுவை ஏற்று அம்மனுவை மதுரை மாவட்ட தொழில் மையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். அந்நிறுவனம் இவரது வயது மற்றும் கல்வித்தகுதியைக் காரணம் காட்டி கடனுதவியையும் மறுத்துள்ளது.

'இக்கருவிக்கான அங்கீகாரத்தை இந்திய அரசாங்கம் வழங்கியதும் இதனை நாட்டுக்காக அர்ப்பணிக்கவே விரும்புகிறேன்' என்கிறார் ரசாக் ., மூன்று வயதில் தாயை இழந்தவர். அப்போதிருந்தே தனியாகவே வாழ்ந்து இது போன்ற கண்டுபிடிப்புகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

தில்லியில் விஞ்ஞானிகள் முன்பு தனது கண்டுபிடிப்பு குறித்த சோதனையை நடத்திக் காட்டத் தயாராக இருக்கும் இந்த படிக்காத விஞ்ஞானியின் இன்றைய பரிதவிப்புக்கு, தமிழ் கூறு நல்லுலகம் எவ்வாறு கடமையாற்றப்போகிறது?

தொடர்பு எண்: 9894905268...